Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Thursday, January 2, 2014

Is Depreciation an Operating Expense

Operating expenses are those expenses which are necessary for operation of business. For example, we have retail business. For buying the goods on wholesale, we have to pay the travel cost. We have to pay electricity bill. We have to pay property tax. If we are doing small advertising, we have to pay for this. Like this, there are lots of expenses which we have to pay if we have to operate our retail business.

Now, we have to decide whether depreciation is our operating expense or not. Depreciation is the decrease in the value of any fixed asset. If we use these assets for the operation of business, value of fixed asset will decrease. The measurement of this decrease is depreciation. So, depreciation is our operating expenses because it is totally association for operation of business. We normally say, by using in the business our building depreciates 10%, furniture 15% and vehicle 20%. Income tax law also accepted it as operating expense but its rates are different for measuring annual depreciation. If we have to take the depreciation deduction, we have to deduct it from our total incomes as per the rates of law.

Some person may argue that we do not pay this expense. We can explain them that we have already bought the fixed asset which is our capital expenditure not operating expenditure and which we have bought by paying money. But when we will use it, it will convert into operating expenses. All the Fixed assets's value (except land) will decrease when we will use them for operation of business.  

Importance of Fund Flow Analysis

Fund flow analysis is important tool of financial analysis. It is also significant for financial management. Today, financial analysts, credit providing agencies and financial managers use it at large scale. Fund flow analysis's main aim is to check the changes in fund andworking capital between two financial periods. Fund flow analysis is  also helpful for making projected funds flow statement and make the better plan for needed fund.

With following advantages of fund flow analysis, we can find the importance of fund flow analysis.


1. It helps in the analysis of financial positions

We know the financial statement shows the net effect of all the transactions on the financial position of company. Balance sheet is also only show the picture of our current financial position on a specific date. But these financial statement does not show the reasons of differences in the assets and liabilities between two financial period. In fund flow analysis, we make the fund flow statement for knowing the reasons of changing in the assets and liabilities. Sometime, we have good financial performance but we have using our fund in bad area. All these reasons can come only analysis of fund flow statement.

2. It throws light on perplexing questions

Fund flow analysis does not only throw the light on perplexing questions but it helps us to solve such questions. These questions are :

a) Why are our net current assets decreasing even after obtaining higher profit?

b) Why did we not issue the dividend when we have high profit level?

c) What happened with our net profit, whether did it go?

d) What happened the money which we have obtained after sales of shares, debentures and other fixed assets?

e) What are the main resources of redemption of debts?


3. It helps in the formation of a realistic dividend policy

Fund flow analysis is helpful for formation of a realistic dividend policy. Net profit is also a source of fund. Fund flow analysis can tell where are we using this fund. On the analysis, we can decide how much rest fund can be used for providing the dividend to the shareholders.

4. It helps in the proper allocation of resources

Sources of funds are limited if we have good monitoring capacity to check the application of fund, we can use our limited resources better way. It can only be possible with fund flow analysis.

5. It helps in appraising the use of working capital

Working capital is the life blood of business. If we use it efficiently, we can grow our business. In fund flow statement, we learn to check the main changes in working capital and its analysis helps us to know where did we do mistake in using of working capital. So, fund flow analysis are helpful in appraising the use of working capital.

6. It acts as a future guide

Fund flow analysis acts as our future guide because it guides to solve the problems which will arise due to shortage of our fund. Organisation can manage their fund proper way if it has done the analysis proper way.

7. It helps in knowing the overall credit worthiness of a firm

Every bank demands the fund flow statements of past years. All fund flow statements are analyzed under a systematic way and with the team. On this basis, loan are given. If bank finds that company has misused the fund, then they stop to give loan to such company. 

ஃபார்மேட் செய்ய போறீங்களா? கொஞ்சம் நில்லுங்க..கணிணிக்குறிப்புக்கள்!

கணினி பயனாளர்கள் தங்களது கணினியின் வன்தட்டை ஃபார்மேட் செய்து மறுபடியும் புதிதாக இயங்குதளத்தை நிறுவி விடலாம் என்ற முடிவிற்கு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. உதாரணமாக கணினியின் வேகம் குறைந்து விட்டது, சிஸ்டம் ஃபைல்களில் கோளாறு, வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதல், வன்தட்டின் பார்ட்டிஷன் அளவை மாற்ற போன்ற பல காரணங்கள். 

ஆனால் அப்படி முடிவு செய்துவிட்ட பின்னர், அந்த முடிவிலிருந்து பின் வாங்குவதற்கு முக்கியமாக ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்கக்கூடும். அது 'டிவைஸ் ட்ரைவர் சிடி கையில் இல்லையே?'  என்பதாக இருக்கலாம். காரணம் மிக சரியானதே. ஏனெனில் புதியதாக நீங்கள் இயங்குதளத்தை நிறுவிய பிறகு, உங்கள் கிராபிக்ஸ் கார்டு, சவுண்ட் கார்டு, வெப் கேமரா, பிரிண்டர், ஸ்கேனர் போன்ற சாதனங்கள் முறையாக வேலை செய்வதற்கு, அந்தந்த கருவிகளுக்கான பிரத்யேகமான டிவைஸ் ட்ரைவர்கள் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும். 

ஆனால் அந்த டிவைஸ் ட்ரைவர் சீடிக்கள் உங்கள் வசம் இல்லாத பொழுது,  உங்கள் கணினியில் புதியதாக இயங்குதளத்தை நிறுவ  அல்லது ஒரே கான்பிகரேஷனை கொண்ட உங்கள் நண்பரின் கணினிக்கு உங்கள்  கணினியில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள டிவைஸ் ட்ரைவர்களை  படி எடுத்து  கொடுக்க என மிகவும் பயனுள்ள ட்ரைவர் பேக்கப் மற்றும் ரீஸ்டோர் மென்பொருள் Double Driver (தரவிறக்கச் சுட்டி இறுதியில்..) 
இதிலுள்ள Scan பொத்தானை சொடுக்கியவுடன், உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து டிவைஸ் ட்ரைவர்களும்  பட்டியலிடப்படும். 
இந்த பட்டியலிலிருந்து நமக்கு தேவையான டிவைஸ் ட்ரைவர்களையோ, அல்லது எல்லாவற்றையுமோ தேர்வு செய்து Backup பொத்தானை அழுத்தி, பிறகு திறக்கும் Backup Drivers வசனப் பெட்டியில், இதனை எங்கு சேமிக்க வேண்டும் (பென் ட்ரைவிலும்) என்பதை கொடுத்து விட்டால் போதும். 


நீங்கள் தேர்வு செய்திருந்த அனைத்து ட்ரைவர்களும் அதற்கான குறிப்பிட்ட ஃபோல்டர்களில் பேக்கப் ஆகியிருப்பது தனிச் சிறப்பு. 


இயங்குதளத்தை மறுபடியும் நிறுவிய பிறகு இந்த பேக்கப் ஃபோல்டருக்குச் சென்று இங்குள்ள Double Driver அப்ளிகேஷனை ரன் செய்து ட்ரைவர்களை மறுபடியும் எளிதாக ரீஸ்டோர் செய்து கொள்ளலாம்.


பாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள், கட்டணங்கள், விதிமுறைகள் என்ன? எப்படி செய்வது? உபயோகமான தகவல்கள்!!பாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள், கட்டணங்கள், விதிமுறைகள் என்ன? எப்படி செய்வது? உபயோகமான தகவல்கள்!!பாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள், கட்டணங்கள், விதிமுறைகள் என்ன? எப்படி செய்வது? உபயோகமான தகவல்கள்!!

ஒரு நாட்டைக் கடந்து மற்றொரு நாட்டிற்கு செல்கிற எவரும் கடவுச்சீட்டு (Passport) பெற வேண்டியது அவசியமாக உள்ளது. அதனால் பாஸ்போர்ட் நமக்கு தேவை என்றால் முதலில் நாம் அணுகுவது இடை தரகர்களை தான், ஆனால் தற்போது எந்த இடை தரகர்களும் இல்லாமலே நாமே நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க  இந்திய அரசாங்கம் வழிவகை செய்துள்ளது. பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் செயல்முறை இப்போது ஆன்லைனில் மாறிவிட்டது. புதியதாக நிறுவப்பட்டுள்ள “பாஸ்போர்ட் சேவக் கேந்திரா”Passport Seva Kendras (PSK) என்கிற செயல்பாட்டின் மூலம், ஆன்லைனில் விண்ணப்பித்து…..
விண்ணப்பித்த 30 நாட்களுக்குள்ளேயே உங்களது பாஸ்போர்ட்டைப் பெற்று விடலாம். அந்த அதிகாரப்பூர்வ இணையதளம் இப்போது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TATA Consultancy Services) மூலம் பராமரிக்கப்படுகிறது. நம்மில் பலருக்கு நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க விருப்பம் இருந்தாலும் அதற்கான வழிமுறைகள் தெரியாததால் தரகர்களிடம் சென்று எடுக்கிறோம், இனி அந்த அவசியம் தேவையில்லை. உங்கள் பாஸ்போர்ட்டை ஆன்லைனிலேயே நீங்கள் அப்ளை செய்யும் செயல்முறையையும், பாஸ்போர்ட் எடுக்க என்ன விதிமுறை மற்றும் வழிமுறை அனைத்தையும் தெரிந்து கொள்ள போகிறோம்.

1) பாஸ்போர்ட் எத்தனை வகைப்படும்?
• ஆர்டினரி (Ordinary)
• அப்பிசியல் (Official)
• டிப்ளோமேட்டிக் (Diplomatic)
• ஜம்போ (Jumbo) 
என நான்கு விதமான பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன. Ordinary பாஸ்போர்ட் சாதாரண குடிமக்களுக்கும், Official பாஸ்போர்ட் அரசாங்க ஊழியர்களுக்கும், Diplomaticபாஸ்போர்ட் முதல்வர், பிரதமர் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கும், Jumboபாஸ்போர்ட் வியாபார நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.

2) பாஸ்போர்ட் பெறுவதில் எத்தனை முறைகள் உள்ளன?
இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று ஆர்டினரி (Ordinary), மற்றொன்று தட்கல் (Tatkal).

3) ஒரு முறை வாங்கும் பாஸ்போர்ட்டை எத்தனை வருடங்களுக்குப் பயன்படுத்தலாம்?
ஒரு முறை கொடுத்த பாஸ்போர்ட்டைப் பத்து வருடங்களுக்குப் பயன்படுத்தலாம். மீண்டும் அதை அதற்கான கட்டணத்தைக் கட்டிப் புதுப்பித்துக் கொள்ளலாம். ஒன்பது வருடங்கள் முடிந்தவுடன் எப்போது வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளலாம். மீண்டும் 10 வருடங்களுக்கு வழங்கப்படும். இப்படி புதுப்பிக்கும்போது, 15 நாட்களுக்குள் புதிய பாஸ்போர்ட் கிடைத்துவிடும்.

4) பாஸ்போர்ட் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்?
முக்கியமாக இரண்டு ஆவணங்கள் வேண்டும்.
1. இருப்பிடச் சான்றிதழ் (ஏதாவது இரண்டு)
• ரேசன் கார்டு
• பான் கார்டு
• வாக்காளர் அடையாள அட்டை
• வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
• தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
• எரிவாயு இணைப்பிற்கான ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

2. பிறப்புச் சான்றிதழ். (ஏதாவது ஓன்று)
• விண்ணப்பதாரர் 26.01.89 அன்றைக்கு பிறந்த அல்லது அதற்குப் பிறகு பிறந்தவராக இருந்தால் மட்டும் நகராட்சி ஆணையாளரால் அல்லது பிறப்பு & இறப்பு பதிவாளர் அலுவலகத்தில் கொடுக்கும் பிறப்பு/இறப்பு சான்றிதல் ஏற்கதக்கதாகும்.என்றால் அரசாங்கத்தால் தரும் பிறப்பு சான்றிதழ்
• பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
• கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்

வேறு சான்றிதழ்கள்
• 10வது மேல் படித்திருந்தால் ECNR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.
• உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.
• பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும்,
• மேலும்  திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும்.
• பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.
• எட்டாம் வகுப்புக்கு குறைவாகப் படித்திருந்தால் அல்லது படிக்கவே இல்லை என்றால் நோட்டரி பப்ளிக் மூலம் அபிடவிட் பெற்று விண் ணப் பிக்கலாம். 26.01.1989-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்திருந்தால் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் தேவை.

சிறுவர்-சிறுமியர்
சிறுவர்-சிறுமியர்க்கு (14 வயதுக்கு உட்பட்டவர்) கடவுச்சீட்டு எடுக்க விரும்பினால், பெற்றோர்கள் கடவுச்சீட்டு இருப்பவராக இருந்தால், காவல்துறை அறிக்கை தேவைப்படாது. பெற்றோர்க்கு கடவுச்சீட்டு இல்லாவிட்டால் அவர்தம் விண்ணப்பங்களும் காவல் துறைக்கு அனுப்பி அறிக்கை பெற்ற பின்னரே கடவுச்சீட்டு அளிப்பர்.

5) இணையதளம் மூலம் விண்ணப்பிபதால் என்ன பயன்கள்?
• விண்ணப்பதாரர்கள் வட்டார பாஸ்போர்ட் அலுவலகத்திலுள்ள அதற்குரிய அலுவலரிடம் சமர்ப்பிக்கவேண்டியதற்கான திட்டமிட்ட தேதி, நேரம், தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணம் ஆகியவைகளை பெறமுடியும்
• நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய தேவையில்லை

6) பாஸ்போர்ட் பெறுவதற்க்கான கட்டணம்?
பாஸ்போர்ட் கட்டணம் தெரிந்து  கொள்ள : http://passport.gov.in/cpv/FeeStructure.htm  
• புதிய மற்றும் புதுபிக்க : 1500 ரூ (சாதரணமான முறை)
• காணாமல் போனால் – சேதமடைந்தால் – 1500 ரூ (பாஸ்போர்டு முடிந்து இருந்தால் – Expired)
• காணாமல் போனால் – சேதமடைந்தால் – 3000 ரூ (பாஸ்போர்டு Expire ஆகவில்லை எனில்)
• 60 பக்கங்கள் வேண்டுமெனில் 500 ரூபாயைச் சேர்த்துக் கொள்ளவும்
• தட்கல் முறையில் பெற 2000 ரூபாயைச் சேர்துக் கொள்ளவும்

7) தொலைந்து போனால்?
பாஸ்போர்ட் தொலைந்து போனால் காவல் துறையினரிடம் புகார் செய்து, எஃப்.ஐ.ஆர். பெற வேண்டும். அவர்கள் “Non Traceable” சான்றிதழ் தருவார்கள். அதை ஒப்படைத்தால் டூப்ளி கேட் பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்கு ஆர்டினரிக்கு 2500 ரூபாய் மற்றும் தட்கலுக்கு 5000 ரூபாய் கட்டணம்.
தட்கல் திட்டம்:
பொதுவாக, பாஸ்போர்ட் விண்ணப்பங்களை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் செலுத்தி 30 நாள்களில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு விடுகின்றன. அவசரமாக வெளிநாடு செல்பவர்க்கு உதவியாக விரைந்து பாஸ்போர்ட் பெறவும் வகையிருக்கிறது. இதற்கு “தட்கல் திட்டம்” என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் சிறப்புரிமை அடிப்படையில் விரைந்து பாஸ்போர்ட் பெற முடியும்.

தட்கல் திட்டத்தின் கீழ் வழங்கும் அனைத்து பாஸ்போர்ட்களைச் சார்ந்த காவல்துறையின் சரிப்பார்க்கும் பணி பாஸ்போர்ட் வழங்கிய பின் இருக்கும் கீழே சொல்லப்பட்ட பட்டியலிலிருந்து மூன்று ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் தட்கால் திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பதார்ர் பெறமுடியும். மூன்று ஆவணங்களில் ஒன்று புகைப்படைத்துடன் கூடிய அடையாள அட்டையாக இருக்க வேண்டும்

அவ்வாறு விரைந்து பாஸ்போர்ட் பெற விழைவோர் ரூ.2500/- கட்டணமாக செலுத்த வேண்டும். 3 ஆவணங்கள் கட்டாயமாக சமர்பிக்க வேண்டும்.

கீழ் வரும் ஆவணங்களின் பட்டியலிலிருந்து, பாஸ்போர்ட்-க்காக மூன்றை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்
• வாக்காளர் அடையாள அட்டை
• இரயில்வே அடையாள அட்டைகள்
• வருமான வரி அடையாள (Pan Card) அட்டைகள்
• வங்கி அலுவலக புத்தகம்
• எரிவாயு இணைப்பிற்கான ரசீது
• ஓட்டுனர் உரிமம்
• பிறப்பு சான்றிதழ்கள் (Birth Certificate)
• தாழ்த்தப்பட்ட(எஸ்சி)/பழங்குடியினர் (எஸ்டி)/மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) சான்றிதழ்கள்
• சொத்து ஆவணங்களான பட்டா, பதிவுசெய்யப்பட்ட ஒப்பந்தபத்திரங்கள் இன்னும் பிற குடும்ப அட்டைகள்
• அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களால் வழங்கப்பட்ட மாணவர்களுக்கான புகைப்பட அடையாள அட்டைகள்
• ஓய்வூதிய ஆவணங்களான முன்னாள் இராணுவ வீரரின் ஓய்வூதிய புத்தகம்/ ஓய்வூதியம் செலுத்துவதற்கான ஆணை, முன்னாள் இராணுவ வீரரின் விதவை/சார்ந்தவர்கள் சான்றிதழ்கள், முதியோர் ஓய்வூதிய ஆணை, விதவை ஓய்வூதிய ஆணை
• மத்திய/மாநில அரசுகளால் வழங்கப்பட்ட பணிக்கான புகைப்பட அடையாள அட்டை, பொது நிறுவனங்கள், உள்ளூர் அமைப்புகள் அல்லது பொது வரையறை நிறுவனங்கள்

பாஸ்போர்ட் எப்படி பெறுகிறார்கள் என்பது பற்றிய ஒரு பட முன்னோட்டம்


Employment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி? கணிணிக்குறிப்புக்கள்!

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன் லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ்”என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்த நிலையில், தற்போது அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும்.

இன்று நாம் புதியதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி என்று பார்ப்போம். இதற்கு குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், 10th (or)  12th  மதிப்பெண் அட்டை கண்டிப்பாக கையில் வைத்திருத்தல் வேண்டும். முதலில் இணையதள முகவரி www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று 
click here for new user ID registration என்று இருக்கும் ( உதாரணத்திற்கு மேலே உள்ள படத்தை பார்க்கவும்) அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் I agreeஎன்று சொடுக்கி அடுத்து வரும் பக்கத்தில்
பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில் முகவரி, user id என்ற இடத்தில் புதியதாக ஒரு ID  கொடுக்கவும், பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி, குடும்ப அட்டை எண்ணையும் Image Code என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் codeஐ கொடுத்துSave செய்தால் உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும். அடுத்து வரும் பக்கத்தில்
உங்களது Personal detail, Contact detail, Qualification detail, Technical detail ஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால் உங்களது Register Number Create ஆகிவிடும்.

குறிப்பு 1 :  Qualification detail பூர்த்தி செய்தவுடன் add என்று பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும் அதில் கிளிக் செய்து Save கொடுக்கவும். இதே போன்று Technical Detailம் செய்ய வேண்டும்.

குறிப்பு 2 :  மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் Home பகுதிக்கு சென்று பார்த்தால் Print ID Card என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.

குறிப்பு 3 :  ஏதேனும் தவறாக செய்திருந்தால் Home  பகுதியில் Modify Contact இருக்கும் அதில் சென்று மாற்றி கொள்ளலாம்.

குறிப்பு 4 :  Update Profileல் சென்று Renewal செய்து கொள்ளலாம்.

Renewal செய்வதற்கான குறிப்பு :
உதாரணத்திற்கு Register Number இப்படித்தான் இருக்கும்.

Register Number :              ARD2012M00007502

வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்:  ARD  - என்பது ( வேலைவாய்ப்பு அலுவலகம், அரியலூர் )
பதிவு செய்த ஆண்டு  : 2012
ஆண் / பெண்         :   M
பதிவு எண்             :  7502

பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருத்தல் வேண்டும், அப்படி இல்லாமல் 4இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளவும்.

User ID :  ARD2012M00007502
Password : dd / mm / yyyy

கடவு சொல்லில் உங்களது பிறந்த தேதியை கொடுக்கவும்.
உங்களது ID CARD இப்படிதான் இருக்கும்.. 
அவ்வளவு தான் நண்பர்களே.. இனி கால விரையமுமின்றி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். பதிவில் ஏதேனும் தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள் திருத்தம் செய்து கொள்கிறேன்..

ஆன்லைனில் பாஸ்போர்ட் அப்ளை செய்வது எப்படி? அப்பாய்ன்மெண்ட் வாங்குவது எப்படி? வழிமுறைகள் என்ன? உபயோகமான தகவல்கள்!

இணையதளம் மூலம் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பதற்கான செயல்முறைகளை இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.http://passportindia.gov.in எனும் பாஸ்போர்ட் இணையத்தளத்தின் மூலமாக பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பதிவு செய்துக்கொள்ளலாம். உங்கள் பாஸ்போர்ட்டை ஆன்லைனிலேயே நீங்கள் அப்ளை செய்யும் செயல்முறையையும், பதிவு முறை, பாஸ்போர்ட் நியமனம்(Manage Appointment for Passport), போலீஸ் சரிபார்ப்பு (Police Verification), 
அப்பாய்ன்மெண்ட் வாங்குவது எப்படி, அப்ளை செய்த பாஸ்போர்ட் என்ன ஸ்டேட்டஸில் இருக்கு என்பதையும் வழிமுறை அனைத்தையும் தெரிந்து கொள்ள போகிறோம்.

பாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள், கட்டணங்கள், விதிமுறைகள் என்ன? எப்படி செய்வது? என்பது பற்றி தெரிந்து கொள்ள இதற்கு முந்தய பதிவை படிக்கவும்..

1) பதிவு முறை:
• இதற்கு மின்னஞ்சல் ஐடி (Email Id) கட்டாயமாக தேவைப்படும்.
• ஆன்லைன் விண்ணப்பம் தாக்கல்" என்ற தலைப்பில் கீழ் ஒரு புதிய பயனர் New Register என "பதிவு" மிகையிணைப்பை கிளிக் செய்க.கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது போல்.
• பிறகு உங்கள் தனிப்பட்ட விவரங்களை நிரப்ப வேண்டும்.
• வெற்றிகரமாக உங்களை பதிவு செய்த பிறகு, ஒரு "நன்றி" செய்தி பாஸ்போர்ட் சேவா போர்ட்டல் மூலம் ஒரு இணைப்பை பதிவு உங்கள் மின்னஞ்சல் ஐடிக்கு (Email Id)அனுப்பப்படுகிறது. (உங்கள் கணக்கை செயல்படுத்துவதற்கு) 
• உங்கள் மின்னஞ்சல் ஐடி அனுப்பப்படும் என்று இணைப்பை கிளிக் செய்து உறுதி படுத்த வேண்டும். (இணைப்பு 7நாட்களுக்கு பிறகு காலாவதியாகிவிடும்.)
• உங்கள் கணக்கு செயல்படுத்தப்பட்டது என்று உறுதி அளிக்கும். 

2) பாஸ்போர்ட் Account Login:
• நான் இப்போது "உள்நுழைவு" மிகையிணைப்பை கிளிக் செய்வதன் மூலம் ஏற்கனவே நீங்கள் கொடுத்த பயனர்பெயர் கொடுத்து உள்நுழையும்.
• உங்கள் கடவுச்சொல் கொடுங்கள்.
• உங்கள் திரையில் காட்டப்படும் தட்டச்சு எழுத்துகளை கொடுத்து கிளிக் செய்யவும்.

3) பாஸ்போர்ட் விண்ணப்பம் (Passport Application):
உடனே புதிய பக்கம் வரும். அதில் நாம் முன்பு சமர்பித்துள்ள படிவத்தின் நிலமையைக் காண (Application Status) ஒரு லிங்க்கும், மற்றொன்று புதிதாக பாஸ்போர்ட் அப்ளை செய்வதற்கும் இருக்கும். 
இரண்டாவதை “Apply for Fresh Passport / Reissue of Passport” கிளிக் செய்யவும்
அதன்பின் இரண்டு ஆப்ஷன்கள் வரும். விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து – Printசெய்து – பூர்த்தி செய்து ஆன்லைனில் அப்லோடு செய்யலாம். அல்லது அப்படியே ஆன்லைனில் அப்ளை செய்யலாம்.
அடுத்து வரும் புதிய பகுதியில்
முதன்முதலாக எடுப்பதா அல்லது புதிப்பதா என்றும் சாதாரணமான முறையில் வேண்டுமா தட்கல் முறையில் வேண்டுமா என்றும் சாதாரணமாக 36 பக்கங்கள் அல்லது கூடுதல் கண்டத்துடன் 60 பக்கங்கள் உள்ள பாஸ்போர்ட் வேண்டுமா என்று கேள்விகளுக்கு சரியான தேவையைக் கிளிக் செய்யவும்.அதன்பின் மற்றொரு பகுதி வரும்.
அதில் உள்ள உங்களது அனைத்து விசயங்களையும் நிதானமாகப் படித்து எழுத்து பிழை இல்லாமல் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஒவ்வொரு பக்கம் முடித்த பின்னர் "அடுத்து" என்பதை கிளிக் செய்யவும். நீங்கள் உங்கள் விண்ணப்பத்தை முடிவடையாத விட்டு & அடுத்த நாள் அதை பூர்த்தி தொடர விரும்பினால் "என் விவரங்கள் சேமி"கிளிக் செய்து, நீங்கள் கடைசியாக பூர்த்தி செய்த பக்கத்தை "சமர்ப்பி" என்பதை கிளிக் செய்தால் அது வரை நீங்கள் அடுத்த / முந்தைய பக்கம் இடையே செல்லவும் & உங்கள் விவரங்கள் திருத்த முடியும். கடைசியில் ஒருமுறை நீங்கள் உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்தால் நீங்கள் எதையும் மாற்ற முடியாது.

• Given Name : உங்களது பெயர்
• Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்)
• உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் “if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full” என்பதை கிளிக் செய்து
• Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்
• Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்
• Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)
• Place of Birth: பிறந்த ஊர்
• District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்
• Qualification: உங்களது படிப்பு (SSLC pass  என்றால் NOC அப்ளை செய்யலாம்)
• Profession: தொழில்
• Present Address: தற்போதைய முகவரி
• Permanent Address: நிரந்தர முகவரி
• Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள்
• Phone No: தொலைபேசி எண்
• Email Address: இமெயில் முகவரி
• Marital Status: திருமணமான தகவல்
• Spouse’s Name: கணவர்/மனைவியின் பெயர்
• Father’s Name: தந்தை பெயர்
• Mother’s Name: தாயார் பெயர்
• தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் “If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there.” என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்
• Voter ID, Athaar Card No, PAN Card Number இருந்தால் அதனையும் நிரப்பி விடவும்.
• Is applicant eligible for Non-ECR category? SSLC Pass செய்திருந்தால், வெளிநாட்டில் 3வருடத்திற்கு மேல் இருந்திருந்தால், 50 வயதைத் தாண்டியிருந்தால் மற்றும்…. NOCகிடைக்கும். அப்போது கிளிக் செய்யவும்.

அனைத்தையும் நிரப்பியவுடன், “Save” என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு Next Buttonஐ கிளிக் செய்து செல்லவும், கடைசியாக முக்கியமான ஓன்று அதில் உங்கள் வீட்டு அருகாமையில் உள்ள இருவரது முகவரியும், தொலைபேசி எண்ணும் கேட்கும். அதை தெளிவாக குறிப்பிடவும். ஏனென்றால் போலிஸ் வெரிபிகேஷன் அதான் முக்கியம். 

5) பாஸ்போர்ட் நியமனம் (Manage Appointment for Passport):
பாஸ்போர்ட் ஆபிசுக்கு எந்த தேதியில் செல்ல உங்களால் முடியுமோ அந்த தேதி அல்லது கிடைக்கும் தேதியையும் நேரத்தையம் தேர்ந்தெடுக்கவும். அதனையும் "Save"செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும்
1)நியமனம் பக்கம் 5minutes தான் திறந்திருக்கும் அதற்குள் முடித்துவிட வேண்டும்.
2)அதே நாளில் இரண்டாவது முயற்சித்து கொண்டிருக்க முடியாது. அந்த வழக்கில் நீங்கள் 24 மணி நேரம் காத்திருந்து, அடுத்த நாள் தான் முயற்சிக்க வேண்டும்.
3)அதேபோல் அந்த பக்கத்தில் இருக்கும் பொது Reload/Refresh பட்டனை அழுத்தாதிர்கள்.

உங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் அந்த பிரிண்டையும் + பணத்தையம் + சான்றிதழ் ஒரிஜினலையும் காப்பியையும் எடுத்துச் செல்லவும்.
அந்த அலுவலகத்தில் உங்களது சான்றிதழ்கள் (ரேஷன்கார்டு, ஓட்டர் ஐடி, பிறந்த நான் சான்றிதழ் போன்றன) சரிகாணப்பட்டு காப்பியைப் பெற்றுக் கொண்டு பணத்தையும் பெற்றுக் கொள்வார்கள். அதன் பின் உங்களை படம் பிடித்து போட்டு எடுத்துக் கொள்வார்கள். (எனவே போட்டோ கொண்டு செல்ல தேவையில்லை). எல்லாவற்றையும் சரியாக சரிபார்த்த பின் உங்களுக்கு Receipt தருவார்கள். அவ்வளவு தான் உங்களது வேலை
(குறிப்பு நீங்கள் கொடுக்கும் எல்லா ஆவணகளிலும் ஒரே முகவரியும், பிறந்த தேதியும் ஒரே மாதிரி இருக்க வேண்டும்)

6) பாஸ்போர்ட் விண்ணப்ப தகுதி ஆன்லைனில் பார்க்க (View Passport Application Status Online):
நீங்கள் PSK-ல் உள்ள நடைமுறைகள் வெற்றிகரமாக முடிந்த பிறகு, ஒரு கோப்பு எண் பெறுவீர்கள், பிறந்த தேதி இரண்டையும் கொடுத்து "ட்ராக்" பொத்தானை கிளிக் செய்யவும். இப்போது உங்கள் பாஸ்போர்ட் எந்த நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

7) போலீஸ் சரிபார்ப்பு (Police Verification):
சில தினங்களில் போலிஸ் வெரிபிகேஷன் என்ற உங்களது இருப்பிடத்திற்கு சாட்சிக்காக உங்கள் பகுதியைச் சேர்ந்த காவல் துறை சரிபார்க்கும், அப்போது நீங்கள் உங்கள் VAO- Village Asministrative Officer -ரிடம் நீங்கள் இந்த ஊரில் தான் வசித்துவருகிரீர்கள் என்று விண்ணப்பத்தில் எழுதி வாங்க வேண்டும் மற்றும் உங்கள் வீட்டு அருகாமையில் உள்ள இருவரது முகவரி கொடுத்தீர்கள் அல்லவா அவர்களையும் விசாரிப்பார்கள்.
8) Passport Dispatch:
அந்த பணி முடிந்து சில நாட்களில் பாஸ்போர்ட் தயாராக உள்ளது என, உங்கள் மொபைல் இல் அறிவிப்பு எஸ்எம்எஸ் பெறுவீர்கள் மேலும் அனுப்பப்பட்டதும் உங்கள் பாஸ்போர்ட் எண் தேதி குறிப்பிட்டு உங்கள் மின்னஞ்சல் ஐடி ஒரு மின்னஞ்சல் வரும். எனவே, ஒரு சரியான மின்னஞ்சல் ஐடி & தொலைபேசி எண் கொடுப்பது மிகவும் முக்கியமானது. சில நாட்களில் உங்கள் பாஸ்போர்ட் பதிவுத் தபாலில் உங்களது வீட்டிற்கு வந்துவிடும். 

அவ்வளவுதான் முடிந்தது நண்பர்களே...இனி நீங்களும் அப்ளை செய்து பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ளலாம்..

இலவசமாக Call மற்றும் Message செய்ய உதவும் Line Application ! கணிணிக்குறிப்புக்கள்!!




Line
ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் பெரும்பாலான நபர்கள் இலவச Message அல்லது Call செய்யும் Application களை பயன்படுத்துவார்கள். பெரும்பாலான Application கள் இவற்றில் ஏதேனும் ஒரு வசதியை மட்டுமே பயனர்களுக்கு வழங்கும். அப்படி இல்லாமல் இரண்டையும் தரும் ஒரு பயனுள்ள Application பற்றி இன்று பார்ப்போம்.
Line என்ற இந்த Application மூலம் உலகம் முழுவதும் உள்ள நண்பர்களுடன் நீங்கள் பேசலாம் அல்லது இலவசமாக மெசேஜ் செய்யலாம். எந்தவிதமான ஒரு லிமிட்டேஷனும் இல்லாமல் 24 மணி நேரமும் இதை செய்யும் வசதியை Line Application உங்களுக்கு வழங்குகிறது. உலகம் முழுவதும் 15 கோடி பயனர்கள் இந்த Application ஐ பயன்படுத்தி வருகிறார்கள்.
free call and message
நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நபர் Offline – இல் உள்ளார் என்றால் நீங்கள் விஷயத்தை பேசி ரெகார்ட் செய்து அனுப்பலாம். வீடியோ/ஆடியோ என இரண்டு வகையிலும் செய்ய முடியும்.
இது எல்லா Smartphone க்கும் உள்ளது. அத்தோடு Windows மற்றும் Mac கணினிகளிலும் இதை நீங்கள் பயன்படுத்த முடியும்.  உங்கள் போனில் இதை இன்ஸ்டால் செய்யும் போது உங்கள் மின்னஞ்சல் முகவரி மூலமும் Register செய்து கொண்டால் உங்கள் கணினியில் இருந்தே நண்பர்களுக்கு call செய்யலாம்.
இவற்றோடு புதிய Status, Photos போன்றவற்றை Timeline என்ற பகுதியில் பகிர்ந்து கொள்ளலாம். இந்த பகுதி Social Network போல இயங்கும்.
இதற்கெல்லாம் ஒரே தேவை உங்கள் நீங்களும் உங்கள் நண்பரும் Line – ஐ பயன்படுத்த வேண்டும். அத்தோடு இணைய இணைப்பு இருக்க வேண்டும்.
சிறப்பம்சங்கள்: 
  • இலவசமாக Call செய்யும் வசதி. 
  • மிக வேகமான செயல்பாடு. ஒரு சில நொடிகளில் Call/Message சென்றடைகிறது.
  • Chat மூலம் படங்கள், ஆடியோ, வீடியோ அனுப்பும் வசதி
  • Group Chat வசதி
  • கணினிகளிலும் இயங்கும் வசதி
  • முழுக்க முழுக்க இலவசம்.
voice and video message
Android பயனர்கள்: 
முதலில் Line Application பக்கத்திற்கு செல்லுங்கள். அதில் Install என்பதை கிளிக் செய்யுங்கள். ஏற்கனவே Google Play தளத்தில் உங்கள் ஜிமெயில் ஐடி மூலம் Sign in ஆகி இருந்தால் அடுத்தும் Install என்று கொடுக்க வேண்டும். இல்லை என்றால் உங்கள் போனில் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரியை இங்கே கொடுத்து Sign in செய்து பின்னர் இன்ஸ்டால் என்பதை கிளிக் செய்யுங்கள்.  இப்போது உங்கள் போனில் GPRS/Wifi – ஐ Enable செய்தால் App தானாக Download ஆகிவிடும். உங்கள் மொபைலில் இன்ஸ்டால் ஆன பிறகு உங்கள் நம்பர் கொடுத்து உங்கள் Line கணக்கை தொடங்கி விடலாம். நீங்கள் விரும்பினால் உங்கள் மின்னஞ்சல் முகவரி மூலமும் Register செய்து கொள்ளலாம்.
Windows Phone, iPhone, Blackberry மற்றும் Nokia Asha பயனர்கள்:
உங்கள் போனில் App Market சென்று Line என்று தேடி டவுன்லோட் செய்யுங்கள் பின்னர் உங்கள் மொபைல் நம்பர் கொடுத்து Register செய்யுங்கள்.
தரவிறக்க:
  • மொபைல்
    • Android [**Android பயனர்கள்இந்த இணைப்பில் கிளிக் செய்து வரும் பக்கத்தில் Install என்பதை கிளிக் செய்யவும். பின்னர் உங்கள் போனில் GPRS/Wifi - ஐ Enable செய்து தானாக Download செய்யலாம்**]
    • iPhone
    • Windows Phone 8
    • Blackberry
    • Nokia Asha
டவுன்லோட் செய்து பயன்படுத்துபவர்கள் More >> Add Friends மூலம் புதிய நண்பர்களை சேர்க்கலாம். என்னை சேர்க்க Search By ID என்பதில் prabukrishna என்று தேடுங்கள்.