Thursday, September 19, 2013

வேர்ட் டிப்ஸ்-தேவையற்ற கோடுகளை தவிர்க்க


தேவையற்ற கோடுகளை தவிர்க்க: வேர்ட் தொகுப்பில் தாமாகவே இயங்கும் பார்மட் சம்பந்தமான பல செயல்பாடுகள் உள்ளன. இதில் நாம் அடிக்கடி சந்திப்பது படுக்கைக் கோடு அமைவது தான். அதாவது ஹைபன் அல்லது அடிக்கோடு அல்லது சிறிய வளைவு கோடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் உடனே வேர்ட் அதனை அந்த அளவிற்கான படுக்கைக் கோடாக மாற்றிவிடும். இது நமக்கு வசதி என்றாலும் இதனை நீக்குவது எளிதல்ல. ஏனென்றால் இது வேர்ட் ஏற்படுத்திய பார்டர் லைனாகும். 
தற்போது பயன்படுத்தப்படும் வேர்ட் தொகுப்புகளில் இதற்கு ஒரு வழி தரப்பட்டுள்ளது. கர்சரை எந்த கோட்டினை அழிக்க வேண்டுமோ அந்த கோட்டின் தொடக்கத்திற்குக் கொண்டு செல்லவும். பின் Format மெனு சென்று Borders and Shading என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து அதில் உள்ள None பிரிவைக் கிளிக் செய்திடவும். இந்த பிரச்னை தொடர்ந்து வராமல் இருக்க வேண்டும் என்றால் Tools மெனுவிற்குச் செல்லுங்கள். அதில் Auto Correct Options என்ற பிரிவைத் தேர்ந்தெடுங்கள். பின் அதில் என்ற AutoFormat As You Type டேபிற்குச் செல்லுங்கள். Apply as you type என்ற இடத்தைத் தேடிக் கண்டு பிடியுங்கள். அதில் Border Lines என்ற இடத்திற்கு எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்து விட்டு அனைத்திற்கும் ஓகே டிக் செய்து மூடுங்கள்.
வேர்டில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஷார்ட் கட் கீ தொகுப்புகள்:
CTRL+B : எழுத்துக்களை போல்டாக அமைக்க
CTRL+I : எழுத்துக்களை சாய்வாக அமைக்க
CTRL+U: எழுத்துக்களை அடிக்கோடிட்டு அமைக்க
CTRL+DEL: கர்சரின் வலது புறம் உள்ள சொல்லை அழித்திட
CTRL+BACKSPACE: கர்சரின் இடது புறம் உள்ள சொல்லை அழித்திட
CTRL+SHIFT + SPACEBAR: இடையே உடை யாத இடைவெளியை உருவாக்க
CTRL+C: தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டை காப்பி செய்திட
CTRL+X: தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டை அழித்திட
CTRL+V: தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டை ஒட்டிட
CTRL+ALT+V: சிறப்பான முறையில் டெக்ஸ்ட் ஒட்டிட
CTRL+SHIFT+<: br="" nbsp="">CTRL+SHIFT+>: எழுத்தின் அளவை அதிகரிக்க
CTRL+[ : எழுத்தின் அளவைக் குறைத்திட
CTRL+]: எழுத்தின் அளவை அதிகரிக்க
CTRL+HYPHEN: இடையே உடையாத ஹைபன் அமைக்க
CTRL+SPACEBAR: பாரா அல்லது கேரக்டர் பார்மட்டிங்கினை நீக்க
CTRL+SHIFT+V :பார்மட்டிங் மட்டும் ஒட்டிட
CTRL+Z: இறுதியாக மேற்கொண்ட செயலை நீக்கிட
CTRL+Y: இறுதியாக அழித்ததனை மீண்டும் கொண்டுவர
CTRL+SHIFT+G: சொல் எண்ணிச் சொல்லும் டயலாக் பாக்ஸைக் கொண்டு வர
CTRL+L: திரையின் இடது புறமாக டெக்ஸ்ட்டை ஒழுங்கு படுத்த
CTRL+E: திரையின் நடுவாக டெக்ஸ்ட்டை ஒழுங்கு படுத்த
CTRL+R: திரையின் வலது புறமாக டெக்ஸ்ட்டை ஒழுங்கு படுத்த
CTRL+M: பாரா அல்லது தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டினை மார்ஜினில் அமைக்க
CTRL +1: வரிகளுக்கு இடையே ஸ்பேஸ் ஒரு வரியாக அமைக்க
CTRL +5: வரிகளுக்கு இடையே ஸ்பேஸ் ஒன்றரை வரியாக அமைக்க
CTRL +2 : வரிகளுக்கு இடையே ஸ்பேஸ் இரு வரிகளாக அமைக்க
F7: : ஸ்பெல்லிங் மற்றும் இலக்கண தவறுகளைச் செக் செய்து தர
SHIFT+F7 : தெசாரஸ் என்னும் ஒரு சொல் போன்ற பொருள் தரும் பிற சொல் தரும் தெசாரஸ் பயன்பாட்டைப் பெற
CTRL+SPACE : ஆட்டோ கரெக்ட் பெறவும் மூடவும்

No comments:

Post a Comment