Saturday, November 30, 2013

வேர்ட் டிப்ஸ்


டேப்பின் இடைவெளி அமைக்க: வேர்ட் ரூலர் நமக்குப் பல வழிகளில் உதவுகிறது. வழக்கமாக டேப்களை நாம் செட் செய்கிறோம். ஒவ்வொரு டேப்பிற்கும் இடையே உள்ள தூரத்தினை ரூலர் மூலம் அறிந்து கொள்கிறோம். ஆனால் ஒரு டேப் பாய்ண்ட் ரூலரின் இடது புறம் இருந்து எவ்வளவு தூரத்திலிருந்து உள்ளது என்றும் அதே போல வலது புறத்திலிருந்து எவ்வளவு தூரத்திலிருந்து உள்ளது என்றும் அறியலாம். இதற்கு ரூலரில் டேப் உள்ள இடத்தில் கர்சரைக் கொண்டு வைக்கவும். இப்போது இடது பக்க மவுஸ் பட்டனை அழுத்தவும். அதனை விட்டுவிடாமல் வலது பக்கம் மவுஸ் பட்டனையும் அழுத்தவும். இப்போது குறிப்பிட்ட டேப் இரு புறத்திலிருந்தும் எவ்வளவு தூரத்திலிருந்து உள்ளது என்று காட்டப்படும்.
நீளவரியை மடக்கி அமைக்க: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றை அமைக்கையில், பல வேளைகளில், நீளமான இணைய முகவரி ஒன்றை அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இணைய முகவரிகளுக்கான லிங்க் எப்போதும் ஒரே சொல் போல நீளமாக இருக்கும். இது வலது மார்ஜின் அருகே வருகையில், அதனை ஒரு சொல்லாக எடுத்துக் கொண்டு, வேர்ட் புரோகிராம், அந்த இணைய முகவரி முழுவதையும், அடுத்த வரிக்குக் கொண்டு செல்லும். இதனை Word Wrapping எனக் கூறுகிறோம். 
இதனால் வலது மார்ஜினில் அழகின்றி ஒரு இடைவெளி ஏற்படும். இரண்டு பக்கமும் அலைன் மெண்ட் எனில், முதல் வரியில் எழுத்துக்களுக்கிடையே அழகற்ற இடைவெளி ஏற்படும். இந்த சிக்கலின்றி அமைக்க வேர்ட் ஓர் ஆப்ஷன் தந்துள்ளது. அதனைத் தேர்ந்தெடுத்து அமைத்துவிட்டால், இணைய முகவரி அல்லது மிக நீளமான சொல் தேவைப்பட்ட இடத்தில் பிரிக்கப்பட்டு அமைக்கப்படும். 
டாகுமெண்ட்டைத் திறந்து கர்சரை எந்த இடத்தில் இணைய முகவரியைப் பிரிக்க வேண்டுமோ, அந்த இடத்தில் கொண்டு செல்லவும். பொதுவாக ஸ்லாஷ் எனப்படும் சாய்வு கோட்டின் அருகே பிரிக்க விரும்புவோம். இந்த இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று நிறுத்தவும். அடுத்து Insert டேப்பில் கிளிக் செய்திடவும். அடுத்து Symbols குருப்பில் Symbol என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், More Symbols என்பதைத் தேர்ந்தெடுத்தால், Symbols டயலாக் பாக்ஸ் திறக்கப்படும். வேர்ட் 2003ல், Insert மெனுவிலேயே Symbol பிரிவினைப் பெறலாம். இதனை அடுத்து, Special Characters என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து No Width Optional Break என்பதில் கிளிக் செய்திடவும். 
இவ்வாறு பிரித்துவிடப்பட்டுள்ளதா என்று நீங்கள் யு.ஆர்.எல். முகவரியை ஸ்கிரீனில் பார்த்து சொல்ல முடியாது. ஆனால் பிரிக்கப்பட்டிருக்கும். இதனைக் கட்டாயம் பார்க்க வேண்டும் என எண்ணினால், பாராகிராப் பிரேக் காட்டுவதற்கான ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தால், அனைத்து பாரா மார்க்கர்களுடன், இந்த பிரித்த இடமும் காட்டப்படும். பிரித்த இடத்தில் சிறிய நீள் கட்டம் தெரியும். இணைய முகவரி தான் என்றில்லை. எந்த நீள சொல்லையும் இது போல பிரித்து அமைக்கலாம். 
Ctrl + Shift + Spacebar: பிரிக்க முடியாத ஸ்பேஸ் ஒன்றை சொற்களுக்கு நடுவே தருகிறது. இந்த இடைவெளியினை டெக்ஸ்ட் ராப்பிங் போன்ற பார்மட் வழிகள் எடுக்க முடியாது. 
Ctrl + Shift + Hyphen: பிரிக்க முடியாத சிறிய இடைக்கோட்டினை அமைக்கிறது. இதனால் ஹைபன் அமைக்கப்பட்ட இரு சொற்களும் பிரிக்கப்பட மாட்டா. 
Ctrl + T: பாராக்களை ஒரு ஹேங்கிங் இன்டென்ட் எனப்படும் முன் இடைவெளியிட்டு அமைக்கிறது. 
Ctrl + Shift + T: மேலே சொன்ன பாரா ஹேங்கிங் இன்டென்ட் இருப்பின் அதனை நீக்குகிறது.

No comments:

Post a Comment