Saturday, January 4, 2014

டாகுமெண்ட்டில் பக்க எண்ணிக்கை! டாகுமெண்ட்டில் பக்க எண்ணிக்கை! டாகுமெண்ட்டில் பக்க எண்ணிக்கை!

வேர்டில் டாகுமெண்ட் தயாரிக்கும்போது, பக்கங்களின் எண்ணிக்கையை அமைப்பது நம் அனைவரின் வழக்கம். அந்த டாகுமெண்டில் மொத்தம் எத்தனை பக்கங்கள் என்பதனையும் அதனுடன் இணைத்து, ஒவ்வொரு பக்கத்திலும் வருமாறு அமைக்கலாம். இதனை டாகுமெண்டில் பீல்ட் ஒன்றை அமைப்பதன் மூலம் கொண்டு வரலாம். இதற்குக் கீழே காட்டியுள்ளபடி செயல்பட வேண்டும். 
1. எந்த இடத்தில் மொத்த பக்கங்களின் எண்ணிக்கை வர வேண்டுமோ, அந்த இடத்திற்குக் கர்சரைக் கொண்டு செல்லவும். 
2. ரிப்பனுடைய Insert டேப் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். 
3. Text குரூப்பில் Quick Parts என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு கீழ் விரி மெனு ஒன்று கிடைக்கும். இதில் Field என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Field டயலாக் பாக்ஸினைக் காட்டும். 
4. அடுத்து Categories கீழ்விரி பட்டியலில், Document Information என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Field Names என்பதில் NumPages என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து டயலாக் பாக்ஸை மூடி, பீல்டை இணைக்க ஓகே, கிளிக் செய்திடவும். 
இனி, மொத்த பக்க எண்கள் எண்ணிக்கை உங்கள் டாகுமெண்டில் காட்டப்படும்.

No comments:

Post a Comment