வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதை ஒரு நிமிடத்திலேயே முடித்துத்தரும் ஏ.டி.எம். இந்த ஹை-டெக் யுகத்தில் நமக்கெல்லாம் வரப்பிரசாதம்தான். ஆனால் எந்த ஒரு வசதிக்கும் பின்னால் சில பிரச்னைகள் ஒளிந்திருக்கும். ஏ.டி.எம். பயன்படுத்தும் போது நீங்கள் மிகவும் பாதுகாப்பாக உங்கள் பணத்தைக் கையாள உதவும் வகையில் இதோ சில டிப்ஸ்கள்:
வரிசையில் நின்று பணம் எடுக்கும் அளவுக்கு பிஸியாக இருக்கும் ஏ.டி.எம்.

பூத்துகளையே தேர்ந்தெடுங்கள். அதுபோல ஒரே அறையில் இரண்டு மெஷின்கள் இயங்கும் பூத்துகளை இரவு வேளைகளில் பயன்படுத்துவதை தவிருங்கள். ஏ.டி.எம்.மைப் பயன்படுத்தும் ஆரம்பகாலத்தில் நம்பிக்கையான ஒருவரின் துணை அவசியம்.
பெரியகடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதி இருக்கிறது. சில நாணயக் குறைவான நிறுவனங்களில் உங்கள் கார்டை தேய்த்துப் பணம் பெற்ற பிறகு, ரகசியமாக தாங்கள் வைத்திருக்கும் இன்னொரு மெஷினிலும் தேய்த்துக் கொள்வார்கள். இதன் மூலம் உங்கள் கார்டின் அனைத்து விவரங்களும் அந்தத் திருட்டு மெஷினில் பதிவாகிவிடும். பிறகு ஒரு போலி கார்டைத் தயாரித்து உங்கள் பணத்தை அபேஸ் செய்துவிடுவார்கள். எனவே உங்கள் கார்டை தேய்க்கும் போது உங்கள் கண்கள் அதிலேயே கவனமாக இருக்க வேண்டும் என்பதை மறவாதீர்கள்.
முடிந்த மட்டிலும் உங்கள் கணக்கு இருக்கும் வங்கியின் ஏ.டி.எம்.மைப் பயன்படுத்துவதே சிறந்தது. இதனால் சிலசமயம் பணம் வருவதில் கோளாறு ஏற்பட்டாலோ, அல்லது பணம் வராமல் தொகை உங்கள் கணக்கில் கழிக்கப்பட்டாலோ மேற்கொண்டு நாம் எடுக்க வேண்டிய முயற்சிகளுக்கான நடைமுறைகள் கொஞ்சம் எளிதாக இருக்கும்.
ஏ.டி.எம்மில் பணம் எடுக்கும் போது ரகசிய எண்களை (பின் நம்பர்) அழுத்துவீர்கள் அல்லவா? அப்போது இயன்றவரை ஒரு கையால் அழுத்துப் பலகையை மறைத்துக் கொண்டு இன்னொரு கையால் அழுத்துங்கள். சில இடங்களில் உங்கள் ரகசிய எண்ணைக் கேமிரா மூலம் படம் எடுத்து மோசடி செய்பவர்களும் இருக்கிறார்கள். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியாமல் உங்கள் உடம்பை ஒரு கேடயமாக உபயோகித்தும் ரகசிய எண் அழுத்துவதை மறைக்கலாம்.
சில ஏ.டி.எம். மெஷின்களில் கார்டை நுழைத்ததுமே சரிபார்க்கப்பட்ட பிறகு கார்டை வெளியே எடுத்துவிடலாம். சில மெஷின்களில் நீங்கள் பணம் எடுத்து முடியும் வரை உங்கள் கார்டு மெஷினுக்குளேயே இருக்கும். பணத்தை எடுத்துக் கொண்டு கார்டை எடுக்கப் பலர் மறந்து விடுகிறார்கள். திடீர் வெளியூர் பயணம் போன்ற சந்தர்ப்பங்களில் இத்தகைய ஏ.டி.எம்.மை பயன்படுத்துவதை தவிருங்கள். அதே போல கைப்பை மற்றும் இதர பொருட்களை ஏ.டி.எம். அறையிலிருந்து திரும்பி வரும்போது கவனமாக திரும்ப எடுத்துக் கொள்ளுங்கள்.
ஏ.டி.எம். மெஷினை அடைவதற்கு முன்னரே கைப்பை அல்லது பர்ஸில் இருந்து கார்டை எடுத்து தயார் நிலையில் கையில் வைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பணம் எடுத்துக்கொண்டு ஏ.டி.எம் பூத்திலிருந்து வெளியே வந்துவிடுங்கள். முடிந்த மட்டும் ஒரே மெஷினைப் பயன்படுத்தும்போது பயன்பாடு எளிதாகவும் விரைவாகவும் இருப்பதை உணர்வீர்கள்.
இரவு நேரங்களில் முதியோர்கள் ஏ.டி.எம். பூத்தில் இருந்து பணம் எடுப்பதைத் தவிர்க்கவும். அப்படி பணம் எடுக்க அவசியம் ஏற்பட்டால் குடும்பத்தினரை துணைக்கு கட்டாயம் அழைத்துச் செல்ல வேண்டும்.
காவலுக்கு ஆளில்லாத ஏ.டி.எம். பூத்களை பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.

No comments:
Post a Comment