Saturday, March 29, 2014

எவ்வளவு நேரம் என் கம்ப்யூட்டர் இயங்கியது?

சிலர் தங்களுடைய கம்ப்யூட்டர் எவ்வளவு நேரமாய் இயங்கிக் கொண்டிருந்தது என்று அறிய ஆசைப்படுவார்கள். கம்ப்யூட்டரை வாடகைக்குப் பயன்படுத்தக் கொடுப்பவர்களுக்கும் இந்தத் தேவை ஏற்படும். இதனை அறிந்து கொள்ளச் சில வழிகள் உள்ளன. அவற்றைக் காணலாம்.
1. முதல் வழி: டாஸ்க் மானேஜர் (Task Manager) வழியாக: டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்திடவும். இதில் Task Manager என்பதில் கிளிக் செய்திடவும். இந்த விண்டோவில், Performance என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் இகக் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் வலதுபக்கமாக uptime என்று ஒரு வரி காட்டப்பட்டு, அதில் இறுதியாகப் பூட் செய்யப்பட்ட நேரத்திலிருந்து இது வரை எவ்வளவு நேரம் என்பது
காட்டப்படும்.
2. இரண்டாம் வழி: கட்டளைப் புள்ளியிலிருந்து (Command Line): இன்னும் பலர் டாஸ் அமைப்பின் கட்டளைப் புள்ளியில் கட்டளை கொடுத்து, தமக்கு வேண்டியதைப் பெறுவதை விரும்புகின்றனர். இது அவர்களுக்காக — Win+R என்ற கீகளை அழுத்தவும். கிடைக்கும் ரன் விண்டோவில் cmd என டைப் செய்திடவும். பின்னர் கிடைக்கும் விண்டோவில் "systeminfo” என டைப் செய்து எண்டர் தட்டவும். இங்கு இதனை ஒரே கட்டளைச் சொல்லாக டைப் செய்திட வேண்டும். இடையே ஸ்பேஸ் விடக்கூடாது.
ஒரு பெரிய நீளமான விண்டோ கிடைக்கும். இதில் ஸ்குரோல் செய்து சென்று, System Boot Time என்ற வரி எங்கு உள்ளது எனக் காணவும். இது கம்ப்யூட்டர் எப்போது பூட் ஆனது என்பதனைக் காட்டும். இதிலிருந்து, தற்போதைய நேரத்தைக் கணக்கிட்டு, எவ்வளவு நேரமாகக் கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அறியலாம்.

No comments:

Post a Comment