Wednesday, April 30, 2014

ஸ்வஸ்திக் ஆசனம்

1 feet forward to sitting down to 1 1/2 feet of space to extend.
கீழே உட்கார்ந்து கால்களை முன்னோக்கி 1 முதல் 1 1/2 அடி இடைவெளி விட்டு நீட்ட வேண்டும். முதலில் இடது காலின் முட்டியை மடக்கி வலது காலின் உள் தொடையில் படும்படி வைத்துக்கொள்ள வேண்டும். வலதுகாலின் முட்டியை மடக்கி இடது காலின் உள்தொடையில் பாதி படும்படி வைக்க வேண்டும். இரண்டு கால் மூட்டுகளின் மேல் கைகளை வைத்து தியான முத்திரை நிலையில் இருக்க வேண்டும். முதுகும், கழுத்தும் தலையும் நேராக இருக்க வேண்டும். கண்களை மூடிக்கொள்ள வேண்டும். நிதானமாக மூச்சை உள்வாங்கி மெதுவாக வெளிவிட வேண்டும். இவ்வாசனம் செய்யும் முன் மலம், சிறுநீரை வெளியேற்றிவிட வேண்டும்.
பயன்கள்
உடலில் வெப்பநிலையைச் சீராக்கி புறச் சூழ்நிலைக்கேற்ப மூச்சுக்காற்றை நிதானமாக உள்வாங்கி வெளியிடுவதால் தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்படும். தசைகளின் இறுக்கம் குறைந்த நல்ல நிலைக்கு வரும். மன எண்ணங்கள் ஒருமைப்படும். முதுகுத் தண்டுவடத்தில் வலிகள் இருந்தால் அவை நீங்கும். இது இடுப்புக்குச் சிறந்த ஆசனமாகும். நாசிப்பகுதி சுத்தம் அடைந்து, நுரையீரலுக்குச் செல்லும் காற்றின் அளவு அதிகமாகும். இதனால் இரத்தம் சுத்தமடையும். உள்ளுறுப்புகள் பலப்படும். நினைவாற்றலைத் தூண்டும். இந்த ஆசன நிலையில் முத்திரைகளை கடைப்பிடிப்பதால் இதயத் துடிப்பு சீராக இருக்கும். மன அழுத்தம், மன உளைச்சல் நீங்கும். இதய நோயாளிகளும் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இவ்வாசனம் செய்வது நல்லது. சிறுவர் முதல் பெரியவர் வரை செய்யும் எளிய யோகாசன முறை தான் இந்த ஸ்வாஸ்திகாசனம். இதனை தினமும் இருமுறை செய்து வந்தால் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.

No comments:

Post a Comment