Tuesday, May 13, 2014

மன அழுத்தம் குணமாக..

மன அழுத்தம் இப்போது ஒரு நோயாகக் கருதப்படுகிறது. ஆண்களை விட பெண்களே அதிக மன நெருக்கடிக்கு ஆளாகின்றனர். மன நெருக்கடி ஏன் ஏற்படுகிறது, வராமல் எப்படி தடுப்பது, வந்தால் என்ன வைத்தியம் செய்வது?
ஓய்வில்லாத நெருக்கடியால்தான் மன அழுத்தம் ஏற்படுகிறது. ஆண்களுக்கு பெரும்பாலும் வேலைச்சுமையால் இது ஏற்படுகிறது. தொழில் தோல்வியாலும் மனம் பாதிக்கும். மனைவியாலும் சிலருக்கு மனக் கவலை ஏற்படும். இதுவே மனநோயாக ஆகிவிடும்.
கணவன் – மனைவி உறவில் ஏற்படும் சிக்கலால் பெண்கள் மன நோயாளி ஆகின்றனர். இதை வெளியில் சொல்ல முடியாது. மனதுக்குள் வைத்தே மருகி, நோயாளி ஆகிவிடுவர்.
கணவன் – மனைவி பிரிவு, இளம் பெண்களை மிகவும் பாதிக்கும். கணவனை வெளி நாட்டுக்கு அனுப்பிவிட்டு, இங்கே பைத்தியம் போல அலையும் பெண்கள் இருக்கின்றனர். மனநோய் தான் இதற்கு காரணம்.
குடும்பச்சுமை, உடல்நிலை பாதிப்பு, உறவினர் தொல்லையாலும் சில பெண்கள் மன நோயாளி ஆகிவிடுவர்.
மனச்சுமையை இறக்க வடிகால் வேண்டும். இந்த வடிகால் ஆண், பெண் இருவருக்கும் வேறுபடும். ஆண்கள் பொழுதுபோக்குகளை வைத்துக்கொள்ளலாம். விடுமுறை நாட் களில் எல்லா வேலைகளையும் மறந்து விட வேண்டும். மனைவி, பிள்ளைகளுடன், அந்த நாளை உல்லாசமாக களிக்க வேண்டும். மாதம் ஒரு நாளாவது குடும்பத்துடன் வெளியில் போய்வர வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை உல்லாசப்பயணம் செல்லலாம்.
பெண்களுக்கு அரட்டைக் கச்சேரி நல்ல பொழுது போக்கு. தோழிகளுடன் கடைகளுக்குப் போய் வரலாம். தோழிகளின் வீடு, உறவினர் இல்லங்களுக்குப் போய் வருவதும் நல்ல பொழுதுபோக்கு.
வீட்டில், நாய், பூனை, கிளி போன்ற செல்லப் பிராணிகளை வளர்க்கலாம். இது, மன அழுத்ததைத் தணிக்கும்.
மன நோயை உடனே கவனிக்க வேண்டும். முற்ற விட்டு விட்டால், வேறு பல நோய்கள் ஏற்படும். கண்டபடி கத்துவது, சண்டை போடுவது, பொருட்களைத் தூக்கி எறிவது என்று, செய்வதறியாது தவிர்ப்பர். போதிய விழிப்புணர்வு, மருத்துவ அறிவு இல்லாத காலங்களில், மனநோய் பிடித்த பெண்களை பேய் பிடித்தவள் என்று கூறினர். அதற்கு மந்திரம், தந்திரம் செய்வர்.
இந்தக் காலத்தில் மனநோய்க்கு நல்ல மருத்துவம் இருக்கிறது. மனோதத்துவ நிபுணரைப் பார்க்க வேண்டும். அவர் நம்மிடம் பேச்சு கொடுத்து, நம் அடிமனதைப் புரிந்து கொள்வார். அதன்பின் வைத்தியம் துவங்குவார். மன அமைதிக்கும், தூக்கத்திற்கும் மாத்திரை கொடுப்பார். இந்த மருந்து, மாத்திரைகள், நிரந்தரப் பலனளிப்பதில்லை.
எனவே, நம்மை நாமே மகிழ்ச்சியாக இருக்கப் பழக்கிக் கொள்ள வேண்டும். மனக்குறை தீர வேண்டும். அப்போது தான் மனநோய் முழுமையாகக் குணமடையும்.

No comments:

Post a Comment