Sunday, September 14, 2014

வேர்ட்: ஓவர் டைப் நிலை

வேர்ட் புரோகிராமில், ""ஓவர்டைப் நிலை” என்பது, ஏற்கனவே அமைக்கப்பட்ட வரியில், நாம் டை செய்திடும் டெக்ஸ்ட், வலதுபுறமாக இருக்கும் டெக்ஸ்ட்டை நீக்கும் நிலையாகும். இந்த நிலை இயக்கப்படாத போது, நாம் ஏற்கனவே அமைந்த வரியில், டைப் செய்தால், அது இடையே செருகலாக அமைக்கப்படும். எனவே, இந்த செயல் தன்மையை வைத்து, ஓவர் டைப் நிலை இயக்கப்பட்டுள்ளதா என்று அறிந்து கொள்ளலாம். அப்படி இல்லாமல், டாகுமெண்ட் பக்கத்தினைப் பார்த்த நிலையில் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும் எனில், ஸ்டேட்டஸ் பாரில் அதனை அமைத்துக் கொள்ளவும் எளிதான வழி ஒன்று
உள்ளது. இதற்கு ஸ்டேட்டஸ் பாரில் ரைட் கிளிக் செய்து, Overtype option எதிரே டிக் அடையாளத்தினை அமைக்க வேண்டும். உடனேயே, ஓவர்டைப் நிலை இயங்குகிறதா என ஸ்டேட்டஸ் பாரில் காட்டப்படும். "Insert” என ஸ்டேட்டஸ் பாரில் காட்டப்படும். இதனைப் பார்த்தே, ஓவர்டைப் நிலை இயங்கிக் கொண்டிருக்கிறதா என அறியலாம்.
இந்நிலையை அமைக்க மூன்று வழிகள் உள்ளன. முதலாவதாக, Ins கீ பயன் படுத்துவது. ஆனால், இந்த வழியைப் பின்பற்றி அமைக்க, வேர்ட் புரோகிராமினை இந்த கீயினை இவ்வழிக்கு செட் செய்து அமைத்திருக்க வேண்டும். இரண்டாவது வழி, ஸ்டேட்டஸ் பாரில் உள்ள ஓவர்டைப் பாரில் கிளிக் செய்வது. அதாவது, ஏற்கனவே இதனை, இங்கு முதல் பாராவில் குறிப்பிட்டுள்ளபடி, அமைத்திருக்க வேண்டும். மூன்றாவது வழியில் அமைத்திட, கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
1. Word Options டயலாக் பாக்ஸை இயக்கவும். (வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டன் அழுத்தி, பின்னர், Word Options என்பதில் கிளிக் செய்திடவும்) வேர்ட் 2010ல், ரிப்பனில் File டேப் அழுத்தி, அதன் பின்னர், Options கிளிக் செய்திடவும்.
2. டயலாக் பாக்ஸில் இடது பக்கம் Advanced என்பதில் கிளிக் செய்திடவும்.
3. Use Overtype Mode என்ற செக் பாக்ஸில் கிளிக் செய்திடவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

No comments:

Post a Comment