கர்ப்பம் தரிக்க சரியான வயது என்ன ?
கர்ப்பம் தரிப்பதற்கு,
இந்த வயதுகளில் இல்லை எனறால் குழந்தை பிறக்காதா? அப்படிஇல்லை. இந்த வயதுக்கு அப்புறம் வயது அ
திகரிக்க அதிகரிக்க கர்ப்பமாகும் வாய்ப்பு குறைந்து கொண் டே போகும்.
சில புள்ளி விவரங்கள்:
30 வயதில், 75% பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாவார்கள், 91% நான்காண்டுகளில் கர்ப்பமடைந்து விடுவார்கள்.
35 வயதில், 66% பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாவார்கள்,84% நான்காண்டுகளில் கர்ப்பமடைந்து விடுவார்கள். 40 வயதில், 44% பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாவார்கள், 64% நான்காண்டுகளில் கர்ப்பமடைந்து விடுவார்கள்.
ஆண்களின் வயது கர்ப்பத்துக்கு முக்கியம் இல்லையா
இக்கருமுட்டைகள் வயதாக வயதாக, எண்ணிக்கையிலும் ஆரோக் கியத்திலும் தரம் குறைந்து போய்
விடும். ஆனால் ஆண்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு விந்துக்கள்தினம் உருவாகும். ஆண்களுக்கும் விந்து உற்பத்தி மற்றும் ஆரோக்கியம் வயதாக, ஆக, குறையும்.
ஆண்கள் பற்றிய புள்ளி விவரம்:
20–39 வயதில், 90% ஆண்களுக்கு ஆரோக்கியமான
விந்து உற்பத்தியாகும். 40–69வயதில், 50% ஆண்களுக்கு ஆரோக்கியமான விந்து உற்பத்தி யாகும்.
80வயதிற்குமேல், 10%ஆண்களுக்கு ஆரோக்கியமான விந்து உற் பத்தியாகும்.
பெண் வயதுக்கு வந்தபின், சராசரியாக 28 நாட்களுக்கு ஒரு முறை அந்த முட்டைகள் வளர்ச்சி பெற்று பால்லோபிய
ன் குழாய் (Fallopian tube) வழியாய் கீழிறங்கும். இதனைமுட்டை வெளியீடு என்று அழைப்பார்கள், ஆங் கிலத்தில் இதற்கு ஓவுலஷன் (ovulation) என்று பெயர்.
கர்ப்பம் தரிக்க ஏதுவான நாட்கள் எவை:


உங்கள் முட்டை வெளிவரும்போது, அதாவது ஒவுலஷன் (Ovulation) நடக்கும்போது, அதற்கு இரண்டு நாட்கள் முன்னாலும், இரண்டு நாட்கள் பின்னா லும், உடலுறவு கொள்வது மிகுந்த பய னளிக்கும். முட்டை வெளியீடு (Ovulation) காலம் நடக்கிறது என்று எப்படிதெரிந்துகொள்வது?இந்நாட்களில் உடலில் பல மாற்றங்கள் நடக்கும். அவற்றை கவனித்து உங்களுக்கு இந்த நிகழ்வு நடக்கிறது என்று அறி ந்து கொள்ளலாம்.
2
. மேலும், உங்கள் மார்பகங்கள் மென்மையாக ஆகும். வயிறு பிடிக்கும் (belly cramps), காம வேட்கை அதிகரித்தல், ரத்தச்சொட்டுக்கறை (spotting), உங்கள் கணவருக்கு அருகிலேயே இருக்கத் தோன்றும்.
3
. முட்டை கருப்பையில் இருந்து வெளி வந்தததும் உங்கள் உடல் வெப்பம் 0.4°F – 0.8°F அதிகமாகும். நீங்கள் டிஜிட்டல் தெர்மாமீட்டர் (Digital Thermo meter) ஒன்றை கடையிலிருந்து வாங்கி வந்து, உங்கள் உடல் வெப்பத்தை பட்டியல்
போட்டு, இந்த காலத்தை கண்டு பிடிக்கலாம். இதற்கான பட்டியல் மாதிரி களை இப்போது இணையங்களிலே யே தருகிறார்கள். இதன் மாதிரியை நீங்கள் இங்கே டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
http://www.storknet.com/cubbies/preconception/bbt-blank.pdf
http://www.storknet.com/cubbies/preconception/bbt-blank.pdf
4. உங்களுக்கு மாத விலக்கு ரொம்ப சீராகவும், சரியா
க 28 நாட்களுக்கு ஒரு முறையும் நடந்தால், உங்கள் முட்டை வெளியீடு (Ovulation) நாள் சரி யாக 14 ஆம் நாள் நடக்கும். உங்களுக்கு மாதவிலக்கு சீராக வரவில்லை என்று சொன்னால், முட்டை வெளியீடு நாள் என்பது, உங்கள் மாத வில
க்கு ஆரம்பிக்கும் நாளிலிருந்து சரியாக 14 நாட்கள் முன்னால் நடக்கும். உதாரணமாக, உங்க ள் மாதவிலக்கு சுழற்சி 31 நாட் கள் என்றால், உங்கள் முட்டை வெளியீடு நாள் 31- 14 = 17. 17 ஆம் நாள்தான் உங்கள்முட்டை வெளியீட்டுநாள். இதுதவிர ovulation testing kits போ
ன்ற பொருட்கள் இப்போதெல்லாம் புழக்கத்தில் உள்ளன. அவை உங்கள் சிறுநீரில் உள்ள ஹார்மோன் அளவைக் கொண்டு உங்கள் முட்டை வெளியீட்டுநேரத்தை சரியாக சொல்லி விடும்.

உடலுறவின் போது நீங்கள், எண்ணெய், எச்சில், ஜெல் போன்றவை பயன்படுத்தினால், அவற்றை நிறுத்திவிடுங்க ள். ஏனென்றால் இவை விந்துவுக்கு ஆபத்து விளை
வி க்கும். குழந்தைகளுக்கான எண்ணெய் (baby oil) தான் ஓரளவு ஆபத்து இல்லாதது. முடிந்த வரை எந்த விதமான லூப் ரிகன்ட் (Lubricant) பொருட்களை உப யோகிக்காமல் இருப்பதே நல்லது.
பலபெண்கள் உடலுறவு முடிந்ததும் தங்கள் பெண்குறியை சுத்தம் செய்யபலதிரவங்களையு ம், தண்ணீரையும் உள்ளே பீய்ச்சி அ டிக்கிறார்கள். இதை Vaginal Douche என்று ஆங்கிலத்தில் என்று சொல்வார்கள். நீங்கள் கருப்பிடிக்க நினஈகும் கட்டத்தில் இதனை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இத்திரவங்கள் விந்துவைக் கொல்வதுடன், பெண்ணுறுப்பில் உள்ள திரவங்களின் தன்மையையும் மாற்றி கர்ப்பமடைய விடாமல் தடுக்கும்.
No comments:
Post a Comment