Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Friday, May 10, 2013

பி.டி.எப். பைல்களைப் பிரித்து இணைக்க

பைல்களைச் சிக்கலின்றி பிறர் அறிந்து கொள்ளும் முறையில் அமைக்க பி.டி.எப். பார்மட்டில் அமைந்துள்ள பைல்கள் உதவுகின்றன. எழுத்து வகைகள் இல்லாதபோது, எந்த வகை சிஸ்டத்திலும் இயக்கிப் படிக்க இவை உதவு கின்றன. போர்டபிள் டாகு மெண்ட் பைல் என அழைக்கப்படும் இவை கம்ப்யூட்டர் பயனாளர்கள் அனைவரும் விரும்பும் ஒரு வகை ஆகும். 
சில வேளைகளில் நாம் ஒன்றுக்கு மேற்பட்ட பி.டி.எப். பைல்களை இணைக்க விரும்பு வோம். அல்லது ஒவ்வொரு பைலில் இருந்தும் சில பகுதிகளை எடுத்து புதிய பைலாக அமைக்க விரும்புவோம். இதற்கு நமக்கு அதன் சோர்ஸ் எனப்படும் மூல பைல் தேவைப்படும். அவை இல்லாத போது, பிரிவுகளை இணைக்க இயலாமல், ஒவ்வொன்றையும் புதிய பைல் போன்று டைப் செய்திட முயற்சிப்போம். இந்த சிக்கலைத் தீர்க்க GiosPSM என்னும் புரோகிராம் நமக்கு உதவுகிறது. 
GiosPSM (GiosPdf Splitter and Merger) என்பது. பி.டி.எப். பைல்களைக் கையாள ஓப்பன் சோர்ஸ் முறையில் அமைக்கப்பட்ட புரோகிராம் இது. இது 145 கேபி அளவிலான சிறிய எக்ஸிகியூட்டபிள் பைல். போர்ட்டபிள் வகையாக இதனைப் பயன்படுத்தலாம். டாட் நெட் பிரேமில் செயல்படுகிறது. இந்த புரோகிராமினை இயக்கிவிட்டு, பி.டி.எப். பைல்களை ட்ராக் அண்ட் ட்ராப் முறையில், இழுத்துச் சென்று இந்த புரோகிராமின் லிஸ்ட்டில் விட்டுவிடலாம். எத்தனை பி.டி.எப். பைல்களை வேண்டுமானாலும், மொத்தமாகப் பட்டியலிட்டு இணைத்து ஒரு பைலாக மாற்றலாம். குறிப்பிட்ட பக்கங்களை மட்டும் ஒவ்வொரு பைலிலும் தேர்ந்தெடுத்து இணைக்க விரும்பினாலும், இந்த புரோகிராம் அதற்கான வழிகளைத் தருகிறது. 
இந்த புரோகிராமைப் பயன்படுத்துவதில் இருக்கின்ற ஒரு சின்ன சிக்கலைச் சொல்லியே ஆக வேண்டும். சில நேரங்களில் பைல்களை இணைக்கையில் இது கிராஷ் ஆகிறது. ஆனால் இதனால் எந்த பிரச்னையும் ஏற்பட்டதில்லை. 
இதனை இலவசமாக டவுண்லோட் செய்திடhttp://www.paologios.com/products/?type=bin என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். 
இதே போல இன்னொரு பைலும் நமக்கு இணையத்தில் கிடைக்கிறது. அதன் பெயர் Adolix Split and Merge PDF: பி.டி.எப். பைல்களை இணைக்கவும் பிரிக்கவும் இந்த பைல் உதவுகிறது. இதன் இயக்க எளிமை அனைவருக்கும் பிடித்திருக்கிறது. இதனை http://www.adolix.com/splitmergepdf/என்ற தளத்தில் பெறலாம். பெற்று டவுண் லோட் செய்து, பின் இன்ஸ்டால் செய்த பின், இந்த வேலைகளுக்கு நம்மை எளிதாக வழி நடத்திச் செல்லும் வகையில், இந்த புரோகிராமில் யூசர் இன்டர்பேஸ் தரப்பட்டுள்ளது. இந்த புரோகிராமின் உள்ளாக அமைக்கப் பட்டுள்ள மெனு, விண்டோஸ் எக்ஸ் புளோரரில் வேலை செய்கிறது. மிக எளிதாக பைல்களைத் தேர்ந்தெடுக்கவும், பிரிக்கவும், இணைக்கவும் வழி தருகிறது. இந்த பைல் அளவு 2.7 எம்.பி மட்டுமே.

No comments: