நாம் டாகுமெண்ட்களை எம்.எஸ். வேர்ட் மூலம் தயாரிக்கையில், டாகுமெண்ட் குறித்த பல்வேறு தகவல்களை, வேர்ட் தொடர்ந்து சேகரிக்கிறது. பைல் பெயர், டைரக்டரி, டெம்ப்ளேட், டாகுமெண்ட்டின் தலைப்பு போன்றவை மிக சாதாரணமாக சேகரிக்கப்படும் தகவல்களாகும். ஆனால், இவற்றோடு, யார் இறுதியாக அந்த டாகுமெண்ட்டினைக் கையாண்டார்கள், இறுதியாக எப்போது அது அச்சிடப்பட்டது, டாகுமெண்ட்டினை திருத்த எடுத்துக் கொள்ளப் பட்ட மொத்த நேரம் எனப் பிற தகவல்களும் எடுக்கப்படுகின்றன.
டாகுமெண்ட் ஒன்றின் புள்ளி விபரங்களைக் காண உங்களுக்

கு ஆவலாக இருந்தால், கீழ்க்குறித்துள்ளபடி செயல்படவும். வேர்ட் 2007 தொகுப்பில்,
1. Office பட்டன் கிளிக் செய்து, Prepare | Properties. என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட், டாகுமெண்ட் மேலாக Document Information Panel என்பதனைக் காட்டும்.
2. இந்த பேனலில், மேல் இடது புறம் உள்ள Document Properties என்னும் கீழ்விரி மெனுவினைப் பயன்படுத்தவும். இதில் Advanced Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Properties என்னும் டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
3. இதில் Statistics என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது, ஏற்கனவே மேலே சொல்லியபடி, டயலாக் பாக்ஸ், டாகுமெண்ட் குறித்த புள்ளி விபரங்களைக் காட்டும். புள்ளி விபரங்களை ஆய்வு செய்த பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
நீங்கள் வேர்ட் 2010 பயன்படுத்துபவராக இருந்தால்,
1. ரிப்பனில் File டேப்பினைக் கிளிக் செய்திடவும். அடுத்து Info | Properties | Advanced Properties எனத் தொடர்ந்து செல்லவும். வேர்ட் Properties டயலாக் பாக்ஸினைக் காட்டும்.
2. இதில் Statistics என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது, ஏற்கனவே மேலே சொல்லியபடி, டயலாக் பாக்ஸ், டாகுமெண்ட் குறித்த புள்ளி விபரங்களைக் காட்டும். புள்ளி விபரங்களை ஆய்வு செய்த பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

No comments:
Post a Comment