Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Saturday, April 12, 2014

பழங்கள் அதிகம் சாப்பிடும் பெண்களுக்கு இதய நோய் குறைவு


அமெரிக்கா: அமெரிக்காவில் இதய நோய் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிக அளவில் எடுத்துக்கொண்டால் பெண்களுக்கு இதய நோய்கள் உருவாகும் ஆபத்து குறைவு என்று கூறுகின்றனர். 20 வருடங்களுக்கு பின்னர் ஒப்பிடும்போது பழங்கள் அதிகம் உண்ணும் பெண்களுக்கு குறைந்த பிளேக்-அதிகரிப்பு தன்மைகள் தமனியில் உருவாகின்றன. இதனால் இதய நோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களை தவிர்க்கமுடியும் என்றும் தகவல் அளித்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சி கண்டுபிடிப்பில் இந்த நன்மை ஆண்களுக்கு அனுகூலம் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.  பிளேக்-அதிகரிப்பு  வாழ்நாள் முழுவதும் உருவாகக்கூடிய தன்மைகள் ஆகும். ஆனால் இதனை சிறந்த டயட் கண்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்தமுடியும் என்று அமெரிக்காவை சேர்ந்த ஒரு இதயம் சார்ந்த மருத்துவர் தெரிவித்தார்.
இந்த ஆராய்ச்சியில் 20 வயதில் பெண்கள் ஒரு நாளைக்கு 2000 கலோரி டயட் மேற்கொண்டால் 40 வயதின் போது தமனியில் பிளேக்-அதிகரிப்பு தன்மைகள் 40சதவிதம் குறைந்துள்ள நிலையில் இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

No comments: