எம்..எஸ். ஆபீஸ் 2007 மற்றும் ஆபீஸ் 2010 ஆகிய தொகுப்புகளில், சிறந்த ஒரு குறிப்பிடத்தக்க வசதி, ஆட்டோ ரெகவர் வசதி ஆகும். இதன் மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில், ஆபீஸ் அப்ளிகேஷனில் அமைக்கப்படும் டேட்டாவினைத் தானாக சேவ் செய்து வைக்கும்படி செய்திடலாம். இதனால், மின்சக்தி இல்லாமல், கம்ப்யூட்டர் முடங்கும் காலத்தில், அல்லது விண்டோஸ் கிராஷ் ஆகும்போது, நம் டேட்டா நமக்குக் கிடைக்கும். இந்த கால இடைவெளியை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம்.
அனைத்து ஆபீஸ் 2007 அப்ளிகேஷன் புரோகிராம்களிலும், இந்த கால இடைவெளி, மாறா நிலையில் 10 நிமிடங்களாக அமைக்கப்படுகிறது. இதனை நாம் எந்த அளவிலும் வைத்துக் கொள்லலாம். எடுத்துக்காட்டாக 5 நிமிடங்களாக இதனை செட் செய்தால், நீங்கள் எந்த அப்ளிகேஷன் புரோகிராமில் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், ஒவ்வொரு 5 நிமிடத்திற்கு ஒரு முறை, நீங்கள் அமைத்த டேட்டா அனைத்தும் உள்ள பைலாக அது சேவ் செய்யப்பட்டுக் கொண்டே இருக்கும். இதனை எப்படி எக்ஸெல் புரோகிராமில் அமைப்பது என பார்க்கலாம்.
1. ஆபீஸ் பட்டனில் கிளிக் செய்திடவும்.
2. கிடைக்கும் மெனுவின் கீழாக "Excel Options” என்று உள்ள பட்டனில் கிளிக் செய்திடவும்.
3. இப்போது "Excel Options” டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் உள்ள மெனுவின் இடது பக்கமாக உள்ள Save என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. இங்கு "Save AutoRecover information” என்று உள்ள இடத்தில் காட்டப்பட்டுள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை இடவும்.
5. எத்தனை நிமிட இடைவெளியில், எக்ஸெல் டேட்டாவினை சேவ் செய்திட வேண்டும் என்பதனை முடிவு செய்திடவும்.
6. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இதனை ஆபீஸ் 2003 தொகுப்பிலும் மேற்கொள்ளலாம். எக்ஸெல் தொகுப்பினைத் திறந்து Tools> Options எனச் செல்லவும். கிடைக்கும் டயலாக் பாக்ஸில், Save டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Settings என்ற தலைப்பின் கீழ், முதல் பிரிவாக Save Autorecover info every எனக் காட்டப்பட்டு, தொடர்ச்சியாக நிமிடத்தை செட் செய்திட சிறிய கட்டம் ஒன்று மேல், கீழ் அம்புக் குறிகளுடன் காட்டப்படும். இதனை இயக்கி, நீங்கள் விரும்பும் நிமிட இடைவெளியை செட் செய்திடலாம். இங்கு கால இடைவெளியை ஒரு நிமிடமாகக் கூட செட் செய்திடலாம். ஆனால், அது சரியல்ல. இதனால், பெரிய ஒர்க்ஷீட்களில் செயல்படுகையில், ஆட்டோ ரெகவர் செயல்பாட்டினால், செயல்படுவது தாம தமாகும்.
No comments:
Post a Comment