Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Saturday, March 29, 2014

டவுண்லோட் செய்த பைலில் வைரஸ் உள்ளதா?



நீங்கள் ஏதேனும் பைல் ஒன்றை டவுண்லோட் செய்கையில், திடீரென அதே தளத்திலிருந்து, "Yourantivirus will complain that this download is a virus, but don’t worry — it’s a false positive.” என செய்தி கிடைக்கும். ""உங்கள் ஆண்ட்டி வைரஸ் இந்த பைலை வைரஸ் எனச் சொன்னால், கவலைப்பட வேண்டாம். இது தவறான உறுதி” என்ற பொருளில் இது தரப்படுகிறது. இதனைக் கண்ணுற்ற சிலர் தொடர்வார்கள். சிலரோ, "எதற்கு வம்பு” என, டவுண்லோட் செய்வதனை நிறுத்திவிடுவார்கள். சரியான உண்மையை எப்படி அறிவது? இது சரிதான் என்று நீங்கள் எண்ணி, டவுண்லோட் செய்தாலும், ஏன், இது போன்ற செய்தியைக் கூறியே, மால்வேர்களைச் சிலர் நம் கம்ப்யூட்டருக்குள் அனுப்பலாமே என்ற சந்தேகமும் நமக்குக் கிடைக்கும். பின் எப்படித்தான் சந்தேகத்தினைத் தீர்த்துக் கொள்ளலாம்?
1. வைரஸ் டோட்டல் அனுப்பவும்: அனைத்து ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களும் ஒரே தப்பை செய்திடாது. எனவே, டவுண்லோட் ஆகும் பைலைத் திறந்து பார்க்காமல், https://www.virustotal.com/ என்ற இணையதளம் செல்லவும். சந்தேகத்திற்கு இடமான பைலை அப்லோட் செய்திடவும். இங்கு 45 வெவ்வேறான ஆண்ட்டி வைரஸ் கொண்டு, உங்கள் பைலில் வைரஸ் உள்ளதா எனச் சோதனையிடப்பட்டு, முடிவுகள் காட்டப்படும். சில முடிவுகள், வைரஸ் என்று சொன்னால், நிச்சயம் அந்த பைலைச் சந்தேகப்பட வேண்டும்.
2.டவுண்லோட் செய்த தளத்தை சந்தேகப்படு: வைரஸ் உள்ளது எனச் சந்தேகப்பட்டால், எந்த தளத்திலிருந்து இந்த பைல் டவுண்லோட் செய்யப்பட்டதோ, அந்த தளத்தைச் சந்தேகப்பட வேண்டியதுதான். நீங்கள் கூகுள் தேடல் மூலம் இந்த பைல் இருக்கும் தளத்தை அறிந்து, அந்த பைலை இன்னொரு தர்ட் பார்ட்டி தளத்திலிருந்து பெற்றிருந்தால், நிச்சயம் அது வைரஸாக இருக்கலாம். ஆனால், பைல் தயாரித்து வழங்கும் நிறுவனத்தின் இணைய தளத்திலிருந்தே பெற்றிருந்தால், இணைய தளம், வைரஸால் தாக்கப்பட்டு, போலியான ஒன்றாக அமைக்கப்பட்டிருக்கும்.
3.மால்வேர் குறித்து சோதனை: உங்களுடைய ஆண்ட்டி வைரஸ், குறிப்பிட்ட பைலை மால்வேர் எனக் குறிப்பிட்டால், நிச்சயம் அதற்கு ஒரு பெயரைச் சுட்டிக் காட்டும்.இந்த பெயரை, கூகுள் தேடல் தளத்தில் கொடுத்துத் தேடினால், இந்த வைரஸ் பற்றிய தகவல்களும், அது எப்படி எல்லாம் பரவுகிறது என்றும் தகவல்கள் கிடைக்கும். இவற்றைக் கொண்டு, அந்த பைல் மற்றும் அது கொண்டு வரும் வைரஸ் குறித்து அறியலாம்.
ஆனால், பொதுவான ஓர் எச்சரிக்கையை நாம் மனதில் கொள்ள வேண்டும். ஏதேனும் ஒரு வகையில், பைல் ஒன்று வைரஸ் ஆக இருக்கும் என அறிந்தால், அதனை இயக்காமல் இருப்பது நல்லது. இறக்கியிருந்தால், அழித்துவிடுவது நல்லது.

No comments: