TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ணப்பம் பெற கட்டணம் ரூபாய் 50 | விண்ணப்பங்கள்கிடைக்கும் இடங்கள் - தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி வளாகங்கள்...
www.smartnews.kalvisolai.com | TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ணப்பம் பெற கட்டணம் ரூபாய் 50 | விண்ணப்பங்கள்கிடைக்கும் இடங்கள் - தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி வளாகங்கள்...
Featured Post
TNTET 2017 BREAKING NEWS
TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...
Tuesday, February 7, 2017
TNTET 2017 BREAKING NEWS
Saturday, January 28, 2017
SMART AND RATION CARD PROGRAM: SHOCKING INFORMATION! CIVILIANS ALERTS!
அன்பார்ந்த பொதுமக்களே தமிழகம் முழுவதும் தற்போதுள்ள ரேசன்கார்டுகளுக்கு பதிலாக ஸ்மார்ட் ரேசன்கார்டுகள் ஏப்ரல் மாதத்திலிருந்து வழங்கப் போவதாக அரசு அறிவித்துள்ளது.
இந்த ஸ்மார்ட் ரேசன்கார்டில் மிகப்பெரிய அதிர்ச்சி உங்களுக்கு காத்திருக்கிறது. அது என்னவென்று தெரியுமா? ஸ்மார்ட் கார்டு திட்டத்திற்காக வீடு வாரியாக தற்போது கணக்கெடுப்பு நடந்து கொண்டிருக்கிறது.
அதில் உங்களைப் பற்றி விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. சில இடங்களில் வீட்டிற்கு வந்து விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. சில இடங்களில் விஏஓ ஆபீசில் வைத்தோ அல்லது ரேசன் கடையில் வைத்ததோ உங்கள் விபரங்களை பதிவு செய்கிறார்கள்.
இதில் தான் மிகப்பெரிய மோசடி நடக்கிறது. அதில் PHH மற்றும் NPHH என இரண்டு வகையாக பதிவு செய்கிறார்கள். PHH என்றால் அவர் ஏழை என்று அர்த்தம். NPHH என்றால் பணக்காரன் என்று அர்த்தம்.
அதாவது NPHH என்று பதிவு செய்யப்பட்டால் அந்த ரேசன்கார்டுக்கு இனிமேல் எந்தவித சலுகையும் கிடையாது. பணக்காரன் என்பதால் அரசு வழங்கும் எந்த இலவசமும் கிடையாது.
மேலும், கேஸ் சிலிண்டருக்கு மானியம் கிடையாது 1000 ரூபாய் கட்ட வேண்டும். கரண்ட் பில் சலுகை, 100 நாள் வேலை போன்ற எந்த அரசு சலுகையும் கிடையாது.
ஸ்மார்ட் ரேசன் கார்டு என்பது ஏடிஎம் கார்டு போல் உள்ளதால் அதில் என்ன இருக்கிறது என்ன உங்களுக்கு தெரியாது. இந்த ஸ்மார்ட் கார்டை மிஷினில் போட்டவுடன் உங்களை பற்றிய எல்லா விபரங்களும் தெரிந்துவிடும்.
இவ்வாறு கணக்கெடுத்ததை குடியரசுதினத்தன்று ஜனவரி 26ல் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஊரிலும் பொதுமக்கள் கிராம சபையில் வைத்து ஒப்புதல் வாங்கப் போகிறார்கள்.
தற்போது பஞ்சாயத்து தலைவரோ, வார்டு மெம்பரோ இல்லாததால் அரசு அதிகாரிகளே கிராமத்தல் அவங்களுக்கு நம்பிக்கையான சிலரிடம் மட்டும் கையெழுத்து வாங்கி கிராமசபையில் ஒப்புதல் வாங்கியதாக அரசுக்கு கொடுக்கப் போகிறார்கள்.
இவ்வாறு கிராம சபையில் ஒப்புதல் வாங்கிவிட்டால் அதை மாற்றம் செய்யவே முடியாது. எனவே குடியரசு தினத்தில் உங்கள் ஊரில் ஒப்பதல் வாங்கும் போது உங்கள் ரேசன்கடைக்காரரிடம் கேட்டு உங்கள் வீட்டு ரேசன்கார்டை சரிபார்த்து கொள்ளுங்கள். அதாவது உங்கள் ரேசன் கார்டில் PHH என உள்ளதா இல்லை NPHH என உள்ளதா என்று சரிபார்த்து கொள்ளுங்கள்.
படித்த இளைஞர்களே! ஜல்லிக்கட்டிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி புரட்சி செய்தது போல் இந்த ஸ்மார்ட் ரேசன் கார்டு திட்டத்திற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். உங்கள் அப்பா, அம்மாவோ அல்லது தெரிந்தவர்களோ படிப்பறிவு இல்லாதவர்களாக இருக்கலாம் அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
ரேசன் கடைக்கு சென்று உங்கள் ரேசன்கார்டை பதிவு செய்யும் போது அதன் விபரங்கள் பற்றி கேளுங்கள். அதில் தவறு இருந்தால் கையெழுத்து போடாதீர்கள். லிஸ்ட்டை காட்ட மறுத்தால் தாலுகா ஆபீஸ் அல்லது கலெக்டர் ஆபீஸிலேயோ புகார் செய்யுங்கள்.
ஸ்மார்ட் கார்டு திட்டத்தில் நடக்கு இந்த மோசடி பற்றி பகீர் தகவல்கள் வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
Subscribe to:
Posts (Atom)