வேர்ட் புரோகிராமில், டெக்ஸ்ட்டின் இலக்கணத்தைச் சோதனை செய்திடும் முழுமையான புரோகிராம் ஒன்று உள்ளது. பொதுவான இலக்கணப் பிழைகளை இது சுட்டிக் காட்டும். ஒவ்வொரு இலக்கணப் பிழையும் சுட்டிக் காட்டி, அதனைத் திருத்தி அமைப்பதற்கான சந்தர்ப்பத்தினையும் தரும். வேர்ட் புரோகிராமில், பல வகையான டெக்ஸ்ட் ஸ்டைல்கள் வடிவமைத்துத் தரப்பட்டுள்ளன. நீங்கள் இலக்கணப்பிழை சுட்டியை இயக்குகையில், இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். ஒவ்வொரு ஸ்டைலும், அதற்கென பல இலக்கண விதிகளைக் கொண்டிருக்கும். சில வகை ஸ்டைல், கட்டாயம் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகளைக் கொண்டு, அவை பின்பற்றப்படுகின்றனவா எனக் கண்காணிக்கும். வேறு சில, வளைந்து கொடுக்கும் தன்மை கொண்ட இலக்கண விதிகளைப் பின்பற்றும். உங்கள் டாகுமெண்ட்டிற்கு ஏற்ற விதிமுறைகளைக் கொண்டுள்ள ஸ்டைலை நீங்கள் தேர்ந்தெடுத்து, இலக்கணப் பிழை சோதனையை மேற்கொள்ளலாம். இதனைத் தேர்ந்தெடுக்கும் வழி கீழே தரப்பட்டுள்ளது.
1. முதலில் Word Options டயலாக் பாக்ஸைத் திறக்க வேண்டும். வேர்ட் 2007 தொகுப்பில், ஆபீஸ் பட்டனை அழுத்திக் கிடைக்கும் விண்டோவில், Word Options என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் 2010ல், ரிப்பனில் உள்ள File டேப்பினைத் திறந்து, பின்னர் Options என்பதில் கிளிக் செய்திடவும்.
2. அடுத்து டயலாக் பாக்ஸின் இடது பக்கத்தில் உள்ள Proofing என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. அடுத்து Settings என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். வேர்ட் Grammar Settings டயலாக் பாக்ஸினைக் காட்டும்.
4. இங்கு உள்ள Writing Style கீழ்விரி மெனுவில், இலக்கணம் மட்டும் சோதனையிட வேண்டுமா? அல்லது, ஸ்டைல் சேர்த்து பிழைகள் உள்ளனவா என்று பார்க்க வேண்டுமா? என்பதனை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
5. நீங்கள் இந்த சோதனையில், எந்த வகை ஸ்டைல் மற்றும் இலக்கண பிழை சோதனை தேவை என்பதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர், அடுத்தடுத்து இரண்டு முறை ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

No comments:
Post a Comment