Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Thursday, October 17, 2013

கேஸ் இணைப்பு... பெயர் மாற்றம் செய்வது எப்படி? -- உபயோகமான தகவல்கள்,

கேஸ் இணைப்பு... பெயர் மாற்றம் செய்வது எப்படி?

எனது மகளின் பெயரில் கேஸ் இணைப்பு வாங்கி இருந்தோம். இப்போது என் மகளுக்கு திருமணம் ஆகிவிட்டதால் அந்த இணைப்பை என் பெயருக்கு மாற்ற என்ன செய்ய வேண்டும்?

 இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அளிக்கப்பட்ட பதில்.''கேஸ் இணைப்பை உங்கள் பெயருக்கு மாற்றுவது மிகவும் எளிது. இதற்கான விண்ணப்பம் உங்களின் கேஸ் விநியோகஸ்தரிடம் இருக்கும். இதற்கு உங்கள் மகளின் கணவரிடமிருந்து ஆட்சேபனை இல்லை என கடிதம் வாங்கித் தரவேண்டும். அதேபோல, உங்கள் மகளும் 'என் பெயரில் உள்ள கேஸ் இணைப்பை என்னுடைய தந்தை பெயருக்கு மாற்றிக்கொடுக்க எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை’ என ஒரு கடிதம் தரவேண்டும்.இந்த இரண்டையும் உங்கள் கேஸ் இணைப்பு உள்ள அலுவலகத்தில் தரவேண்டும். அதன்பிறகு விநியோகஸ்தர் அலுவலகத்தில் உள்ளவர்கள் உங்களுடைய பெயர் அல்லது உங்களின் குடும்ப உறுப்பினர் பெயரில் வேறு ஏதாவது  கேஸ் இணைப்பு உள்ளதா என்பதை நேரில் ஆய்வு செய்வார்கள். இதில் எந்தப் பிரச்னையும் இல்லையென்றால் கேஸ் இணைப்பை உங்கள் பெயருக்கு மாற்றித் தருவார்கள். இந்தக் காலகட்டத்தில் உங்களுக்கு கேஸ் விநியோகம் செய்ய மாட்டார்கள்.''

No comments: