Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Monday, November 25, 2013

வலிக்கு குட்பை


அறுவை சிகிச்சைக்குப் பின்பு ஸ்ட்ரோக் ஏற்பட்ட பின்பு, அல்லது சாதாரணமாகவே மூட்டு வலி, முதுகுவலி என்று ஏற்பட்ட பின்பு, பிசியோதெரபி செய்து கொள்ள பரிந்துரைக்கப்படுவாரகள். பெரிய மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட்கள், நோயாளிகளுக்குப் பயிற்சிகளோ, டிராக்ஷனோ தருவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இதெல்லாம் இல்லாமலேயே செய்யப்படுவதுதான் "மேனுபுலே டிவ் பிசியோதெரபி’. டாக்டர் சி.ஆனந்த ஜோதி, இத்துறையில் ஆஸ்திரேலியாவில் படித்துவிட்டு, சென்னையில் சிகிச்சை அளித்து வருகிறார். அவரிடம் பேசினோம்: 
நார்மல் பிசியோதெரபிக்கும் மேனுபுலேடிங் பிசியோதெரபிக்கும் என்ன வித்தியாசம்?
நார்மல் பிசியோதெரபியில் வலி எங்கே ஏற்படுதோ அங்கே மட்டும் கவனம் செலுத்தி, வைத்தியம் பார்ப்பார்கள். நாங்க, வலியோட மூலக்காரணத்தைத் தேடி போவோம். எல்லாத்துக்கும் ஒரே டிராக்ஷன், ஒரே பயிற்சி சரியா வராது. வலி எங்க ஏற்படுதுன்னு பார்த்து, அது எதனாலெல்லாம் ஏற்படலாம்னு யோசிச்சு, துல்லியமா அது எந்த நரம்புல, எந்த தசையில் பாதிப்பு ஏற்படத்தியிருக்குன்னு கண்டுபிடிச்சு வைத்தியம் பார்ப்போம். 
வலி ஏன் ஏற்படுத? 
உடலோட அசைவுகளும் தோரணைகளும்தான் எல்லாத்துக்கும் அடிப்படைக் காரணம். ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு நிலையில் இயல்பா இருந்தா வலியே ஏற்படாது. ஆனால், நாம் அப்படி இருக்கிறது இல்லை.வண்டியோட்டும்போது, கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்திருக்கும் போது, படிக்கம்போது, சாப்பிடும்போது எல்லாம் நாம் தேவையில்லாமல் பல உறுப்புகள் மேல் அழுத்தம் கொடுக்கிறோம். அந்த அழுத்தம் அதிகமாக அதிகமாக வலியும் வேதனையும் அதிகமாயிடுது. 
எப்படி வலியைச் சரிசெய்வீர்கள்? 
முதல்ல பேஷன்டோட பல்வேறு பொசிஷன்களைக் கவனிப்போம். அவர் வலி சொல் இடத்தோட தொடர்புடைய நரம்புகளையும் தசைகளையும் ஆராய்வோம். துல்லியமா எந்த நரம்புல, எந்தத் தசையில பிரச்னைன்னு கண்டுபிடிச்சு, அதைக் கையாலேயே பிடிச்சுவிட்டு, நீவிவிட்டு பிசியோதெரபி செய்து குணப்படுத்தவோம். 
கையாலேயே பிசியோதெரபியா? 
ஆமாம். அதுதான் இதனோட சிறப்பு. அதுதான் பாதுகாப்பும்கூட. எந்த நரம்புல, எந்தத் தசையில என்ன அளவுக்கு அழுத்தம் கொடுக்கணும், எவ்வளவு சீரா கொடுக்கணும் எல்லாம் பயிற்சி பெற்ற பிசியோதெரபிஸ்டுகளால்தான் சொல்ல முடியும்; செய்ய முடியும். 
அப்படின்னா, அவங்களால திரும்பி நார்மல் வாழ்க்கைக்கு வந்துடமுடியுமா? 
நிச்சயம். முதல்ல வலியை நீக்கிவிட்டு, அப்பறம் என்ன பயிற்சிகள், ஒழுங்குகளைக் கடைபிடிச்சா, திரும்பியும் வலி வராதுன்னு அவங்களுக்கு சொல்லிக் கொடுத்த அனுப்புறோம். அதனால அவங்க தங்களோட உடம்பைப் பத்திரமா பாத்துக்க முடியுது. 
என்னவிதமான வலிகள் மக்களிடம் அதிகமா இருக்கு? 
முதுகுவலி, கழுத்துவலி, மூட்டுவலி. 
வலியே இல்லாம வாழமுடியாதா? 
தாராளமா வாழலாம். நாங்க ஸ்கூல் பசங்க முதற்கொண்டு எல்லா தரப்பினர்கிட்டேயும் விழிப்புணர்வு ஏற்படுத்திக்கிட்டு வர்றோம். சரியாக உட்காருவது எப்படி, வண்டியோட்டுவது எப்படி, உண்ணுவது எப்படின்னு ஒவ்வொரு விஷயத்தையும் புரியவைக்கிறோம். உடல் தசைகளையும் நரம்புகளையும் எலும்புகளையும் ஒழுங்கா பார்த்துகிட்டாவே போதும் வலி இருக்காது.

No comments: