கம்ப்யூட்டர் பயன்பாட்டில், பல சொற்களை நாம் புதிது புதிதாய் சந்திக்கிறோம். ஒவ்வொரு புதிய அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பு கிடைக்கும்போதும், நமக்கு ஏதாவது தொழில் நுட்ப சொல் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
1. Pinned: பின் செய்யப்பட்ட அல்லது குத்தி வைக்கப்பட்ட என்ற பொருளைக் கொண்ட இந்த சொல், விண்டோஸ் சிஸ்டத்தில், நாம் அடிக்கடி பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களை, உடனடியாக எடுத்துப் பயன்படுத்தும் வகையில் அமைப்பதனைக் குறிக்கிறது. அப்ளிகேஷன்கள் மட்டுமின்றி, புரோகிராம்கள், இணைய தளங்களுக்கான லிங்க்

என எதனையும் பின் செய்து வைக்கலாம். இவற்றை ஒரு மெனுவில் வைத்து, நாம் விரும்பும்போது இயக்கலாம். எடுத்துக் காட்டாக, விண்டோஸ் விஸ்டா ஸ்டார்ட் மெனு, இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலாக உள்ள பாதிப் பிரிவு, இது போன்ற பின் செய்யப்படும் புரோகிராம்களுக்கானது. எந்த புரோகிராம்களை எல்லாம் நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோமோ, அவற்றை இதில் பதிந்து வைக்கலாம்.
2. Email harvesting: டிஜிட்டல் உலகத்தில், ஏற்றுக் கொள்ளப்படாத தவறான செயல்பாடு. மின் அஞ்சல் முகவரிகளை மொத்தமாகத் திருடுவதற்கு ஒப்பானது. இவற்றைக் கட்டணம் செலுத்தி வாங்குவதற்குப் பல வர்த்தகர்கள் உள்ளனர். பெரும்பாலும் ஸ்பாம் மெயில்களை அனுப்ப, இத்தகைய மின் அஞ்சல் பொதிகளைப் பயன்படுத்துவார்கள். போட்டிகளை நடத்தும் இணைய தளங்கள், ஏதேனும் ஒரு கவர்ச்சிகரமான திட்டத்தினைக் கூறி மின் அஞ்சல் முகவரிகளைப் பெறும் இணைய தளங்கள், அந்த வகையில் தாங்கள் பெறும் மின் அஞ்சல் முகவரிகளைத் தனியார் நிறுவனங்களுக்கு விற்றுவிடுகின்றனர்.
அமெரிக்காவில் 2003 ஆம் ஆண்டு CANSPAM Act என்ற சட்டத்தின் கீழ் இது தடை செய்யப் பட்டுள்ளது. ஒவ்வொரு மின் அஞ்சல் முகவரியையும், அதற்கு உரியவரின் அனுமதி பெற்ற பிறகே, வேறு ஒருவர் அல்லது நிறுவனம் அல்லது இணைய தளம் பெற வேண்டும் என இந்தச் சட்டம் கட்டாயமாக்கியுள்ளது.
3. Carbon Copy: மின் அஞ்சல் அனுப்புகையில், முகவரிக்குக் கீழாக "CC:” என்ற பிரிவினைப் பார்த்திருப்பீர்கள். கார்பன் காப்பி என்பதன் சுருக்கம் இது. அனுப்பப்படும் மின் அஞ்சல் செய்தியினை, பல நபர்களுக்கு நகலாக அனுப்ப,இந்த முகவரிக் கட்டத்தினைப் பயன்படுத்தலாம். அதாவது, அனுப்பப்படும் அஞ்சல் தகவல்கள், இந்த கார்பன் காப்பி கட்டத்தில் உள்ள முகவரிக்குரியவர்களுக்கு அல்ல; ஆனாலும், அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி என்பதே இதைக் குறிக்கிறது. அஞ்சல் யாருக்கு எழுதப்படுகிறதோ, அவரின் முகவரி "To:” என்ற பிரிவில் அமைக்கப்படுகிறது.
4. Blind Carbon Copy: மின் அஞ்சல் அனுப்புகையில், "BCC:” என்ற பிரிவினைப் பார்த்திருப்பீர்கள். இந்த பிரிவிலும், குறிப்பிட்ட அஞ்சலை நகலாக அனுப்பலாம். ஆனால், இந்தப் பிரிவில் உள்ள முகவரியில் உள்ளவர்கள் பெறுவதனை, அஞ்சலைப் பெறுபவர் மற்றும் கார்பன் காப்பி பிரிவில் உள்ளவர்கள் அறிய மாட்டார்கள். அவர்கள் அறியாமல், சிலருக்கு அனுப்ப இந்த ப்ளைண்ட் கார்பன் காப்பி உதவிடுகிறது.
பொதுவாக, இது போன்ற பழக்கத்தை நாகரிகம் கருதி யாரும் பயன்படுத்துவதில்லை. ஏனென்றால், இது நம்மிடமிருந்து அஞ்சலைப் பெறுபவர்களின் நம்பிக்கைக்கு ஊறு விளைவிப்பதாகும். பெறுபவர்களின் பட்டியலை, மற்றவர்களிடமிருந்து மறைக்க வேண்டும் என எண்ணுபவர்கள், இதனைப் பயன்படுத்துவார்கள்.
5. Email Attachment: மின் அஞ்சல் தகவலுடன் அனுப்பப் படும் பைல்கள் இவ்வாறு இமெயில் அட்டாச்மெண்ட் எனக் குறிப்பிடப்படுகிறது. தொடக்கத்தில், இவ்வாறு டெக்ஸ்ட்டை பைலாக இணைக்க முடியாது. அஞ்சல் அனுப்புபவர், தானாக டெக்ஸ்ட்டை புரோகிராம் ஒன்றின் மூலம் மாற்றி, அஞ்சல் தகவலுடன் ஒட்டி அனுப்புவார். பெறுபவர் இதனை ஒரு புரோகிராம் மூலம் மீண்டும் மாற்றி, அதனை டெக்ஸ்ட் எடிட்டரில் ஒட்டிக் காண வேண்டும்.
இப்போது எல்லாமே மாறிவிட்டது. மிக எளிதாக எந்த பைலையும் இணைத்து அனுப்பலாம். ஒவ்வொரு மின் அஞ்சல் சேவையும், தங்கள் அஞ்சலுடன் இணைக்கப்படும் பைலுக்கு அளவினை வரையறை செய்துள்ளன. இதற்கும் மேலான அளவில் பைல் அனுப்ப வேண்டும் எனில், அதற்கான் இலவச மற்றும் கட்டண சேவை வழங்கும் நிறுவனங்களும் உள்ளன.
நவீன மின் அஞ்சல் கட்டமைப்பு, பைல்களை அட்டாச் செய்வதில், MIME என்னும் வரையறையைப் பயன்படுத்துகின்றன. இது பைல்களை இணைப்பது, அனுப்புவது, பெறுவது, இணைக்கப்பட்ட பைலை விரைவாகப் பார்ப்பது என அனைத்தையும் எளிதாக்குகிறது.
6. Bloatware: ப்ளோட் வேர் என நாம் அழைப்பவை, கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்களால், தாங்கள் வடிவமைக்கும் கம்ப்யூட்டர்களில் பதிந்து அனுப்பப்படும் புரோகிராம்களாகும். கம்ப்யூட்டர் மட்டுமின்றி, இப்போது, மொபைல் போன்கள், டேப்ளட் பி.சி.க்கள், குரோம் புக், ஐபேட் போன்ற சாதனங்களிலும், நாம் கேட்காத, விரும்பாத பல புரோகிராம்கள் பதியப்பட்டு தரப்படுகின்றன. இவற்றை நாம் கம்ப்யூட்டரை அல்லது மேலே குறிப்பிட்டுள்ள சாதனங்களைப் பெற்றவுடன், இவற்றை நீக்கிவிடலாம். இதனால், தேவையின்றி நம் ராம் மெமரி இடம் பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும்.

No comments:
Post a Comment