வீடுகள், அலுவலகம் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்களில் மலர்களைக் கொண்டு அலங்கரிப்பது ஃபேஷனாகவே மாறிவிட்டது. இப்படி மலர்களைக்கொண்டு அலங்கரிப்பதன் மூலம் அழகும் ரம்மியமும் கூடுவதால் அதற்கு முக்கியத்துவம் தருகின்றன நிறுவனங்கள். இயற்கை மலர்களைக் கொண்டு அலங்கரிக்க ஆகும் செலவு அதிகம் என்பதால், செயற்கை மலர்களைக்கொண்டு, அந்த இடத்தை அலங்கரிக்கும் போக்கு தற்போது பரவலாக அதிகரித்து வருகிறது.
செயற்கை மலர்களைப் பராமரிப்பதும், கையாள்வதும் எளிது. நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்கிற சாதகமும் உண்டு. தவிர, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளின் அலங்கார தேவைகளுக்கு அதிக அளவில் தேவைப்படுவதால், செயற்கை மலர்களுக்கான சந்தை எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. குறைவான முதலீடு, எளிதான சந்தை வாய்ப்பு கொண்ட தொழில் இது.
உற்பத்தித் திறன்!
நமது திட்டத்தின்படி, தினசரி 25 கிலோ செயற்கை மலர்கள் உற்பத்தி செய்யலாம். இதன்படி, மாதத்துக்கு 625 கிலோ உற்பத்தி செய்யமுடியும். நாம் தோராயமாக 600 கிலோ என்று கணக்கு வைத்துக்கொள்வோம்.
இயந்திரங்கள்!
இன்ஜெக்ஷன் மோல்டிங் இயந்திரம் 1oz (சைஸ்) : 2
இன்ஜெக்ஷன் மோல்டிங் இயந்திரம் 0.5 oz (சைஸ்) : 2
இன்ஜெக்ஷன் மோல்டிங் இயந்திரம் 0.5 oz (சைஸ்) : 2
அச்சுகள் (தேவைக்கேற்ப அதிகப்படுத்திக்கொள்ளலாம்). ஹீட் சீலிங் இயந்திரம், மேசைகள், மற்றும் இதர கருவிகள். இந்தக் கருவிகள் மொத்தமும் ரூ.3 லட்சத்துக்குள் வாங்கிவிடலாம். இதற்கு தனியாக வங்கிக் கடன் கிடைக்கும்.
தயாரிப்பு முறை!
வடிவமைக்கப்பட்டுள்ள அச்சில் தேவைக்கேற்ப அக்ரலிக் குழாய்கள், தகடுகளைப் பொருத்தி இன்ஜெக்ஷன் மோல்டிங் முறையில் உருவாக்கப்பட வேண்டியதுதான். இப்படி உருவாக்கப்படும் மலர்களை ஒருங்கிணைக்கும் தேவையிருந்தால் அந்த வேலைகளையும் செய்தபின் வடிவத்துக்கேற்ப பேக்கிங் செய்து அட்டைப் பெட்டிகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்ப வேண்டும்.
மூலப்பொருள் செலவு!
இதன் பிரதான மூலப்பொருள் ஹெச்.டி.பி.இ. / எல்.டி.பி.இ. என்பதாகும். மாதம் 600 கிலோ உற்பத்திக்கு 500 கிலோ ஹெச்.டி.பி.இ. / எல்.டி.பி.இ. தேவைப்படும். இதன் விலை ரூ.80 (500X80= 40,000) அக்ரலிக் குழாய்கள், கம்பிகள் 100 கிலோ தேவைப்படும். இதன் விலை ரூ 100. (100X100=10,000). கம்பி பசை மற்றும் இதர தேவைகள் ரூ.2,000. ஒரு மாதத்துக்குத் தேவையான மூலப்பொருள் செலவு 52,000. (40,000+10,000+2,000).
பேக்கிங் செலவு!
உற்பத்திக்குப்பின் உத்தேசமாக 720 கிராம் வீதம் பேக்கிங் செய்யலாம். பேக்கிங் செலவு ஒரு பாக்கெட்டுக்கு ரூ.8 செலவாகும். இதன்படி மாதம் 600 கிலோ உற்பத்தி என்றால் 833 பாக்கெட்கள். இதற்கான செலவு ரூ.6,664. (தோராயமாக ரூ. 6,700)
பணியாளர்கள்!
மேற்பார்வையாளர் : 10,000
திறன் பணியாளர்கள்: 2 X 8000 : 16,000
பணியாளர்கள் : 2 X 8000 : 16,000
உதவியாளர் 1 = 5,000
மார்க்கெட்டிங்
பணியாளர்கள்: 1X10 : 10,000
மொத்தம் : 57,000
திறன் பணியாளர்கள்: 2 X 8000 : 16,000
பணியாளர்கள் : 2 X 8000 : 16,000
உதவியாளர் 1 = 5,000
மார்க்கெட்டிங்
பணியாளர்கள்: 1X10 : 10,000
மொத்தம் : 57,000
நிர்வாகச் செலவுகள்! (ரூ.)
வாடகை : 10,000
மின்சாரம் : 10,000
அலுவலக நிர்வாகம் : 10,000
பராமரிப்பு : 5000
ஏற்று / இறக்கு கூலி : 10,000
இதர பொருட்கள் : 20,000
மொத்தம் : 65,000
மின்சாரம் : 10,000
அலுவலக நிர்வாகம் : 10,000
பராமரிப்பு : 5000
ஏற்று / இறக்கு கூலி : 10,000
இதர பொருட்கள் : 20,000
மொத்தம் : 65,000
நடைமுறை மூலதனச் செலவுகள்:
மூலப்பொருட்கள் : 52,000
சம்பளம் : 57,000
பேக்கிங் : 6,700
நிர்வாகச் செலவுகள் : 65,000
மொத்த செலவுகள்: 1,80,700 (நடைமுறை மூலதனத்துக்கு வங்கிக் கடன் கிடைக்கும்)
சம்பளம் : 57,000
பேக்கிங் : 6,700
நிர்வாகச் செலவுகள் : 65,000
மொத்த செலவுகள்: 1,80,700 (நடைமுறை மூலதனத்துக்கு வங்கிக் கடன் கிடைக்கும்)
விற்பனை வரவு!
உற்பத்திக்குப்பின் உத்தேசமாக ஒரு பாக்கெட் ரூ.250 வரை விற்பனை செய்யலாம். இதன்படி, மாதம் 833 பாக்கெட்கள் மூலம் ரூ.2,08,250 விற்பனை வரவு.
கடன் திருப்பம் மற்றும் வட்டி (ரூ)
மூலதனக் கடன்
திருப்பம் 60 மாதங்கள் : 5,000
மூலதன கடன் வட்டி 12.5% : 3125
நடைமுறை
மூலதன கடனுக்கான வட்டி : 1890
மொத்தம் : 10015
_______
திருப்பம் 60 மாதங்கள் : 5,000
மூலதன கடன் வட்டி 12.5% : 3125
நடைமுறை
மூலதன கடனுக்கான வட்டி : 1890
மொத்தம் : 10015
_______
மொத்த வரவு : 208250
மொத்த செலவு : 180700
கடன் மற்றும் வட்டி திருப்பம் : 10015
_______
மொத்த செலவு : 180700
கடன் மற்றும் வட்டி திருப்பம் : 10015
_______
லாபம் : 17,535
No comments:
Post a Comment