Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Thursday, June 19, 2014

டிஜிட்டல் எழுத்தின் அளவு


கம்ப்யூட்டரில், அச்செடுப்பில், எழுத்து ஒன்றின் அளவு, point என்ற அலகால் குறிப்பிடப்படுகிறது. இது அச்செழுத்து வடிவம் சார்ந்த அளவு கோலாகும். இந்த அலகின் அளவு ஓர் அங்குலத்தில் 72ல் (1/72) ஒரு பங்கு. அச்சுத் துறையில், எழுத்தின் அளவைக் குறிக்க, இதுவே பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வேர்ட் புரோகிராமிலும் இந்த point அளவே பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் 12 பாய்ண்ட் எழுத்து ஒன்றைப் பயன்படுத்துகையில், அது ஓர் அங்குலத்தில் ஆறில் ஒரு பங்கு 12/72 ( அல்லது 1/6) இடத்தை எடுத்துக் கொள்கிறது. எழுத்தின் மேல் நிலையிலிருந்து (riser) கீழாக (des cender) இதன் அளவினை எடுத்துக் கொள்ள வேண்டும்.எனவே, 72 பாய்ண்ட் அளவில் எழுத்து ஒன்றைப் பயன்படுத்தினால், அது ஓர் அங்குல உயரத்திலான பெட்டி அளவில் அமர்ந்து கொள்கிறது.
இந்த point அளவினை நாம் நன்றாகப் புரிந்து கொண்டால், வேர்ட் புரோகிராமில் இதனையே அடிப்படை அலகாக வைத்துச் செயல்படலாம். இதனைக் குறிக்க pt என்ற எழுத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு மாறாக, கீழ்க்காணும் வழிகள் மூலமாகவும், வேர்டில் எழுத்தின் மாறா அளவி நிலையை அமைக்கலாம்.
1. வேர்ட் ஆப்ஷன்ஸ் (Word Options) டயலாக் பாக்ஸைத் திறக்கவும். வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டன் கிளிக் செய்து, பின்னர் கிடைக்கும் கட்டத்தின் கீழாக இடது பக்கம் இந்த டேப் காணப்படும். வேர்ட் 2010 மற்றும் வேர்ட் 2013 புரோகிராம்களில், ரிப்பனில் பைல் டேப்பினைத் தேர்ந்தெடுத்து, அதில் Options என்பதில் கிளிக் செய்திடவும்.
2. டயலாக் பாக்ஸின் இடது பக்கம் உள்ள Advanced என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. கீழாகச் செல்லவும். Display என்பதனைக் கண்டறியவும். இங்கு கிடைக்கும் கீழ் விரி பட்டியலில், Show Measurements in Units என்பதனைப் பயன்படுத்தி, Points என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. பின்னர், ஓகே கிளிக் செய்து சேவ் செய்திடவும்.

No comments: