Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Friday, June 13, 2014

போன் மூலம் அறை விளக்கைக் கட்டுப்படுத்தலாம்


டுக்கையில் விழுந்தவுடன் தான், அறை விளக்கை அணைத்திருக்கலாமோ என்ற எண்ணம் நம்மில் பலருக்கு வரும். எழுந்து சென்று ஸ்விட்ச் போர்டில் அதனை அணைப்பது சோம்பேறித்தனமாக இருக்கலாம். இவர்களுக் காகவே, ஆண்ட்ராய்ட் சாதனங்கள் மூலம், கட்டுப்படுத்தக் கூடிய ஸ்மார்ட் பல்ப் ஒன்றை, சாம்சங் நிறுவனம் விற்பனைக்கு
அறிமுகப்படுத்தியுள்ளது. இது புளுடூத் தொழில் நுட்பத்திற்குக் கட்டுப்பட்டு இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் போன் மூலம் இது போல 64 பல்ப்களின் இயக்கத்தினைக் கட்டுப்படுத்தலாம். ஆண்ட்ராய்ட் சிஸ்டம் உள்ள ஸ்மார்ட் போன் அல்லது டேப்ளட் பி.சி. மூலம், விளக்கின் ஒளியைக் குறைக்கலாம், அதிகரிக்கலாம் அல்லது நிறுத்தலாம். இதற்கென மிக விரிவான செட் அப் எதுவும் தேவை இல்லை என சாம்சங் அறிவித்துள்ளது.
இதன் ஒளியை அதன் திறனில் 10% மட்டுமே இருக்குமாறு கட்டுப்படுத்தலாம். ஒரு ஸ்மார்ட் பல்ப் தினந்தோறும் நான்கு மணி நேரம் பயன்படுத்தினால், அதன் வாழ்நாள் பயன்பாடு 15 ஆயிரம் மணி நேரம் வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ, இது பத்து ஆண்டுகள் காலம் ஆக இருக்கும். இதன் விலை என்னவென்று இனிமேல் தான் அறிவிக்கப்படும்.

No comments: