‘கஜினி’ படத்தில் நடிகர் சூர்யா சிக்ஸ் பேக் உடம்பில் தசைகளை முறுக்கிக் கொண்டு வந்ததைத் தொடர்ந்து, பலரும் அதேப்போல் திரை வாழ்க்கையிலும், இயல்பு வாழ்க்கையிலும் வலம் வந்தார்கள். சிலருக்கு சந்தேகம். ‘இந்த அளவுக்கு உடம்பை முறுக்கேற்ற முடியுமா?’ என்று வியக்கிறார்கள். தசைகளை முறுக்கேற்றுவது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான் என்றாலும் அது கண்டிப்பாக முடியும். சரியான உணவுப் பழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சிகள் மூலம் இதை நாம் சாதிக்க முடியும். ஆனாலும்,
ஓரிரு நாட்களிலோ அல்லது ஓரிரு வாரங்களிலோ இது சாத்தியமே இல்லை. பொறுமை மிகவும் முக்கியம் அமைச்சரே!! பாடி பில்டர் போன்று அழகான உடல் கட்டமைப்பைப் பெற உதவும் உணவுகள்!!! இதோ, தசைகளை ‘கும்’மென்று முறுக்கேற்ற 15 அருமையான வழிகள்: தசைகள் முறுக்கேற அதிகமான கலோரிகளை உடம்பில் ஏற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கேற்ற உணவுகளை சாப்பிட வேண்டும். ஆனால், இதன் மூலம் உடம்பில் கொழுப்பு ஏறி விடக் கூடாது. இது தொடர்பாக, ஒரு நல்ல ஆலோசகரிடம் கலந்தாலோசித்துக் கொள்வது நல்லது. ஒன்றுக்கு மேற்பட்ட தசைத் தொகுப்பு அல்லது இணைப்புகளுக்குத் தேவையான உடற்பயிற்சிதான் கலப்பு உடற்பயிற்சி எனப்படும். இதுபோன்ற கலப்பு உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதன் மூலம் தசைகளை முறுக்கேற்றலாம். தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உடற்பயிற்சிகளைச் செய்வதால், தசைகள் மேலும் மேலும் முறுக்கேறும். நீங்கள் சாப்பிடும் உணவு, தசைகளை முறுக்கேற்றுவதற்கு மட்டுமல்ல. சரியான செரிமானத்திற்கும் அது அவசியம். எனவே, அதிகமாக உணவு எடுத்துக் கொள்வது நல்லது. மாங்கு மாங்கென்று உடற்பயிற்சி செய்யும்போது ஏராளமான வியர்வை உடம்பிலிருந்து வெளியேறி விடும். எனவே தினமும் நிறைய தண்ணீரைக் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும். உடற்பயிற்சி செய்யும்போது கூட, 10-20 நிமிடங்களுக்கு ஒருமுறை நீர் அருந்த வேண்டும். கால்களை மடக்கி தரையில் உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்திருக்கும் முறைக்குதான் ஸ்குவாட் என்று பெயர். அரைகுறையாக இதை செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் முழங்கால் பிரச்சனைகள் வரலாம். உஷார்! உடற்பயிற்சியின் ஒரு பகுதியாக வெயிட் போடுதலையும் தவறாமல் செய்ய வேண்டும். தசைகள் முறுக்கேற இது மிகவும் அவசியமானதாகும். தசைகள் முறுக்கேறுவதற்காகக் கடுமையான உடற்பயிற்சிகளை செய்வதால், நம் உடம்புக்கு அதிகமான புரதச் சத்து தேவைப்படுகிறது. அந்தப் புரதங்கள் பல அமினோ அமிலங்களாகப் பிரிந்து தசைகளுக்கு வலுவூட்டுகின்றன. வெயிட் போடுதல் உள்பட அனைத்து உடற்பயிற்சிகளையும் சரியான முறையில் செய்து வந்தால்தான் தசைகள் நன்றாக முறுக்கேறும். ஒவ்வொரு உடற்பயிற்சிக்குப் பின்னரும் நன்றாக சாப்பிட வேண்டும். கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் அதிகமுள்ள உணவுகள் தசைகள் முறுக்கேற உதவும். தினமும் குறைந்தது 8 மணி நேரம் தூங்குவது நல்லது. நன்றாக உடற்பயிற்சி செய்யுங்கள். தானாகவே தூக்கமும் நன்றாக வரும். தசைகள் முறுக்கேற நிறைய முட்டைகளை சாப்பிட வேண்டும். அதிலும் இரும்புச்சத்து அதிகமுள்ள மாட்டிறைச்சிகளை உண்பதும் நல்லது. ஆரோக்கியமான கொழுப்புச் சத்து மிக்க மீன் மற்றும் கொட்டைவகை உணவுகளை நிறைய சாப்பிடலாம். அவை தசைகளை நன்றாக முறுக்கேற்றும். ஒவ்வொரு உடற்பயிற்சியின் போதும் கார்டியோவையும் சேர்த்துக் கொள்வது தசைகள் முறுக்கேறுவதற்கு நல்லது. ஏற்கனவே கூறியது போல், ஒரு சில நாட்களிலேயே நாம் 6 பேக் உடம்பைப் பெற்றுவிட முடியாது. ஒவ்வொரு பயிற்சியையும் நிதானமாகச் செய்து வந்தால், தசைகள் முறுக்கேறி ‘கும்’மென்று இருப்பீர்கள். இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்…
No comments:
Post a Comment