மாம்பழம், வாழையைப் போலவே அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, எளிதில் செரிமானம் ஆகக்கூடிய பழம் சப்போட்டா. இதில் சர்க்கரை மிக எளிய வடிவத்தில் இருப்பதால், சாப்பிட்ட உடனேயே உடலுக்கு ஆற்றலைத் தரும்.
100 கிராம் சப்போட்டாவில் 83 கலோரிகள் உள்ளன. அதேபோல் நார்ச்சத்தும் இதில் அதிக அளவு இருப்பதால், மலச்சிக்கலைப் போக்கி, குடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. டேனின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் நிறைவாக உள்ளது. இது அமிலங்களை நீர்த்துப்போகச் செய்வதில் முக்கியப் பங்காற்றுகிறது. மேலும் செல்களில் வீக்கம், வைரஸ் – பாக்டீரியா கிருமிகளுக்கு எதிராகவும் செயல்படுகிறது. வயிற்றுப்போக்கு, ரத்தக் கசிவுவைத் தடுக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.
ஓரளவுக்கு வைட்டமின் சி மற்றும் ஏ சத்துக்கள் உள்ளன. அதிக அளவில் கார்போஹைட்ரேட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், கர்ப்பிணிகள் இதை ஓரளவுக்கு எடுத்துக்கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்னைகளான குமட்டல் வாந்தியைத் தடுக்கும். பாலூட்டும் பெண்களும் இதை எடுத்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment