வடகிழக்கு இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியப் பகுதியை பூர்வீகமாகக்கொண்டது. முதலாம் நூற்றாண்டில் ரோமானியர்கள் இந்தியாவில் இருந்து ஒரு ஆரஞ்சு பழக் கன்றை எடுத்துக்கொண்டுபோய் தங்கள் நாட்டில் நட்டு, விளைவித்தனர். இதன் பிறகு 1518-ல் கிரிஸ்டோபர் கொலம்பஸ் மூலம் இது அமெரிக்காவுக்குப் பரவியது. தற்போது உலக அளவில் பயன்படுத்தப்படும் பழங்களில் ஒன்றாக ஆரஞ்சும் விளங்குகிறது.
கலோரி குறைவான இந்தப் பழத்தில் கொழுப்புச் சத்து இல்லை. ஆனால், நார்ச்சத்து பெக்டின் என்ற ரசாயனம் அதிக அளவில் உள்ளது. இந்த பெக்டின் குடலில் நச்சுக்கள் சேருவதைத் தவிர்த்து குடல் புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும் ஆரஞ்சுப்பழம், ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கிறது. இதனால் மாரடைப்புக்கான வாய்ப்பு குறைகிறது.
மற்ற சிட்ரஸ் பழங்களைப்போல் இதிலும் வைட்டமின் சி நிறைவாக உள்ளது. ஒரு நாள் தேவையில் 90 சதவிகித வைட்டமின் சி-யை இந்தப் பழம் தருகிறது. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள் இணைந்து சருமத்தைப் பொலிவுறச் செய்கிறது.
தோல் மற்றும் பார்வைக்கு வைட்டமின் ஏ மிகவும் அவசியம். இயற்கையாகக் கிடைக்கக்கூடிய இதுபோன்ற வைட்டமின்களை எடுத்துக்கொள்ளும்போது, அது நுரையீரல் மற்றும் வாய்ப்புற்று நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
தாது உப்புக்களைப் பொருத்தவரை பொட்டாசியம் மற்றும் கால்சியம் ஆரஞ்சுப் பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது.எந்த வயதாக இருந்தாலும் பரவாயில்லை… எந்த நோயாளியாக இருந்தாலும் பரவாயில்லை. அவர்கள் தைரியமாக சாப்பிடக்கூடிய பழம் ஆரஞ்சு! இது உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும் உறுதியை வழங்குகிறது.
ஆரஞ்சு சாறில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் இளமை தோற்றம் உருவாகும்.
தினமும் ஆரஞ்சு சாப்பிட்டு வந்தால் பசி ஏற்படும். மலச்சிக்கலை நீக்கும். நன்கு ஜீரணமாகும். கழிவுகள் வெளியேறி குடல் சுத்தமாகும்.
மேலும் சளி, ஆஸ்துமா, காசநோய், தொண்டைப்புண் முதலியவை குணமாகும். நெஞ்சுவலி, இதய நோய், எலும்பு மெலிவு ஆகியவற்றை குணமாக்கும் ஆற்றல் உடையது ஆரஞ்சு.
இதில் ஏ, பி, சி ஆகிய வைட்டமின்களும், ஏழு வகையான தாதுக்களும் உள்ளதால், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் அவசியம் சாப்பிட வேண்டும். அதுமட்டுமின்றி, ஆரஞ்சு பழத்தை குறுக்கே இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழுவினால் முகம் பளபளப்பாகும்.
No comments:
Post a Comment