Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Friday, June 13, 2014

பொலிவான முகத்துக்கு எளிதான குறிப்புகள்


முல்தானிமெட்டி பவுடரை பன்னீர் விட்டு கலந்து முகத்தில் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பொலிவாக, முகப்பருக்கள் மறையும். பன்னீர் ரோஜா இதழ்களை அரைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் ஊறிய பின் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் மிருதுவாக இருக்கும். முகத்தின் நிறம் மாறும். தக்காளியை அரைத்து முகத்தில் அரை மணி நேரம் பூசி வந்தால் முகம் பொலிவு பெறும். முகத்தில் உள்ள கரும்புள்ளி மறைய வேப்பங்கொழுந்தையும், மஞ்சளையும் அரைத்து பூசி
ஊறிய பின் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும். கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையம் மறைய உருளைகிழங்கை வட்டமாக வெட்டி கண்ணின் மீது வைத்து வந்தால் கண் குளிர்ச்சி அடையும். கருவளையம் மறைந்து விடும். முகத்தில் பூனை முடி வளர்ந்திருந்தால் அதற்கு கஸ்தூரி மஞ்சள் தூளை முகத்தில் பூசி ஊறவைத்து அலம்பினால் பூனை முடி வராது நல்ல பலன் கிடைக்கும். மோரை பஞ்சில் நனைத்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தேய்த்து வர துவாரங்கள் விரைவில் மறையும். ஈஸ்ட் மாத்திரை 1 தேக்கரண்டி, பால் 4 தேக்கரண்டி, சர்க்கரை 1 தேக்கரண்டி மூன்றையும் நன்றாக கலந்து 10 நிமிடம் கழித்து கழுவினால் முகம் பளபளக்கும்.

No comments: