தண்டுப் பகுதியில் ஆங்காங்கே வெண்மை வண்ணத் தில் சில முண்டுகள் தெரிகின்றன. வெற்றிலையைப் போன்ற தோற்றம் கொண்டவை இதன் இலைகள். சீந்தில் கொடியின் அனைத்துப் பாகங்களும் கசக்கும். வேதத்தில், ‘தன்வந்திரி மகரிஷியின் இரண்டு கைக ளாக சீந்தில் கொடி உள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. உயிர் காக்கும் மூலிகைச் செடிகளில் சீந்தில் கொடி முதன்மையான இடத்தில் உள்ளது. இதை மெய்ப்பிக்கு ம் வகையில் ராமாயண சம்பவம் ஒன்றைக் குறிப்பிட லாம். “ராமனுக்கும், ராவணனுக்கும் கடும் போர் நடந் து கொண்டிருக்கிறது.
இந்த வஞ்சிக்கொடியை உட்கொண்டு கடுவெளி சித்தர் பல ஆண்டுகளாக உயிர் வாழ்ந்து, பல அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறார். குலோத்துங்க சோழன் ஆட்சி காலத்தில் கடும் பஞ்சத்தில் இருந்து மக்களைக் காத் தவர் இந்த கடுவெளி சித்தர். திருக்கருவூரில்தான் பிர ம்மன் தனது படைப்புத் தொழிலைத் தொடங்கினான் என்று கோயில் தலப்புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இத்தலத்தைப்பற்றி திருஞான சம்பந்தர்,
“தொண்டெலாமலர் தூவியேத்த நஞ்சு
உண்டலாகுயிர் ஆய தன்மையர்
கண்டனார் கருவூருள் ஆனிலை
அண்டனார் அருள் ஈயும் அன்பரே”
“தேவர் திங்களும் பாம்புஞ் சென்னியில்
மேவர் மும்மதி வெய்த வில்லியர்
காவலர் கருவூரு னானிலை
மூவராகிய மொய்ம்பரல்லரே!’’
- என்றும் பாடியுள்ளார்.
திருக்கருவூர் திருத்தலம் பல்வேறு சிறப்புகளைக் கொ ண்டது. பலருக்கு முக்தியளித்த தலம். கருவூர் சித்தர் ஜீவசமாதியடைந்து அருவமாக இறைவனுக்கு பூஜை செய்து வருவதாக இன்றளவும் பக்தர்களால் நம்பப்ப டுகிறது. படைப்புத் தொழிலில் ஈடுபட்டு இருந்த பிரம் மன் ஒருமுறை சற்று கண் அயர்ந்தநேரம் பார்த்து காமதேனு பசு இறைவனை வணங்கி, தானும் சிருஷ்டி ரகசியத்தைத் தெரிந்துகொள்ள வேண்டி தவம் இருந்த தலம். இதனால்தான் திருக்கருவூருக்கு கருவூர், கற்ப புரி என்றும் இறைவனை பசுபதீஸ்வரர் என்றும் அழை க்கிறார்கள்.

தேவர்கள், சுக்கிரன், முசுகுந்த சோழ மன்னன், பிரம்ம ன், திக்குப்பாலர்கள் இறைவனை பூஜித்த தலம்தான் திருக்கருவூர். விபண்டன் என்ற வேடனுக்கும் எறிபத்த நாயனாருக்கும், புகழ்ச் சோழ நாயனாருக்கும் இறைவ னால் முக்தி அளிக்கப்பட்ட தலமாகும். கருவூர் திருச்சி யில் இருந்து கோவை செல்லும் சாலையிலும், ரயில் மார்க்கத்திலும் உள்ளது. திருச்சியில் இருந்து 45 மைல் தொலைவில் உள்ளது. சாகா மூலிகையான வஞ்சிக் கொடியை தலவிருட்சமாகக் கொண்டிருக்கும் கருவூர் பசுபதீஸ்வரர் கோயிலுக்குச் சென்று இறைவனை வழி பட்டு பேரருள் பெறுவோம்.

No comments:
Post a Comment