Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Wednesday, May 13, 2015

எந்த வயதில் நீங்கள் என்னென்ன மருத்துவ‌ பரிசோதனை செய்யவேண்டும்


உடல் பரிசோதனை
உங்கள் வாழ்நாளை நீட்டிக்க,
ஒவ்வொரு ஆண்டும் உடல் பரிசோதனை செய்துகொ ள்வதுரொம்ப நல்லது. நோயை கண்டு பிடிக்க தாமதம் ஏற்படுவதால்தான் பல வியாதிகள் உயிருக்கு ஆபத்தை தருவதாக அமை கின்றன.
ஆகவேதான் ஒவ்வொரு ஆண்டும் உடல் பரிசோதனை செய்வதுதான் வருங்காலம் நல மானதாக இருக்க நீங்கள் செய்யும் முதலீடாகும்.
எந்த வயதில் என்னென்ன பரிசோதனை செய்யலாம்?

2 வயது முதல்–ஆண்டுக்கு ஒருமுறை பல் பரிசோதனை.

3 வயது முதல் – ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோத னை.

18 வயதுமுதல்– ஆண்டுக்கு ஒரு முறை இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை.

18 வயது முதல் (பெண்கள்) –ஆண்டுக்கு ஒரு முறை இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை மற்றும் பேப் ஸ்மியர் பரிசோதனை.
30 வயது முதல்- ஆண்டுக்கு ஒரு முறை சர்க்கரை பரி சோதனை.

30 வயது முதல் (பெண்கள்) – ஆண்டுக்கு ஒரு முறை சர்க்கரை பரிசோதனை மற்றும் மார்பக பரிசோதனை.

40 வயது முதல் (ஆண்கள் மற்றும் பெண்கள்): ஆண்டு க்கு ஒரு முறை கிட்னி மற்றும் லீவர் பரிசோதனை.
50 வயது முதல் – ஆண்டுக்கு ஒரு முறை கண், காத்து, சிறுநீரியல் மற்றும் மூட்டு சிகிச்சை பரிசோ தனை.
50 வயது முதல் (பெண்கள்): ஆண்டுக்கு ஒரு முறை கண், காது, சிறுநீரியல், எலும்பு, மூட்டு.கருப்பை புற்று நோய் பரிசோதனை.
எனவே நீங்கள், உங்கள் வயதுக் கேற்ற உடல் பரிசோதனை செய் து கொள்ளுங்கள். இதைவிட முழு உடல் பரிசோத னை செய்வது மிக மிக நல்லது.

No comments: