Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Friday, February 12, 2016

முட்டை… யார், எப்படி, எவ்வளவு சாப்பிடலாம்..?

‘முட்டை நல்லதுதான். ஆனால், சமைக்காத பச்சை முட்டையை எந்த மருத்துவரும் சாப்பிடச் சொல்வதில்லை. காரணம், அதனால் சில பிரச்னைகள் ஏற்படலாம்!’
– இப்படி ஒரு பெண் எச்சரிக்கும் வீடியோ, சமீபநாட்களாக `வாட்ஸ்அப்’பில் மிகவேகமாகப் பரவிவருகிறது. இது தொடர்பான சந்தேகங்களைக் களையும் விதமாக, முட்டை பற்றிய மருத்துவத் தகவல்களைத் தருகிறார் சென்னை, சவீதா மருத்துவக் கல்லூரியின் குழந்தைகள்நல மருத்துவப் பேராசிரியர் பெஞ்சமின் சகாயராஜ்.
‘‘உலகம் முழுவதும் மிக முக்கிய உணவாக இடம் பிடித்திருக்கிறது, முட்டை. அதை யார், எந்த அளவில் எடுத்துக்கொள்கிறார்கள் என்பதில் அடங்கியுள்ளது அது தரக் கூடிய நன்மையும் தீமையும்’’ என்ற டாக்டர், விரிவாகப் பேசத் தொடங்கினார்.
முட்டை ஏன் சிறந்தது?
‘‘முட்டையில் உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் நிரம்பியுள்ளன. அது உணவு வகைகளில் பெறும் முக்கியத்துவத்துக்குக் காரணம்… புரோட்டீன், விட்டமின்கள் A, B (B2, B12, B6, B5), D, E, முடி வளர்ச்சிக்குத் தேவையான பையோட்டின் (Biotin), நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் கல்லீரல் இயக்கத்தைச் சமநிலைப்படுத்தும் கோலின் (choline), கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடும்போது ரத்த விருத்திக்கும், சிசுவின் மூளை வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் ஃபோலேட் (folate) என்னும் விட்டமின், கண்ணுக்கு ஆரோக்கியம் தரும் (வயதான பிறகு பார்வைக் குறைபாடு வராமல் தடுக்கும்) ஸியஸன்தின் (zeaxanthin) என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட், அயோடின், இரும்புச் சத்து போன்ற அனைத்து சத்துக்களும் முட்டைக்குள் அடக்கம். பொதுவாக 44 – 50 கிராம் எடையுள்ள முட்டையில் 70 கிலோ கலோரிகள் எரிசக்தியும் (Energy), 6 கிராம் புரோட்டீனும் இருக்கும். அதனால்தான் இதனை உலகின் மிகச் சிறந்த உணவு வகைகளில் ஒன்றாகச் சொல்கிறார்கள்.
யாரெல்லாம் சாப்பிடலாம்?
ஒரு வயது தாண்டிய குழந்தை கள் தொடங்கி முதியவர்கள்வரை யார் வேண்டுமானாலும் முட்டை சாப்பிடலாம். சில குழந்தைகளுக்கு முட்டை சாப்பிடுவதால் அலர்ஜி வரக்கூடும் என்பதால், ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முட்டையை நிச்சயமாகத் தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு முதலில் மஞ்சள் கருவையும், அதன் பிறகு வெள்ளைக் கருவையும் கொடுக்க வேண்டும். பொதுவாக, குழந்தைகளுக்கு முதன்முதலாக முட்டை கொடுக்க ஆரம்பிக்கும்போது முதலில் மஞ்சள் கருவை மட்டும் கொடுத்து, அது நன்கு செரித்து குழந்தையின் உடலுக்குத் தொந்தரவு ஏதும் செய்யவில்லை என்று உறுதிப்படுத்திய பின் வெள்ளைக் கருவையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.
எவ்வளவு சாப்பிடலாம்?
ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தொடங்கி 40 வயதுவரை உள்ளவர்கள், எடை குறைவாக இருக்கும்பட்சத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முட்டை சாப்பிடலாம். இதே வயது வரம்பில் சராசரி எடைகொண்டவர்கள் தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். உடற்பருமனான குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள்வரை, வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முட்டை எடுத்துக்கொள்ளலாம். ஒபிஸிட்டி உள்ளவர்களுக்கு மருத்துவப் பரிந்துரை அவசியம். 40 வயதைக் கடந்தவர்கள் தினமும் முட்டை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். வாரத்தில் 2 அல்லது 3 முட்டை எடுத்துக் கொள்ளலாம்.
பச்சை முட்டை சாப்பிடலாமா?
கிராமங்களில் பச்சை முட்டை குடிக்கும் பழக்கம் இருந்தாலும், அது மருத்துவரீதியாகப் பரிந்துரைக்கத்தக்கது அல்ல. பச்சை முட்டை சாப்பிட்டால் அதில் உள்ள ட்ரிப்சின் (trypsin) எனும் அமினோ ஆசிட் உடல் வளர்ச்சியைச் செயலிழக்கச் செய்யும். மேலும் டைஃபாய்டு வரக்கூடிய வாய்ப்புகளையும் அது உண்டாக்கலாம். குறிப்பாகக் குழந்தைகளுக்கு அதுபோன்ற தொந்தரவுகள் ஏற்பட்டால், சிகிச்சை எளிமையாக இருக்காது என்பதால் அதைத் தவிர்க்க வேண்டும். முட்டையை வேகவைத்தோ அல்லது ஆம்லெட், பொரியல் என்று சமைத்தோதான் சாப்பிட வேண்டும்.
முட்டையும் பெண்களும்!
பெண்களைப் பொறுத்த வரையில் முட்டையைச் சாப்பிடுவதால் அதில் உள்ள பையோடின்முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. உடல் எடை அதிகம் உள்ள பெண்கள் மஞ்சள் கருவைத் தவிர்த்து வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடலாம். கர்பிணிப் பெண்கள் நல்ல தரமான முட்டையைப் பார்த்து வாங்கிச் சாப்பிடுவது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் முட்டை சாப்பிடுவதால்… அதில் உள்ள ஃபோலேட் (folate) என்னும் விட்டமின், தாயின் ரத்த விருத்திக்கும், சிசுவின் மூளை வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும்.

முட்டை சைவமா?
உலகெங்கிலும் பல நாடுகளில் முட்டையை சைவ உணவாக சாப்பிட்டு வருகிறார்கள். ஆனாலும், நம்மில் பலர் அதை அசைவ உணவாகவே இன்னும் ஒதுக்கி வருகிறார்கள். சைவ உணவுப் பிரியர்கள், ஒரு முட்டைக்கு இணையான சத்துக்களைத் தரக்கூடிய மாற்று சைவ உணவுகளாகக் கீழ்வருவனவற்றைச் சாப்பிடலாம்.
 அரை கப் சோயா பால்.
 ஒரு டீஸ்பூன் ஆளி விதையை மூன்று டீஸ்பூன் அளவு தண்ணீரில கொதிக்கவைத்துச் செய்யப்படும் உணவு வகைகள் எது வேண்டுமானாலும்.
 வாழைப்பழம் ஒன்று.
 50 மில்லி கெட்டித் தயிர்
 50 கிராம் கொண்டைக்கடலை (வேக வைத்தது /ஊறவைத்தது)

தரமான, புதிதான முட்டையாகச் சாப்பிட வேண்டியது அவசியம். நல்ல ஃப்ரெஷ்ஷான முட்டையை இப்படிக் கண்டறியலாம்.

எந்த முட்டை… எப்படி..?



Thank You

No comments: