Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Thursday, March 19, 2015

காலையில் சாப்பிட்ட‍தும் பழச்சாறு குடிக்கக்கூடாது

ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள்குழு ஒன்று, அதிகஉடல் எடை கொண்ட அதே நேரத்தில் ஆரோக்கியமான 34 ஆண் மற்றும் பெண்களை 2 குழுக்களாகப் பிரிக்கப் பட்டு நடத்திய
ஆய்வில் ஒரு குழுவினருக்கு சிற்றுண்டியின்போது பழச்சாறும் கொடுத்து, மற்றொரு பிரிவினருக்கு கொழுப்பு நீக்க ப்பட்ட பாலும் 4 மணிநேர இடைவெளியில் தொடர்ந்து கண்கா ணிக்கப்பட்டதில் ஒரு அதிர்ச்சிகரமான‌ உண்மை தெரிய வந்துள்ளதாக விஞ்ஞா னிகள் தெரிவித்துள்ளனர்.
சிற்றுண்டி சாப்பிட்ட‍பிறகு பழச்சாறு அருந்தினால்அதுபசியை சீக்கிரமாகவே தூண்டி விடுகிறது மேலும் அப்பசி அடங்க  உட்கொள்ளும் உணவின் அளவும் அதிகமாகிறது. இதன் காரணமாக உடலில் கலோரிகளின் அளவு அதிகரித்து உடல் எடை கூடிக்கொ ண்டே இருக்கும் என்கிற அதிர்ச்சித் தகவலையும் வெளியிட்டுள்ளனர் ஆய்வாளர்கள்  
மேலும் காலைச் சிற்றுண்டியுடன் பழச்சாறு குடிப்பதற் கு பதில் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடித்தால் மதிய உணவின் போது சாப்பிடும் அளவில் 9 % குறையும் என்கிறது ஆஸ்திரேலிய ஆய்வுத் தகவல். இத்தகைய முறையினால் உணவின் அளவு குறைவதுடன் நாம் எடுத்துக் கொள்ளும் கலோரி அளவும்குறைவதால் உடலின் எடை கணிசமாக குறை ய வாய்ப்புகள் அதிகம்என்கிற மகிழ்ச்சி தரும் தகவ லையும் வெளியிட்டுள்ள‍னர் அந்த விஞ்ஞானிகள்
இந்த கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் குறைந்த அளவே புரதம் மற்றும் லாக்டோஸ் சத்துக்கள் இருப்பதும், அதிகப்படியான கொழுப்பு உடலில் சேர்வதும் தடை செய்யப்படுகிறது. ஆனால் அதன் இதர சத்துக்கள் உட லில்சேர்ந்து மூளைச் செயல்திறனை அதிகரித்து ‘போதும் என்ற மன நிறைவைக் கொடுப்பதால் பசிக்கும் உணர்வு தள்ளிப்போகிறது, குறைவா ன உணவும் எடுத்துக்கொள்ள ஏதுவாகிறது. அதனால் உடல் எடை எளிதில் குறைய வகை செய்கிறது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

No comments: