Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Sunday, November 24, 2013

வேர்டில் கண்ட்ரோல் கட்டளைகள்


வேர்டில் கண்ட்ரோல் கட்டளைகள் 
Ctrl+a: டாகுமெண்ட் முழுவதையும் தேர்ந்தெடுக்க. 
Ctrl+b: அழுத்தமான (Bold) வடிவில் எழுத்தமைக்க. 
Ctrl+c: தேர்ந்தெடுத்ததை, கோப்பினை நகலெடுக்க (Copy). 
Ctrl+d: ஓர் எழுத்தின் (font) வடிவை மாற்றி அமைக்க.
Ctrl+e: நடுவே டெக்ஸ்ட் அமைக்க. 
Ctrl+f:குறிப்பிட்ட சொல் அல்லது டெக்ஸ்ட் அமைந்துள்ள இடத்தைக் கண்டறிந்து, அதன் இடத்தில் வேறு ஒரு சொல் அமைக்க. மீண்டும் தேடலைத் தொடர Alt+Ctrl+y. 
Ctrl+g: ஓரிடம் செல்ல. 
Ctrl+h: (ஒன்றின் இடத்தில்) மற்றொன்றை அமைத்திட (Replace). 
Ctrl+i: எழுத்து / சொல்லை சாய்வாக அமைக்க . 
Ctrl+j: பத்தி ஒன்றை இருபக்கமும் சீராக, நேராக (Justify) அமைக்க. 
Ctrl+k: ஹைப்பர் லிங்க் ஒன்றை ஏற்படுத்த. 
Ctrl+l: பத்தி ஒன்றை இடது பக்கம் சீராக நேராக அமைக்க. 
Ctrl+m: பத்தியினை இடதுபுறமாக சிறிய இடம் விட. 
Ctrl+n: புதிய டாகுமெண்ட் உருவாக்க. 
Ctrl+o: டாகுமெண்ட் ஒன்றைத் திறக்க. 
Ctrl+p: டாகுமெண்ட் ஒன்றை அச்சடிக்க 
Ctrl+q: பத்தி அமைப்பை நீக்க. 
Ctrl+r: பத்தியினை வலது புறம் சீராக, நேராக அமைக்க. 
Ctrl+s: தானாக, டாகுமெண்ட் பதியப்பட (Auto save). 
Ctrl+t: பத்தியில் இடைப்பட்ட இடத்தில் இடைவெளி (Hanging) அமைக்க. 
Ctrl+u: டெக்ஸ்ட்டில் அடிக்கோடிட. 
Ctrl+v: தேர்ந்தெடுத்ததை ஒட்டிட. 
Ctrl+w: டாகுமெண்ட்டை மூடிட. 
Ctrl+x: தேர்ந்தெடுத்ததை அழிக்க, நீக்கிட. 
Ctrl+y: இறுதியாக மேற்கொண்ட செயல்பாட்டினை மீண்டும் மேற்கொள்ள. 
Ctrl+z: இறுதியாக மேற்கொண்ட செயல்பாட்டிற்கு மாறாக மேற்கொள்ள. 
கர்சர் நகர்த்தல் 
வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் கர்சரை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் திரையின் தொடக்கத்திற்குக் கொண்டு செல்ல எண்ணுகிறீர்கள். அதாவது திரையில் தெரியும் டெக்ஸ்ட் ஸ்கிரீன் நகரக் கூடாது. தெரிகின்ற வாக்கியங்களில் முதல் வாக்கியத்திற்குச் செல்ல வேண்டும். என்ன செய்திடலாம்? Home அழுத்தினால் வரியின் தொடக்கத்திற்கு மட்டுமே செல்லும். Ctrl + Home அழுத்தினால் அந்த ஆவணத்தின் தொடக்கத்திற்குச் செல்லும். திரையில் தெரியும் முதல் வாக்கியத்தின் தொடக்கத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Up அழுத்திப் பாருங்கள். அதே போல் திரையில் தெரியும் பக்கத்தின் கீழ்ப்பாகத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Downஅழுத்தவும். வேர்ட் டாகுமெண்ட்டில் வேகமாக நினைத்த இடத்திற்கு நீந்திச் செல்ல விரல் நுனியில் உள்ள சூட்சுமத்தைத் தெரிந்து கொண்டீர்களா! 
பாரா நகர்த்தல் 
சில வேளைகளில் நாம் உருவாக்கும் வேர்ட் டாகுமெண்ட்டில் ஏதேனும் ஒரு முழு பாராவை டாகுமெண்ட்டின் வேறு இடத்தில் அமைக்க விரும்புவோம். இதற்கு காப்பி அல்லது கட் மற்றும் பேஸ்ட் கட்டளை எல்லாம் வேண்டாம். எந்த பாராவினை நகர்த்த வேண்டுமோ அதனுள்ளாக கர்சரைக் கொண்டு சென்று வைக்கவும். பின் ஷிப்ட் மற்றும் ஆல்ட் கீகளை அழுத்தியவாறு அப் ஆரோ அல்லது டவுண் ஆரோவினை அழுத்தினால் பாரா மேலே கீழே முழுதாகச் செல்லும்.

No comments: