Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Friday, November 22, 2013

இயந்திரங்களின் இயக்கம் அறிய

பொதுவாகவே, ஒரு இயந்திரம் எப்படி இயங்குகிறது என்பதைக் காண அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். நம் உடம்பின் உள்ளே என்னதான் நடக்கிறது, இந்த இயந்திரமும் எப்படி இயங்குகிறது என்பதைக் காணவும் நமக்கு ஆர்வம் தான். இதே ஆர்வத்துடன் அண்மையில் ஓர் இணையதளத்தைக் காண நேர்ந்தது. உடம்பின் இயக்கம் குறித்து தகவல் அல்லது படக் காட்சி இல்லை என்றாலும், 21 வகை இஞ்சின்கள் குறித்தும், அவை
இயங்குவது குறித்தும், தகவல்களும், நகரும் படக் காட்சிகளும் தரப்படுகின்றன. இந்த செயல்பாட்டிற்கேற்ற வகையில், இந்த தளத்தின் பெயர் Animated engines எனத் தரப்பட்டுள்ளது. இந்த தளத்தின் முகவரி http://www.animatedengines. com/
இந்த தளத்தில் தகவல்களைத் தேடிப் பெறுவது மிக மிக எளிதாக்கப்பட்டுள்ளது. நீங்கள் இயக்கம் காண விரும்பும் இஞ்சினைத் தேர்ந்தெடுத்து, கிளிக் செய்தால் போதும். உடனே, அந்த இஞ்சின் குறித்து படமும் தகவல்களும் உள்ள தளத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். முதலில், அந்த இஞ்சின் குறித்த பொதுவான மற்றும் தொழில் நுட்ப தகவல்கள் தரப்படுகின்றன. பின்னர் இயக்கம் காட்டப்படுகிறது. இன்னும் கீழாகச் சென்றால், இயக்கத்தின் ஒவ்வொரு நிலையும் காட்டப்பட்டு விளக்கப்படுகிறது. இதில் வேடிக்கையும், அதே நேரத்தில் சிறப்பான அம்சமும் என்னவென்றால், இஞ்சின் இயக்கம் காட்டப்படும் தளத்தின் மேலாக, இடது வலதாக இரண்டு அம்புக் குறிகள் உள்ளன. இவற்றை அழுத்தி, இயக்கத்தினை மெதுவாகவும், விரைவாகவும் அமைத்து ரசிக்கலாம். இதன் மூலம், ஓர் இஞ்சின் எப்படி இயங்கத் தொடங்கி, படிப்படியாக எப்படி முழுமையான இயக்கத்திற்கு வருகிறது என்பதனைத் தெளிவாக அறியலாம். சிறுவர்கள், ஒவ்வொரு இஞ்சினாக, அவர்கள் வாழ்க்கையில் அறிமுகமாகும் போது, இந்த தளத்தைக் காட்டி, அவற்றின் இயக்கம் குறித்து கற்றுக் கொடுக்கலாம். நாமும் அறிந்து கொள்ளலாம்.

No comments: