Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Friday, November 22, 2013

தெளிவாக ஆங்கிலம்

ஆங்கில மொழியில் சொற்களில் உள்ள எழுத்துக்களை நாம் தமிழில் உள்ளது போல அப்படியே உச்சரிப்பதில்லை. உச்சரிப்பில் நிறைய வேறுபாடு உண்டு. ஆனால், அதே நேரத்தில், ஒரே மாதிரியான உச்சரிப்பில் பல ஜோடி சொற்கள் பயன்பாட்டில் உள்ளன. எடுத்துக்காட்டாக Capital/ Capitol, Affect/ Effect, new/ anew, practice/ practise, sour/ sore, side/ aside, warranty/ guarantee, affluent/ effluent/ suit, suite ஆகியவற்றைக் கூறலாம்.
இந்தச் சொற்களைப் பயன்படுத்துகையில், நமக்கு எந்த சொல் எந்தப் பொருளுக்குப் பயன்படுத்துவது என்ற குழப்பம் வரும். இது இயற்கையே. ஆனால், நாம் சரியாகப் பயன்படுத்தினால் தான், நம் எண்ணங்கள் சரியாக வெளிப்படும். இந்த வகையான குழப்பம் ஏற்படுத்தும் சொற்களுக்குச் சரியான பொருளைக் கூறும் வகையில், இணைய தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்த தளத்தின் முகவரி : http://www.confusingwords.com/index.phpஇந்த தளத்தில் நுழைந்தவுடன் நமக்குச் சந்தேகம் எழும் சொல்லை டைப் செய்து அருகே உள்ள “Find” பட்டன் அழுத்தினால், அதற்கான விளக்கம் அளிக்கப்படுகிறது. இந்த சொல்லுடன் தொடர்புடைய, இந்த சொல் சார்ந்து குழப்பக் கூடிய சொல்லின் பொருளும் தரப்படுகிறது. 
இதில் 3,210 சொற்களுக்கான விளக்கங்கள் உள்ளன. நமக்கு சந்தேகம் உள்ள சொல்லை, கொடுக்கப்படும் கட்டத்தில் டைப் செய்து என்டர் செய்தால், கீழாக, விரிவாகப் பொருள் தரப்படுகிறது. சொல்லை எப்படி வாக்கியத்தில் பயன்படுத்தலாம் என்று விளக்கம் தரப்படுகிறது. அந்த சொல்லை எத்தனை பேர் சந்தேகத்துடன் எடுத்துப் பார்த்தனர் என்ற எண்ணிக்கையும் தரப்படுகிறது. 
சொற்களுக்கான எழுத்துக்கள் முழுமையாகத் தெரியவில்லை என்றால், ? அல்லது * கொடுத்துச் சொல்லை அமைக்கலாம். எடுத்துக்காட்டாக, ‘man’ என்ற சொல்லின் எழுத்துக்கள் நினைவில் சரியாக இல்லை எனில், “m?n” or “??n” or “ma?” or “m*”. என அமைத்துத் தேடலாம். m என்ற எழுத்தில் தொடங்கும் அனைத்து சொற்களும் பெற “m???” என டைப் செய்திடலாம். இந்த தளத்தில் உள்ள அனைத்து சொற்களின் பட்டியல் கிடைக்க * டைப் செய்து “Find” அழுத்தினால், அனைத்து சொற்களும் கிடைக்கின்றன. ஆங்கிலம் பயன்படுத்தும் அனைவரும் சென்று பார்க்க வேண்டிய தளம் இது. 
ஆங்கில மொழியினை எந்த தயக்கமும், சந்தேகமும் இன்றிப் பயன்படுத்த இந்த தளம் நமக்கு நன்கு உதவுகிறது.

No comments: