Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Wednesday, March 26, 2014

டாகுமெண்டில் மேத்ஸ் பார்முலா



வேர்டில் டாகுமெண்ட் ஒன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். இதில் மேத்ஸ் பார்முலா ஒன்றை அமைக்க வேண்டும். சப்ஸ்கிரிப்ட், சூப்பர் ஸ்கிரிப்ட் எல்லாம் பயன்படுத்தி பார்முலா அமைக்கக் கஷ்டப்பட வேண்டாம். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இதற்கான வழி ஒன்று தரப்பட்டுள்ளது. அதன் பெயர் Math Input Panel. இதனைப் பெற ஸ்டார் பட்டன் அழுத்திக் கிடைக்கும் சர்ச் பேனலில், Math Input Panel என டைப் செய்திடவும். உடன் மஞ்சள் நிறத்தில் கட்டம் ஒன்று கிடைக்கும். இதில் மவுஸின் உதவி கொண்டு, அதன்
கர்சரால், நீங்கள் அமைக்க வேண்டிய பார்முலாவினை அமைக்கவும். முடித்த பின்னர், அந்தக் கட்டத்தின் கீழாக உள்ள Insert என்ற இடத்தில் கிளிக் செய்தால், டாகுமெண்ட்டில் கர்சர் உள்ள இடத்தில் அந்த பார்முலா அமைந்துவிடும். இதில் மாற்றங்கள் வேண்டும் என்றாலும் மேற்கொள்ளலாம். வேர்ட் டாகு மெண்ட் என்றில்லாமல், புரோகிராம்களிலும் இதனை அமைத்துக் கொள்ளலாம். மேத்ஸ் பார்முலாக்களைத் தங்கள் டாகுமெண்ட்களில் அடிக்கடி பயன்படுத்துபவர்களுக்கு இது அதிகப் பயனுள்ளதாக இருக்கும்.
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள math recognizer என்னும் புரோகிராம், நாம் மவுஸால் எழுதுவதனைப் புரிந்து கொண்டு, டெக்ஸ்ட்டாக அமைத்துத் தருகிறது. இந்த மேத் இன்புட் பேனல் விண்டோவில் உள்ள ஹெல்ப் அழுத்தினால், இந்த பேனல் பயன்படுத்துவது குறித்து நிறைய தகவல்கள் கிடைக்கின்றன.

No comments: