Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Saturday, March 29, 2014

எக்ஸெல் ஸ்பெல் செக்கர்



அநேகமாக நாம் அனைவரும் வேர்ட் புரோகிராம் தரும் ஸ்பெல் செக்கரைத்தான் பயன்படுத்தி வருகிறோம். சிலர் அதில் மட்டுமே ஸ்பெல் செக்கர் இருப்பதாக எண்ணிக் கொண்டு வருகின்றனர். வேர்ட் போலவே, எக்ஸெல் தொகுப்பிலும் ஸ்பெல் செக்கர் உள்ளது. மற்ற ஆபீஸ் அப்ளிகேஷன்களில் இதனை இயக்குவது போல, இதிலும் இயக்கலாம்.
1. எழுத்துப் பிழை அறிய விரும்பும் ஒர்க்ஷீட் அல்லது ஒர்க்ஷீட்களைத் தேர்ந்தெடுக்கவும்.
2. Tools மெனு சென்று Spelling என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது F7 கீ அழுத்தவும். எக்ஸெல் உங்கள் ஒர்க் ஷீட்டினை ஸ்பெல் செக் செய்திடத் தொடங்கும். ஸ்பெல்லிங் டயலாக் பாக்ஸ் காட்டப்பட்டு அதில், ஸ்பெல் செக்கர், பிழை என எண்ணும் இடங்கள் எல்லாம் காட்டப்படும். இதில் காட்டப்படும் spelling suggestions குறித்து நீங்கள் உங்கள் முடிவை அமல்படுத்தலாம்.
ஸ்பெல் செக்கரை ஒர்க் ஷீட் முழுவதும் மேற்கொள்ளாமல், சில செல்களில் மட்டும் கூட மேற்கொள்ளலாம். இதற்கு,
1. எந்த செல்களில் சோதனை மேற்கொள்ள வேண்டுமோ, அந்த செல்களைத் தேர்ந்தெடுக்கவும்.
2. வழக்கம் போல Tools மெனு சென்று Spelling என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது F7 கீ அழுத்தவும். இங்கும் காட்டப்படும் தவறுகளுக்கு உங்கள் கணிப்புப்படி முடிவெடுத்துச் செயல்படவும்.
நீங்கள் தேர்ந்தெடுத்த செல்களில் ஸ்பெல் செக் முடிந்த பின்னர், எக்ஸெல், உங்கள் ஒர்க்ஷீட்டின் மீதப் பகுதியும் சோதனை செய்திடவா? என்று கேட்கும். விருப்பமிருந்தால் தொடரலாம். அல்லது No கிளிக் செய்து, ஸ்பெல் செக்கிங் சோதனையை முடிக்கலாம்.

No comments: