Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Saturday, March 29, 2014

எக்ஸெல் டிப்ஸ்

எக்ஸெல் தனிக் குறிப்புகள்: தேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்பு உள்ளது என்று அறிய CTRL+[ அழுத்தவும்.
Ctrl+] கீகளை அழுத்தினால் எந்த செல்லில் கர்சர் இருக்கிறதோ அந்த செல் சம்பந்தப்பட்ட பார்முலாக்கள் காட்டப்படும்.
ஷிப்ட் + ஆரோ கீ (Shft+Arrow key) அழுத்தினால் செல்கள் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு செல்லுக்கு நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல் + ஷிப்ட் + ஆரோ கீ (Ctrl+Shft+ Arrow key) அழுத்தினால் அதே படுக்கை அல்லது நெட்டு வரிசையில் டேட்டா இருக்கும் கடைசி செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.
ஷிப்ட் + ஹோம் கீகள் (Shft+Home) அழுத்தப்படுகையில் படுக்கை வரிசையின் முதல் செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல்+ஷிப்ட்+ ஹோம் (Ctrl+Shft+ Home) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க் ஷீட்டின் முதல் செல் வரை நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல்+ஷிப்ட் + எண்ட் (Ctrl+Shft+ End) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க்ஷீட்டில் கடைசியாகப் பயன்படுத்தப்பட்ட செல் வரையில் நீட்டிக்கப்படும்.

எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் என்டர் கீ: எக்ஸெல் தொகுப்பில் என்டர் கீ அழுத்தினால், வழக்கத்திற்கு மாறான செயல்பாடு மேற்கொள்ளப்படுவதனைக் காணலாம். செல் ஒன்றில் டேட்டாவினை அமைத்துவிட்டு, என்டர் கீ அழுத்தினால், அந்த டேட்டாவினை செல்லில் அமைத்த கையோடு, கர்சர் அதே நெட்டு வரிசையில் கீழே உள்ள செல்லுக்குச் செல்லும். இவ்வாறு இல்லாமல், என்டர் கீ அழுத்துவதன் மூலமாக மேற்கொள்ளப்படும் பணியினை நீங்கள் விரும்பும் வகையில் மேற்கொள்ளுமாறு செய்திடலாம்.
பொதுவாக செல் ஒன்றில் டேட்டாவினை என்டர் செய்தவுடன், என்டர் கீயினை அழுத்துவது வழக்கமான வேலையாகும். அவ்வாறு செய்திடுகையில் உங்கள் விருப்பப்படி என்டர் கீக்கான பணியை நிர்ணயம் செய்திடலாம். ஒன்றுமே நடக்காத படி செய்திடலாம். அல்லது கீழே உள்ள செல்லுக்குக் கர்சர் செல்லாமல், பக்கத்தில் உள்ள செல்லுக்குச் செல்லும்படி அமைத்திடலாம். இதற்கான வழிகள்:
1. டூல்ஸ் மெனு சென்று ஆப்ஷன்ஸ் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் ஆப்ஷன் டயலாக் பாக்ஸினைத் தரும்.
2. இதில் உள்ள டேப்களில் எடிட் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. Move Selection After Enter என்ற வரி அருகே உள்ள செக் பாக்ஸைக் காணவும். என்டர் அழுத்திய பிறகு கர்சர் எங்கும் செல்லக் கூடாது எனில், இதில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடலாம்.
4. என்டர் அழுத்திய பின்னர், கர்சர் எங்கேனும் செல்ல வேண்டும் என எண்ணினால், டிக் அடையாளம் ஏற்படுத்திப் பின்னர் அருகே உள்ள கீழ்விரிமெனுவிற்கான அம்புக் குறியினை அழுத்தி, அதில் உள்ள கீழே, மேலே, வலது மற்றும் இடது (Down, Up, Right or Left) என உள்ளதில் எந்தப் பக்கம் கர்சர் செல்ல வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இனி நீங்கள் அமைத்தபடி, டேட்டா என்டர் செய்திடுகையில், என்டர் கீ அழுத்தும்போது, கர்சர் நகர்த்தப்படும்.

No comments: