Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Sunday, August 24, 2014

வேர்ட் டேபிளில் செல் இணைப்பு


வேர்ட் புரோகிராமில், பலவகை அமைப்புகளில் டேபிள் ஒன்றை அமைத்திட, table editor என்று ஒரு டூல் தரப்படுகிறது. இதன் மூலம் அடுத்தடுத்த செல்களை ஒன்றாக இணைக்கலாம். அதாவது, இணைப்பிற்குப் பின்னர், இது ஒரே செல் ஆகச் செயல்படும். இதற்கு அந்த இரு செல்களும், ஒரே படுக்கை வரிசையில், அல்லது நெட்டு வரிசையில் இருக்க வேண்டும். இவற்றை இணைக்கக் கீழ்க்காணும் வழிமுறைகளைக் கையாளவும்.
1. இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட, அடுத்தடுத்து இருக்கும் செல்களை, ஒரே
நெட்டுவரிசை (column) அல்லது படுக்கை வரிசையில் (row) தேர்ந்தெடுக்கவும்.
2. ரிப்பனில் Table Tools Layout என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இனி Merge குரூப்பில், Merge Cells என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட், நீங்கள் தேர்ந்தெடுத்த செல்களை, ஒரே செல்லாக இணைத்துக் காட்டும்.
இதே செயல்பாட்டினை Eraser டூல் கொண்டும் அமைக்கலாம்.
1.ரிப்பனில் உள்ள Design டேப்பில், (இது கர்சர் டேபிள் உள்ளாக இருக்கும்போது மட்டுமே காட்டப்படும்) Draw Borders என்ற குரூப்பினைக் காணவும். அடுத்து இதில் கிடைக்கும் Eraser டூலில் கிளிக் செய்திடவும். இப்போது வேர்ட், கர்சரை ஒரு அழிப்பானாக (Eraser) மாற்றிக் காட்டும்.
2. இந்த மாற்றப்பட்ட அழிப்பான் கர்சரை கோட்டில் வைத்து கிளிக் செய்தால், அந்த கோடு அழிக்கப்பட்டு, செல்கள் ஒரே செல்லாக அமைக்கப்படும். கோட்டின் குறுக்காக இந்த கர்சரை இழுத்துச் சென்றாலும் கோடு அழிக்கப்படும்.
இந்த கர்சரை வழக்கம்போல மாற்ற எஸ்கேப் கீயை அழுத்தலாம். அல்லது ரிப்பனில் Eraser டூல் மீது மீண்டும் கிளிக் செய்திடலாம்.

No comments: