Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Sunday, September 14, 2014

பார்வை கூர்மைக்கு அப்ரிகாட்

சூரியனின் தங்க முட்டை என்று கிரேக்க மொழியில் அழைக்கப்படும் ஊட்டச்சத்துக்கள், தாது உப்புக்கள் நிறைந்த பழம் அப்ரிகாட். பழத்துக்கு எந்த பாதிப்பும் இன்றி நீர்ச்சத்து மட்டும் வெளியேற்றப்படுகிறது.
சத்துக்கள்  பலன்கள்:  கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, சி உள்ளிட்ட சத்துக்கள் இதில் நிறைவாக உள்ளன. இதில் அதிக அளவில் இரும்புச்சத்து உள்ளதால், ரத்த அணுக்கள் உற்பத்திக்குப் பெரிதும் உதவியாக இருக்கிறது. இது  ரத்த சோகையை வராமல் தடுக்கும்.  ரத்த சோகை வந்தவர்களுக்கு அருமருந்தாகவும் அப்ரிகாட் இருக்கிறது.  எனவே, பெண்கள் மாதவிலக்கு நேரத்தில் இந்தப் பழத்தை எடுத்துக்கொள்வது பெரிதும் பயனளிக்கும். குடலில் தேவையற்ற பொருட்கள் தங்குவதை வெளியேற்றி செரிமான மண்டலத்தைத் தூய்மைப்படுத்துகிறது.
p89
காய்ச்சல், தீராத தாகம் உள்ளவர்களுக்கு இந்தப் பழத்தை தண்ணீரில் கலந்து சிறிது தேன் கலந்து கொடுத்தல் நல்ல பலன் கிடைக்கும்.
அப்ரிகாட் பழத்தை சருமத்தில் வெளிப்பூச்சாகவும் பயன்படுத்தலாம். சூரிய கதிர்வீச்சல் சருமம் பாதிக்கப்படுவதில் இருந்து இது பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் அரிப்பு உள்ளிட்ட பல்வேறு சருமப் பிரச்னைகளில் இருந்து தீர்வு அளிக்கிறது.  இதில் அதிக அளவில் வைட்டமின் ஏ உள்ளதால், நல்ல கூர்மையான பார்வைக்கு உதவியாக இருக்கிறது. மேலும், மிகச்சிறந்த ஆன்டிஆக்சிடன்டாக செயல்பட்டு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். மேலும் இந்தப் பழத்தைச் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் இதய நோய்களுக்கான வாய்ப்பு குறைகிறது. கெட்ட கொழுப்பு அளவு குறைகிறது. சில வகையான புற்றுநோய் செல்களுக்கு எதிராகவும் இந்த பழம் செயல்படுகிறது.
p90
தேவை: சாப்பிடுவதற்கு முன்பு 3 உலர் அப்ரிகாட் பழத்தைச் சாப்பிடுவது செரிமான மண்டலத்தைத் தூண்டி உணவு நன்கு செரிமானம் ஆக உதவுகிறது. கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் இந்தப் பழத்தை எடுத்துக்கொள்ளலாம். கர்ப்பக்காலத்தில் இனிப்பு உள்ளிட்டவற்றைச் சாப்பிடுவதற்குப் பதில், உலர் அப்ரிகாட் சாப்பிடுவது நல்ல சிற்றுண்டியாக இருக்கும்.

No comments: