Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Friday, October 24, 2014

நீரிழிவு நோய் பாதிப்பு இருக்கா? கண் பரிசோதனை முக்கியம்

‘நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்கள், ஆறு மாதத்திற்கு ஒரு முறை, கண்
பரிசோதனை செய்து கொள்வது அவசியம்’ என்கிறார், எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குனர் நமீதா புவனேஸ்வரி.
உலக கண் பார்வை தினத்தையொட்டி (அக்., 9), ‘நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளோருக்கு, ஆரம்பத்தில் விழித்திரை பாதிப்பைக் கண்டறிந்து, பார்வை குறைபாட்டை நிவர்த்தி செய்தல்’ என்ற, கருத்தை மையமாக வைத்து, நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன.
அப்போது, எழும்பூர் கண் மருத்துவமனை இயக்குனர், நமீதா புவனேஸ்வரி, நீரிழிவு பாதிப்புள்ளோருக்கு அளித்த ஆலோசனைகள் இதோ:கண்களில் உள்ள ரத்தக்குழாய் அடைப்பு, வீக்கம், ரத்தக்கசிவு, வெள்ளை அணுக்கள் குறைபாடு போன்ற காரணங்களால், கண்
பார்வை பாதிப்பு ஏற்படுகிறது. எழும்பூர் கண் மருத்துவமனையில் மட்டும், ஒரு மாதத்தில்,
538 பேர் நீரிழிவு நோய் பாதிப்பால், கண் பார்வை பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு வருகின்றனர்.கண்களில் ரத்தக்குழாய் அடைப்பால், ஆக்சிஜன் செல்வது குறைந்து, புதிய ரத்தக்குழாய் உருவாகிறது. இது, ஸ்திரத்தன்மை இல்லாமல், ரத்த கசிவு ஏற்படுகிறது. நாளடைவில், விழித்திரையை தாக்குகிறது. நீரிழிவு நோயாளிகள்,
மூன்று அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறை, கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
அலட்சியம் காட்டினால் இதன் தாக்கம், சிறுநீரக பாதிப்பு, நரம்பு, மூளை மட்டுமின்றி இதயத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்தல்; டாக்டர் ஆலோசனைப்படி மருந்து, மாத்திரை தொடர்ந்து
சாப்பிடுதல், யோகா மற்றும் உடற்பயிற்சியும் செய்து வந்தால், கண் பார்வை குறைபாடு வராமல் காத்துக் கொள்ளலாம். இப்படி, ஆலோசனைகளை கூறுகிறார் டாக்டர் நமீதா. இதுவரை, ‘என்ன பெரிசா வரப்போகுது; பார்த்துக்கலாம்’ என, நீங்கள், அலட்சியமாக இருந்திருந்தால்,
இனியாவது, உங்கள் விழிகளை பாதுகாக்க விழித்துக் கொண்டு, கண் பரிசோதனை செய்து கொள்வதே நல்லது

No comments: