Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Friday, October 31, 2014

தோல் சுருக்கம் நீங்க வேண்டுமா?


தோலின் நெகிழ்வுத் தன்மை குறைவாலும், உலர்ந்து போவதாலும், சுருக்கங்கள் ஏற்படுகின்றன. வயதானவர்கள், வெயிலில் அலைபவர்கள், புகை பிடிப்பவர்களுக்கும் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டாலும் தோலில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன.
உணவே மருந்து:
தோல் மென்மையாக, சுருக்கங்கள் இன்றி இருப்பதற்கு, தினசரி, 500 மி.கி., வைட்டமின் ‘சி’ தேவை. இதற்கு, வைட்டமின்-சி, ஏ, நிறைந்த, ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யாப்பழம், குடைமிளகாய், முட்டைக்கோஸ் மற்றும் பப்பாளி பழத்தை, தினமும் நம் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
தினமும் ஒரு கிளாஸ் கேரட், வெள்ளரிக்காய், பீட்ரூட் அல்லது ஏதாவது ஒரு பழ ஜூசை பருக வேண்டும். தோல் வறண்டு போகாமல் இருக்க, தினமும், எட்டு முதல், 10 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும்.
தொடர்ந்து தோலை சுத்தப்படுத்த வேண்டும். அதில், உள்ள பெரிய துளைகளை தக்காளி கூழால் தேய்த்து சுத்தம் செய்வதால், சுருக்கம் ஏற்படாது. வைட்டமின் பி யுடன் கூடிய ஜின்க், தோலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

வறண்ட சருமம்:
வறண்ட சருமம் உள்ளவர்கள், தங்களின் தினசரி காலை உணவாக, ஒரு கப் குறைந்த கொழுப்புள்ள தயிர் மற்றும் ஆறு முதல் எட்டு பாதாம் கொட்டைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். திராட்டை மற்றும் தேன் கலந்து கூழாக்கி, முகத்தில் தடவி, 20-30 நிமிடங்கள் உலர வைத்து, பின்னர் கழுவவேண்டும். திராட்சையில் உள்ள ஆல்பா ஹைடிராக்சி அமிலம் மற்றும் கொலாஜன் சுருக்கங்களை நீக்கும்.
முகத்தைக் கழுவ சோப்பை பயன்படுத்தக் கூடாது. அதற்கு பதிலாக, சோப்புத் தன்மை இல்லாத பேஸ் வாஷ்களை பயன்படுத்துவதால், நம் தோலில் உள்ள இயற்கையான வழவழப்பு பாதுகாக்கப்படும்.

உடற்பயிற்சி:
ஊட்டச் சத்துள்ள உணவுடன் முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனால், ரத்த ஓட்டம் அதிகரித்து, தோலில் உள்ள செல்களுக்கு ஊட்டச்சத்துக்கள், ஆக்சிஜன் போதிய அளவு கிடைப்பதால், நம் சருமம், பளபளவென ஜொலிக்கும்.

No comments: