Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Monday, June 15, 2015

முகப்பொலிவின் ரகசியம்

 மருத்துவ குணம் கொண்ட உணவு பொருட்கள் எளிமையாக கிடைக்கும் வகையில் இருப்பினும், அதில் இருக்கும் பயன்கள் மற்றும் மூலிகை குணங்களை நாம் அறிவதில்லை. இன்னும் சில பொருட்களை, எந்தெந்த உடல் பிரச்னைகளுக்கு பயன்படுத்த வேண்டும்
என்பது தெரியாததால், அதனை பயன்படுத்துவதில்லை. இவ்வாறு எளிமையாக கிடைக்கும் மருத்துவ பொருட்களில் ஜாதிக்காயும் ஒன்று.
ஜாதிக்காயை தூளாக அரைத்து அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டால், உடல் சூடு குறைவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வழக்கமாக, தூக்கமின்மை பிரச்னைகள் என்றாலே, ஆயுர்வேதத்தில் ஜாதிக்காயை பரிந்துரைப்பதுண்டு.
ஜாதிக்காய் பொடியை பாலில் கலந்து குடித்தால், நன்றாக உறங்கலாம். மூளையின் செயல்பாட்டை தூண்டுகிறது. முகத்தில் ஏற்படும், பருக்கள், கிருமிகளை அறவே போக்கும் தன்மை இதற்கு உண்டு. ஜாதிக்காய் பொடியுடன் தயிர் சேர்த்து முகத்தில் தடவினால், கிருமிகளை முழுமையாக நீக்கிவிடும்.
முகத்தை பொலிவு பெற செய்வதற்கு, இப்பொடியை, தேன் அல்லது நீரில் குழைத்து முகத்தில் பயன்படுத்தினால், முகம் பொலிவு பெறுவதோடு, வெயிலினால் ஏற்படும் கருமையையும் அகற்றும். ஜாதிக்காய் பொடி யை, அன்றாடம் தலைக்கு பயன்படுத்தும் எண்ணெயில் கலந்து தேய்த்து வந்தால், பொடுகு, வெள்ளை பூச்சுகள் குறையும்.
குழந்தைகளுக்கு, உணவில் கலந்து கொடுப்பதால், அஜீரண கோளாறுகள் நீங்கிவிடும். முதியோர்களின் மூட்டு வலி, தசை வலி போன்ற பிரச்னைகளை நீக்குவதற்கு, ஜாதிக்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். பலவீனமான பற்கள் மற்றும் கிருமிகளால் சொத்தை ஏற்படுவது போன்ற பிரச்னைகளை போக்கவும் ஜாதிக்காய் பயன்படுகிறது

Thank You

No comments: