Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Monday, September 1, 2014

எக்ஸெல் பிட்ஸ்:

தேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்பு உள்ளது என்று அறிய CTRL+[ அழுத்தவும்.
ctrl+] கீகளை அழுத்தினால் எந்த செல்லில் கர்சர் இருக்கிறதோ அந்த செல் சம்பந்தப்பட்ட பார்முலாக்கள் காட்டப்படும்.
ஷிப்ட் + ஆரோ கீ (Shift+Arrow key) அழுத்தினால் செல்கள் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு செல்லுக்கு நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல் + ஷிப்ட் + ஆரோ கீ (Ctrl+Shift+ Arrow key) அழுத்தினால் அதே படுக்கை அல்லது நெட்டு வரிசையில் டேட்டா இருக்கும் கடைசி செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.
ஷிப்ட் + ஹோம் கீகள் (Shift+Home) அழுத்தப்படுகையில் படுக்கை வரிசையின் முதல் செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல்+ஷிப்ட்+ ஹோம் (Ctrl+Shift+ Home) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க் ஷீட்டின் முதல் செல் வரை நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல்+ஷிப்ட் + எண்ட் (Ctrl+Shift+End) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க்ஷீட்டில் கடைசியாகப் பயன்படுத்தப்பட்ட செல் வரையில் நீட்டிக்கப்படும்.
ஒரே எண் பல செல்களில்:
எக்ஸெல் ஒர்க்ஷீட் ஒன்றில், நூறு செல்களில் ஒரே எண்ணை அமைக்க விரும்புகிறீர்கள். அந்த ஒர்க்ஷீட்டில் மேற்கொள்ளப்படும் கணக்கீட்டில் அந்த எண் பயன்படுத்தப் படுவதாக இருக்கலாம். ஆனால் இதற்காக, ஒவ்வொரு செல்லாக அந்த எண்ணை அமைக்க முடியுமா? இதற்கான சுருக்கு வழி என்ன?
எண் வர வேண்டிய எல்லா செல்லுகளையும் முதலில் தேர்வு செய்யுங்கள். எண்ணை டைப் செய்து கன்ட்ரோல்+என்டர் கீகளை அழுத்துங்கள். அந்த எண், தேர்வு செய்யப்பட்ட எல்லா செல்லுகளிலும் வந்து விடும்.
புதிய ஒர்க்ஷீட் பெற:
எக்ஸெல் தொகுப்பு பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள் கூடுதலாக ஒரு ஒர்க் ஷீட் தேவை எனில் Insert மெனு சென்று அங்கு Worksheet என்னும் பிரிவினைக் கிளிக் செய்வர்கள். ஒரு ஒர்க்ஷீட் பெற இத்தனை கிளிக்குகள் தேவை தானா? என நாம் நினைக்கலாம். சில கீகளை அழுத்தியே அதனைப் பெறும் வழியினைப் பார்ப்போமா! அடுத்த முறை எக்ஸெல் தொகுப்பில் பணியாற்றும்போது Shift + F11 அழுத்திப் பாருங்கள். உங்களுக்கு இன்னொரு ஒர்க்ஷீட் கிடைத்திருக்கும்.
எக்ஸெல் கிராபிக்ஸ்:
ஒர்க்ஷீட் ஒன்றில் கிராபிக்ஸ் இணைப்பது பல வழிகளில் அதில் உள்ள டேட்டாவினை நமக்கு எடுத்துக் காட்டும். ஆனால் சில வேளைகளில் இந்த கிராபிக்ஸ் தேவையற்ற சமாச்சாரமாகத் தோன்றும். குறிப்பாக ஒர்க்ஷீட் பிரிண்ட் எடுக்கும் போது அது தேவையற்றதாகத் தோன்றும். நாம் வேண்டும்போது இதனை வைத்துக் கொண்டு, வேண்டாதபோது மறைக்கும் வழியினை இங்கு காணலாம்.
நீங்கள் பயன்படுத்துவது எக்ஸெல் 97 முதல் எக்ஸெல் புதிய தொகுப்பு வரையில் எதுவாக இருந்தாலும் கீழே கண்டுள்ள வழிகளைப் பின்பற்றவும்.
1. Tools மெனு சென்று அதில் Options தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் இப்போது Options dialog box காட்டும்.
2. இதில் View என்னும் டேப் தேர்ந்தெடுக்கப்பட்டதை உறுதிப்படுத்தவும்.
3. பின்னர் Hide All என்னும் ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. அடுத்து ஓகே கிளிக் செய்தவுடன் கிராபிக்ஸ் ஒர்க்ஷீட்டிலிருந்து மறைக்கப்படும். அவை அங்குதான் இருக்கும். பார்வையிலிருந்தும் பிரிண்ட் செய்வதிலிருந்தும் மறைக்கப்படுகிறது.
நீங்கள் எக்ஸெல் 2007 பயன்படுத்துபவராக இருந்தால் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.
1. Office பட்டனை அழுத்தி அதில் Excel Options என்னும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். Excel Options dialog box காட்டப்படும்.
2. பின் டயலாக் பாக்ஸின் இடது பக்கம் உள்ள Advanced என்னும் ஆப்ஷனில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆப்ஷன்களை ஸ்குரோல் செய்து பார்க்கவும். அங்கு Display Options என்று ஒரு பிரிவினைப் பார்க்கலாம். இதில் உள்ள ட்ராப் டவுண் லிஸ்ட்டினைப் பயன்படுத்தி எந்த ஒர்க்புக் என்பதனையும் தேர்ந்தெடுக்கவும்.
4. பின் Nothing (Hide Objects) என்ற ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுக்கவும்.
5. ஓகே கிளிக் செய்தால் கிராபிக்ஸ் மறைக்கப்படும்.
இனி உங்கள் ஒர்க்ஷீட்டினை வழக்கமான முறையில் பிரிண்ட் செய்திடலாம். பிரிண்ட் செய்த பின் மீண்டும் கிராபிக்ஸ் படங்கள் ஒர்க்ஷீட்டில் காணப்பட வேண்டும் எனில் மேலே சொன்னபடி ஆப்ஷன்கள் பட்டியலில் சென்று Show All என்னும் ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுக்கவும்.

No comments: