Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Tuesday, February 11, 2014

வெளிநாட்டில் வேலைசெய்து வரும் நபர் அவரது தாயார் மற்றும் தகப்பனாருக்கு அனுப்பும் பணத்துக்கு வருமான வரி உண்டா?

?என்னுடைய மகள் கணவனை இழந்த நிலையில் வெளிநாட்டில் தனியாக வசித்து வருகிறார். அவர் எனக்கும் என்னுடைய மகனுக்கும் ஒவ்வொரு மாதமும் பணம் அனுப்புகிறார். இப்படி அனுப்பப்படும் தொகைக்கு வரியை எப்படிக் கணக்கிடுவது?

''உங்களுடைய மகள் வெளிநாட்டில் 180 நாட்களுக்குமேல் தங்கியிருந்து, சம்பாதிப்பவராக இருக்கும்பட்சத்தில் அவர் வெளிநாட்டில் வாழும் இந்தியராக  கருதப்படுவார். அவர் வெளிநாட்டில் சம்பாதிக்கும் பணத்துக்கு அந்த நாட்டின் வருமான வரிச் சட்டத்தின்படி வரிச் செலுத்தியிருப்பார். எனவே, உங்களுக்கும், உங்கள் மகனுக்கும் அவர் அனுப்பும் பணத்துக்கு வரிக் கிடையாது. வருமான வரிச் சட்டம் 1962-ன்படி அது வருமானமாகக் கருதப்படமாட்டாது.''

No comments: