Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Saturday, February 15, 2014

எக்ஸெல் டிப்ஸ்-ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க்புக்குகளுடன்



ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க்புக்குகளுடன்: எக்ஸெல் என்றாலே பல்வேறு தகவல்களை ஒன்றிணைத்து நமக்கு வேண்டிய வகையில் முடிவுகளை அமைக்கவும் உருவாக்கவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு புரோகிராம் ஆகும். எனவே ஒரே நேரத்தில் பல்வேறு வகை தகவல்கள் அடங்கிய பல ஒர்க்புக்குகளைத் திறந்து பணியாற்ற விரும்புவோம். ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு தகவல்களை மாற்றுவோம். ஒன்றின் முடிவின் அடிப்படையில் இன்னொன்றை அமைப்போம். அப்படியானால் தினந்தோறும் பணி தொடங்குகையில் ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க்புக்குகளைத் திறக்க வேண்டியதிருக்கும். ஒவ்வொன்றாகத் திறந்து அமைப்பது என்பது நேரத்தை வீணாக்கும் செயல். இதற்கென எக்ஸெல் ஒரு வழியைத் தருகிறது.
1.முதலில் நீங்கள் திறந்து பணியாற்ற விரும்பும் அனைத்து ஒர்க்புக்குகளையும் திறந்து கொள்ளுங்கள். நீங்கள் பணியாற்றும் இடம் எக்ஸெல்லில் ஒர்க் ஸ்பேஸ் என அழைக்கப்படுகிறது. இந்த ஒர்க் ஸ்பேஸில் அடுத்து இவை அனைத்தையும் கொண்டு வர வேண்டுமென்றால் அனைத்தையும் உள்ளடக்கி ஒரு பைலாக மாற்ற வேண்டும். எனவே இந்த குரூப்பில் தேவை இல்லாத ஒர்க்புக் இருந்தால் அதனை மூடிவிடவும்.
2.இப்போது தேவையான ஒர்க்புக்குகளைத் திறந்து இருப்பதை உறுதி செய்து கொண்டு File மெனு கிளிக் செய்து Save Workspace என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் Save Workspace டயலாக் பாக்ஸில் புதிய பைல் பெயர் ஒன்றைக் கொடுக்கவும். பின் Save என்பதில் கிளிக் செய்து மூடவும்.
3. சரி, இதனை எப்படித் திறப்பது? பைல் மெனு சென்று Open என்பதில் கிளிக் செய்திடவும். இனி ஒர்க் ஸ்பேஸ் பைல் பெயரைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால் அனைத்து ஒர்க்புக்குகளும் திறக்கப்பட்டு நீங்கள் பணி புரிய தயாராக இருக்கும்.
மறைக்கவும் காட்டவும்
எக்ஸெல் தொகுப்பில் சில நேரங்களில் ஒரு சில செல்கள் அல்லது வரிசைகளை மறைக்க வேண்டியதிருக்கும். என்ன செய்கிறோம்? பார்மட் மெனு சென்று பின் ரோ/காலம் சப் மெனு பெற்று அதன் பின் ஹைட்/அன்ஹைட் கிளிக் செய்து நிறைவேற்றுகிறோம். தேவையான டேட்டாவை மறைத்திட இவைதான் சரியான வழியாக இருக்கும். இதன் மூலம் நாம் நம்முடைய எக்ஸெல் ஒர்க் ஷீட் எப்படி தோற்றமளிக்க வேண்டும் என எண்ணுகிறோமோ அது போல அமைக்க முடிகிறது. எந்த டேட்டாவைக் காட்ட வேண்டும் என்று விரும்புகிறோமோ அவற்றை மட்டும் காட்ட முடிகிறது. ஆனால் மவுஸால் ஒவ்வொரு மெனுவாகத் தேர்ந்தெடுத்து செயலாற்றுகையில் தான் இவ்வளவு வேலை பார்க்க வேண்டுமா என்று தோன்றுகிறது. இதற்கான சில கீகளை அழுத்தினால் போதும்; இந்த கீகள் மூலம் இந்த பணியை மேற்கொள்ளலாம். இதற்கு முதலில் எந்த செல், ரோ, காலம் மறைக்க வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்குக் கூட மவுஸ் பயன்படுத்த வேண்டாம். ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு ஆரோ கீகளை அழுத்தினால் போதும். தேர்ந்தெடுத்த பின்னர் கீழ்க்காணும் வழிகளில் கீகளைப் பயன்படுத் துங்கள்.
Ctrl + 0 (zero): அழுத்தினால் நெட்டு வரிசை மறைக்கப்படும்.
Ctrl + 9: அழுத்தினால் படுக்கை வரிசை மறைக்கப்படும்.
அடுத்து மறைக்கப்பட்ட வரிசைகளை மீண்டும் காட்ட என்ன செய்யலாம்? மறைக்கப்பட்ட செல்களை அடுத்து இருபுறமும் உள்ள செல்களைத் தேர்ந்தெடுங்கள். பின்னர்
Ctrl + Shift + ): கீகளை அழுத்தினால் தேர்ந்தெடுத்த இரு செல்களுக்கிடையே உள்ள மறைக்கப்பட்ட நெட்டு வரிசை காட்டப்படும்.
Ctrl + Shift + (: கீகளை அழுத்தினால் தேர்ந்தெடுத்த இரு செல்களுக்கிடையே உள்ள மறைக்கப்பட்ட படுக்கை வரிசை காட்டப்படும்.
எப்படி! மவுஸ் இல்லாமல் கீ போர்டு வழியாகவே இந்த மறைக்கும் மற்றும் காட்டும் வேலை நடைபெற்றுவிட்டதா!

No comments: