Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Monday, August 10, 2015

அல்சருக்கு இருக்கு அருமையான மருந்து


அல்சர் அல்லது வயிற்றுப் புண்ணை, தொடர் சிகிச்சைகளின் மூலம் குணப்படுத்தலாம். சில சமயங்களில் அல்சர்கள் வயிறு/சிறுகுடல் சுவர்களை ஊடுருவி உட்சென்று கணையம், கல்லீரல் போன்ற உறுப்புகளை பாதிக்கும். இதனால் தீவிரமான வலி ஏற்படும்.
அல்சர்கள் வலியில்லாவிட்டாலும், உதிரப்போக்கை உண்டாக்கும். ரத்த வாந்தி அல்லது கருநிற மலம் வெளியேறும். அல்சரை சுற்றியுள்ள திசுக்கள் வீங்கி, வயிறு சிறுகுடல் பாதையை அடைக்கும். சாப்பிட்டவுடன், வயிறு மிகவும் கனமாகவும், உப்புசமாகவும் இருப்பது, இந்த மாதிரி அடைப்பின் அறிகுறி.

சிகிச்சை: குளிர்ந்த பால் குடிப்பது வலியைக் குறைக்கும். வயிற்றெரிச்சலை போக்கும். உணவில் நெய் சேர்த்துக் கொள்ளவும். நோயாளிக்கு நெய் ஜீரணமாகாவிட்டால் வெந்நீருடன் சேர்த்து கொடுக்கவும். 2-3 வாழைப்பழங்களை பாலுடன் கொடுத்தால் நல்லது. வாழைப்பழம் அதிக அமிலத்தை சரிப்படுத்தும். மஞ்சள் வாழைப்பழத்தை விட பச்சை வாழைப்பழம் சிறந்தது. நெல்லிக்காய் சாறை சர்க்கரையுடன் சேர்த்து குடித்தால் பலனளிக்கும்.
வில்வ இலைகள்/பழங்களை சேர்த்து கொண்டால் வயிற்றுப்புண்கள் குணமாகும். பாதாம் பால் (தோலுரிக்கப்பட்ட பாதாம் பருப்புகளால் செய்வது) அல்சருக்கு நல்லது. உடைத்த அரிசியை, ஒரு பாகத்திற்கு 14 பாகம் தண்ணீர் சேர்த்து, கஞ்சி தயாரிக்கவும். இது அல்சருக்கு நல்லது. பருப்பு, அரிசி தண்ணீர் சேர்த்து பொங்கல் போல் தயாரித்து உட்கொள்ளலாம். மாதுளம் பழச்சாறு அல்சருக்கு நல்லது. திரிபாலா சூரணம் (1 தேக்கரண்டி) நெய் ஒரு தேக்கரண்டி மற்றும் தேன் 1/2 தேக்கரண்டி கலந்து எடுத்துக் கொண்டால் அல்சர் குணமாகும்.
கொத்தமல்லி விதைகளை பொடியாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாகத்திற்கு 6 பாகம் தண்ணீர் என்ற அளவில் கலந்து கொதிக்க வைக்கவும். இரவு ஊற வைத்து மறுநாள் காலையில், இந்த நீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும். அல்சர் இருந்தால் உளுந்து, கொள்ளு, மதுபானங்கள், சிகரெட், கத்திரிக்காய், மசாலா ஆகியவற்றை தவிர்க்கவும். உண்ணும் போது கோபம், தாபம், வருத்தங்களை தவிர்க்கவும்.
ஒரே வேளையாக அதிகம் உண்பதை தவிர்த்து, இடைவெளி விட்டு சிறிதாக உட்கொள்ளவும். மிளகு, உளுந்து, கொள்ளு, ஆல்கஹால், கத்திரிக்காய், புளிப்பான பண்டங்கள், எண்ணெய், காரம் செறிந்த உணவுகளை தவிர்க்கவும். பலமான, வலுவான வயிறு குடல் சுவர்களை அமிலம் எப்படி பாதிக்கும்? வயிற்றின் சுவர், கவசம் போன்ற புறத்தோலால் (Epithelium) மூடப்பட்டுள்ளது. டியோடினம் (சிறுகுடலின் முதல் பகுதி) காரத்தன்மை உள்ள சளி சுரப்புகளால் பாதுகாக்கப்படுகிறது.
டியோடினத்தில் அமைந்துள்ள பிரன்னர் (Brunner) சுரப்பிகள், இந்த சளிப்பொருளை சுரக்கின்றன. இருந்தும் இந்த கவசங்கள் சிதைக்கப்பட்டு, புண்கள் உண்டாகும் காரணங்களை அறுதியிட்டு சொல்ல முடியவில்லை என்கின்றனர் டாக்டர்கள்.


Thank You

No comments: