
செய்முறை:
1. பாதங்கள் இரண்டும், இரண்டு அடி தள்ளி இருப்பது போல நேராக நிற்கவும்.
2. கைகள் பக்கவாட்டில் தொங்க விடப்பட்டிருக்க வேண்டும்.
3. தலைக்கு மேலே இரண்டு கைகளையும் உயர்த்தி, இரண்டையும் இணைத்துக் கொள்ளவும்.
4. விரல்களை இணைத்துக் கொள்ளவும்.
5. இரண்டு கைகளும் காதுகளைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
6. இப்போது உடலை வலது பக்கம் சாய்த்து சில வினாடிகள் நிற்கவும்.
7. பின் நேராக நிற்கவும்.
8. அதேபோல், இடது பக்கம் சாய்த்து, சில வினாடிகள் கழித்து நேராக நிற்கவும்.
சுவாசம்:
இயல்பான சுவாசம்
நேர அளவு:
10 – 20 வினாடிகள்.
2 முதல் 3 சுற்று செய்யலாம்.
பயன்கள்:
இறுக்கமான முதுகுப்புறம் உள்ளவர்களுக்கு பயன்படும். ஒரு புறம் இறுகி, மறுபுறம் வயிறு தளர்வதால், வயிற்றுப்பகுதி தசைகள், தொய்வு ஏற்படாமல் ஆரோக்கியமாக இருக்கும்.
Thank You
No comments:
Post a Comment