Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Thursday, January 2, 2014

எக்ஸெல் சமக்குறியீடு மாற்றம்!



எக்ஸெல் பழைய பதிப்பிலிருந்து புதிய எக்ஸெல் 2007க்கு மாறியுள்ளீர்களா? அப்படியானால், பார்முலா பாரின் அருகே உள்ள டூல்ஸ் பிரிவில் சிறிய மாற்றத்தினைக் கவனிக்கலாம். உங்களுடைய பழைய பதிப்பில், பார்முலா பாருக்கு அடுத்தபடியாக ஒரு சமக்குறி அடையாளம்(equal sign) இருந்திருக்கும். நீங்களாக அதனை அமைக்க வேண்டியதில்லை. இதில் கிளிக் செய்தால், ஒரு செல்லில் என்ன இருந்தாலும், அதனை நீக்காமல், அதன் முன்னதாக ஒரு சமக்குறி அடையாளத்தினை அமைக்கும்.
இந்த சமக்குறி அடையாளம், எக்ஸெல் 2007ல் இருக்காது. இது எக்ஸெல் 2002 பதிப்பில் இருந்தே நீக்கப்பட்டது. நீங்கள் விரும்பினால், குயிக் அக்செஸ் டூல்பாரில் ஒரு சமக்குறியினை இணைக்கலாம். கீழ்க்கண்ட செயல்முறையினை மேற்கொள்ளவும். 
1. ஆபீஸ் பட்டனை கிளிக் செய்து, பின்னர் Excel Options என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது எக்ஸெல் Excel Options டயலாக் பாக்ஸினைக் காட்டும். 
2. இந்த டயலாக் பாக்ஸின் இடது புறம் உள்ள Customize என்னும் ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். 
3. கீழ்விரி மெனுவில், Choose Commands என்பதனைப் பயன்படுத்தி, Commands Not In The Ribbon என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். 
4. இங்கு கிடைக்கும் Commands பட்டியலில், சமக்குறி அடையாளத்தினை (equal sign)க் காணவும். 
5. அடுத்து Add என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது இந்த டூல் டயலாக் பாக்ஸின் வலது பக்கத்திற்கு நகர்த்தப்பட்டிருக்கும். 
6. பின்னர், ஓகே கிளிக் செய்து Excel Options dialog box மூடவும். இப்போது இந்த டூல் Quick Access Toolbarல் இருக்கும். 
இந்த சமக்குறி டூலினை பார்முலா பாரின் தொடக்கத்தில் அமைத்திடப் பயன்படுத்தலாம். இது முந்தைய பதிப்பில் பயன்பட்டது போல செயல்படாது. ஒரு செல்லில் இருக்கும் டேட்டாவின் முன் அமையாது. பார்முலா பாரை அடுத்து வலதுபுறமும் அமைக்க முடியாது.

No comments: