Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Saturday, January 4, 2014

வேர்டில் சிறப்புக் குறியீடுகளை இணைத்தல்!

டாகுமெண்ட்கள் தயாரிப்பில், குறிப்பிட்ட சில பொருள் குறித்தவற்றில், நாம் சிறப்புக்குறியீடுகளைப் பயன்படுத்த வேண்டியதிருக்கும். எடுத்துக்காட்டாக இவற்றைக் கூறலாம் -(£ © ® ™). இவற்றை, எழுத்துருக்களின் பட்டியலில், கீ போர்ட் மூலம் அமைக்க முடியாது. எனவே, வேர்ட் இவற்றைத் தனியே தன் டூல்ஸ்களுடன் இணைத்துத் தருகிறது. இவற்றிலிருந்து நாம் நமக்குத் தேவையான குறியீடுகளைக் காப்பி செய்து, டாகுமெண்ட்களில் இணைத்துக் கொள்ள வேண்டும். அவற்றை எப்படிப் பெறலாம் என்று இங்கு பார்க்கலாம்.
1. டாகுமெண்ட்டில் எங்கு இந்த சிறப்புக் குறியீட்டினை இணைக்க வேண்டுமோ, அங்கு கர்சரைக் கொண்டு சென்று நிறுத்தவும். 
2. அடுத்து ரிப்பனில் Insert டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். 
3. அடுத்ததாக Symbols குரூப்பில், Symbol என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் நாம் பயன்படுத்துவதற்கான பல குறியீடுகளைக் காட்டும். 
4. இதில், உங்களுக்குத் தேவையான குறியீடு இருப்பின் அதனை கிளிக் செய்தால், அது கர்சர் இருக்கும் இடத்தில் அமர்ந்துவிடும். இல்லையேல், கீழே காட்டியுள்ளபடி தொடரவும். 
5. நீங்கள் எதிர்பார்க்கும் குறியீடு இல்லை எனில், கீழாக உள்ள More Symbols என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு வேர்ட், குறியீடுகளுக்கான டயலாக் பாக்ஸினைக் காட்டும். இதில் நீங்கள் விரும்பும் குறியீட்டின் அமைப்பு உங்களுக்குப் பிடிக்கவில்லை எனில், பாண்ட் வகையை மாற்றி அமைத்து, பிடித்தமான குறியீட்டினைப் பெறலாம். 
6. இதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, Insert என்பதில் கிளிக் செய்தால், கர்சர் உள்ள இடத்தில், அந்த குறியீடு அமைக்கப்படும். அல்லது அதில் இருமுறை கிளிக் செய்தாலும், குறிப்பிட்ட இடத்தில் அது அமையும். தொடர்ந்து பல குறியீடுகள், அடுத்தடுத்து தேவை எனில், ஒவ்வொன்றாக தேர்ந்தெடுத்து கிளிக் செய்து அமைக்கலாம். 
பின்னர், ஓகே கிளிக் செய்து, இந்த குறியீடுகள் அடங்கிய டயலாக் பாக்ஸை மூடிவிட வேண்டும்.

No comments: