Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Wednesday, January 8, 2014

நுகர்வோர் புகார்: விரைவில் கட்டணமில்லா தொலைபேசி வசதி


சேவைக் குறைபாடுகள் குறித்து மாநில நுகர்வோர் சேவை மையத்தில் பொதுமக்கள் புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
கல்வி, மருத்துவம், வங்கி, கட்டுமானம், வணிகம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில், தாங்கள் அன்றாடம் சந்திக்கும் சேவைக் குறைபாடுகள் குறித்து
நுகர்வோர், உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின்கீழ் இயங்கும் மாநில நுகர்வோர் சேவை மையத்தில் புகார் அளிக்கும் வசதி நடைமுறையில் உள்ளது.
இதற்காக, 94454 64748, 72999 98002, 86800 18002, 72000 18001 ஆகிய அலைபேசி எண்கள் மற்றும் 044 -2859 2828 எனும் தொலைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. இத் தொலைபேசி எண்களை தொடர்புக்கொண்டு நுகர்வோர் புகார் அளித்தாலோ, குறுந்தகவல் மூலம் தங்கள் புகாரை அனுப்பினாலோ, அதற்குரிய கட்டணத்தை தொலைபேசி நிறுவனங்கள் தற்போது வசூலித்து வருகின்றன. இதை தவிர்க்கும் வகையில், மாநில நுகர்வோர் சேவை மையத்தில் புகார் அளிக்க, கட்டணமில்லா தொலைபேசி வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ள இந்த கட்டணமில்லா தொலைபேசி வசதியில், தமிழகத்துக்கு 1937 என்ற தொலைபேசி எண் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என, உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments: